MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • சந்திரகலாவின் பிளானை சுக்குநூறாக நொறுக்கிய கார்த்திக் – சாமுண்டீஸ்வரி கிரேட் எஸ்கேப்: கார்த்திகை தீபம் ஹைலைட்ஸ்!

சந்திரகலாவின் பிளானை சுக்குநூறாக நொறுக்கிய கார்த்திக் – சாமுண்டீஸ்வரி கிரேட் எஸ்கேப்: கார்த்திகை தீபம் ஹைலைட்ஸ்!

Karthik Saves Chamundeswari in Kathigai Deepam Serial : கார்த்திகை தீபம் சீரியலில் 1084ஆவது எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றியும், சாமுண்டீஸ்வரி எப்படி காப்பாற்றப்பட்டார் என்பது பற்றியும் முழுவதுமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Jan 06 2026, 04:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Karthigai Deepam Serial Today 1084th Episode
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam Serial Today 1084th Episode

கார்த்திகை தீபம் சீரியலானது ரசிகர்களின் விமர்சனங்களுக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு முறையும் புரோமோ வீடியோ வெளியாகும் போது ரசிகர்கள் தங்களது விருப்பங்களை கமெண்டுகளாக பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை இந்த சீரியலை நிறுத்துங்க, கார்த்திக் பாவம், எதுக்கு வில்லிக்கு இப்படி முக்கியத்துவம் கொடுக்குறீங்க அப்படி இப்படி என்று விமர்சனம் செய்தனர். ஆனால் இப்போது மீண்டும் கார்த்திக் தனது மாமியார் சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வந்ததைத் தொடர்ந்து சீரியலில் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.

25
Zee Tamil Karthigai Deepam Latest Twist
Image Credit : Zee Tamil You Tube

Zee Tamil Karthigai Deepam Latest Twist

அதற்கேற்ப கார்த்திக்கின் ரிவெஞ்ச் ஆரம்பமாகியிருக்கிறது. சீரியலும் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் வழக்கம் போல் சந்திரகலா தனது அக்கா சாமுண்டீஸ்வரியை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் சிக்க வைக்க ரூ.10 லட்சம் பணத்தை வீட்டில் வைத்தார். அதை ரேவதியின் தோழிகள் மூலமாக வீட்டிற்கு கொடுத்துவிட்டார். அவர்களும் அந்த பணத்தை எல்லோரும் பார்ப்பது போன்று கட்டில் மெத்தையிலேயே வைத்துவிட்டனர். காளியம்மாவும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு போன் போட்டு சாமுண்டீஸ்வரி வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் பணத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டார் என்று புகார் கூறினர்.

35
Chandrakala Evil Plan Exposed in Karthigai Deepam
Image Credit : Zee Tamil You Tube

Chandrakala Evil Plan Exposed in Karthigai Deepam

இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வந்தனர். ஆனால், அதற்குள்ளாக கார்த்திக் தனது பிரியண்டான ஐடியாவின் மூலமாக புத்தாண்டிற்கு கிராம மக்களுக்கு சாமுண்டிஸ்வரி தலா ரூ.10 ஆயிரம் தருவதாக கூறியிருக்கிறார். நீங்கள் அனைவரும் வீட்டிற்கு வாருங்கள் என்று சொல்லி அனைவரையும் வர வழைத்துள்ளார். கிராம மக்களை பார்த்து அதிர்ச்சியடைந்த சாமுண்டீஸ்வரிக்கு கார்த்திக் ஷாக் மேல் ஷாக் கொடுத்தார். அதாவது, பணம் இருக்கிறது. முதலில் நீங்கள் அதை கொடுங்கள். அதன் பிறகு என்ன நடந்தது என்று நான் சொல்கிறே என்று சொல்லி சாமுண்டீஸ்வரி தலா ரூ.10 ஆயிரம் கொடுத்தார்.

45
Karthik Saves Chamundeswari Highlights
Image Credit : Zee Tamil You Tube

Karthik Saves Chamundeswari Highlights

கடைசியாக என்ன நடந்தது என்று சொல்ல சந்திரகலாவிற்கு பயம் கண்ணை கட்டியது. இது முழுக்க முழுக்க சிவனாண்டியோட பணம். உங்களை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் சிக்க வைக்க தான் வீட்டிற்குள் பணம் வைத்திருக்கிறார்கள். நேரடியாக வீட்டிற்கு வரவில்லை. ஒரு ஆள் மூலமாத்தான் கொடுத்து விட்டார்கள். அவர் தான் உங்களது தங்கை சின்ன அத்தை சந்திரகலா என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். எப்படி கார்த்திக்கை வீட்டை விட்டு சந்திரகலா துரத்தினாரோ, அதே போன்று கார்த்திக்கும் சந்திரகலாவை வீட்டை விட்டு துரத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சாட்சியாக இப்போது சந்திரகலாவிற்கு எதிராக ஓவ்வொடு காட்சியாக ஒளிபரப்பாகி வருகிறது.

55
Karthigai Deepam Serial Today Episode Update
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam Serial Today Episode Update

முதலில் கோயில் நகையை திருடியது, அதன் பிறகு சிவனாண்டி கார்த்திக்கிடம் அடி வாங்கியது என்று இருந்த நிலையில் இப்போது ரூ.10 லட்சம் கொடுத்துவிட்டது யார் என்றும் தெரிந்துவிட்டது. அடுத்து பொங்கலுக்கு சந்திரகலா மாட்ட இருக்கிறார். ஆம், சிவனாண்டி வீட்டில் பொங்கல் வைக்க சென்று கடைசியில் சாமுண்டீஸ்வரியிடம் வசமாக சிக்கியுள்ளார். இது தொடர்பான எபிசோடு இனி வரும் நாட்களில் ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
மருமகன் வீட்டில் டேரா போட்ட மாமியார் காந்திமதி: இது சரியா? தவறா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Recommended image2
வசமாக சிக்கிய சந்திரகலா! கார்த்திக் கையில் கிடைத்த அந்த வீடியோ ஆதாரம் - இனி தப்பிக்கவே முடியாது:Karthigai Deepam Serial Update!
Recommended image3
கனவு நனவானது! ஆகாயத்தில் பறக்கும் மகன் - நெகிழ்ச்சியில் எதிர்நீச்சல் நடிகை! குவியும் வாழ்த்துக்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved