- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கார்த்திக்கை மாட்டிவிட சந்திரகலா பிளான் – மாமியாரிடம் உண்மையை சொல்லும் மருமகன் – கார்த்திகை தீபம் 2
கார்த்திக்கை மாட்டிவிட சந்திரகலா பிளான் – மாமியாரிடம் உண்மையை சொல்லும் மருமகன் – கார்த்திகை தீபம் 2
Karthik Raja plan to Tells Truth : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்திக் தன்னைப் பற்றிய உண்மையை தனது மாமியாரிடம் சொல்லப் போவதாக முடிவெடுத்துள்ளார்.

கார்த்திக்கை மாட்டிவிட சந்திரகலா பிளான் – மாமியாரிடம் உண்மையை சொல்லும் மருமகன் – கார்த்திகை தீபம் 2
Karthik Raja plan to Tells Truth : கார்த்திகை தீபம் 2 சீரியலில் தனது கணவர் சிவனாண்டி மற்றும் மாமா முறையான முத்துவேலுவை கார்த்திக் புடவை துவைக்க வைத்தது மட்டுமின்றி வீட்டு பத்து பாத்திரமும் தேய்க்க வைத்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த சந்திரகலா எப்படியாவது கார்த்திக்கை தனது அக்காவிடம் மாட்டுவிட வேண்டும் என்பதற்காக திட்டம் போட்டார். அதற்காக அவர் பயன்படுத்திய உத்தி தான் கோயில். கோயில் இடம் அபிராமி பெயரில் இருக்கும் நிலையில் அவர் லாரி விபத்தில் உயிரிழந்துவிட்டார்.
ரேவதி, கார்த்திக், மாமியாரிடம் உண்மையை சொல்ல பிளான் போட்ட கார்த்திக்
இதையடுத்து அவருக்கு பிறகு அந்த இடம் அவரது வாரிசுகளான அருண், ஆனந்த மற்றும் கார்த்திக் ஆகியோரது பெயருக்கு மாற்றப்பட வேண்டும். அப்படியில்லை என்றால் அந்த இடத்தை அரசு கையகப்படுத்திக் கொள்ளும் என்று கோயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இது குறித்து பரமேஸ்வரி பாட்டி தனது பேரனிடம் சொன்ன போது கார்த்திக்கும் இது குறித்து அருணிடம் தெரியப்படுத்தி பத்திரப்பதிவுக்கு வரும்படி கூறிவிட்டார்.
கார்த்திகை தீபம் 2 சீரியல்
மேலும், கார்த்திக் தனது மாமா மற்றும் மயில்வாகனத்திடம் தன்னைப் பற்றிய உண்மையை தனது மாமியார் அத்தையிடம் சொல்லப் போவதாக கூறியுள்ளார். இதற்கு மயில்வாகனம் மற்றும் ராஜசேகரன் இருவரும் மறுப்பு தெரிவிக்க இல்லை இல்லை எப்படியாவது உண்மையை சொல்லிட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்கிறார். அவரது முடிவுபடி உண்மையை சொன்னாரா இல்லையா என்பது குறித்து இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.
கார்த்திகை தீபம் சீரியல்
இதற்கிடையில் துர்காவிற்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளயின் போலி அம்மாவும், அப்பாவும் தனது மாமியாரை ஏமாற்றுகிறார்கள் என்பதை கார்த்திக் கண்டுபிடித்துவிட்டார். மேலும், அவர்களுடன் சந்திரகலா தனியாக பேசுவதையும் வேடிக்கை பார்த்துள்ளார். கார்த்திக் பார்த்தை சந்திரகலா பார்த்து ஷாக்காகிவிட்டார். இது குறித்து மாமியாரிடம் தெரியப்படுத்துவாரா இல்லை மயில்வாகனத்திடம் கூறுவாரா என்பது குறித்து இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.