- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Karthigai Deepam: திருமணத்தை நிறுத்த பரமேஸ்வரி பாட்டியோடு வந்த இருவர்? கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: திருமணத்தை நிறுத்த பரமேஸ்வரி பாட்டியோடு வந்த இருவர்? கார்த்திகை தீபம் அப்டேட்!
ரேவதியின் திருமணம், மகேஷுடன் நடக்குமா அல்ல கார்த்திக்கோடு நடக்குமா? என யூகிக்க முடியாத கதைக்களத்தோடு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், தற்போது 'கார்த்திகை தீபம்' குறித்து இன்றைய அப்டேட் வெளியாகி உள்ளது.

கார்த்திகை தீபம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் 'கார்த்திகை தீபம்'. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி செய்வதை கவனித்த சந்திரகலா வேறு ஏதோ ஒரு முடிவில் தான் அவள் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட நிலையில், இன்று நடக்க போவது பற்றி பார்க்கலாம்.
மகேஷ் பற்றிய உண்மை
அதாவது சந்திரகலா, இதுகுறித்து சிவனாண்டியிடம் சொல்கிறாள். கார்த்திக், ராஜராஜன் மற்றும் மயில்வாகனம் மூவரும், மகேஷ் பற்றிய உண்மையை டாக்டரிடம் சொல்லி கூற வைத்த பின்னரும், சாமுண்டீஸ்வரி ஏன் இந்த திருமணத்தை நடத்த நினைக்கிறாள் என்பது போல் ஒருவருக்கொருவர் பேசி வருகிறார்கள்.
பரமேஸ்வரி பாட்டி
இதை தொடர்ந்து, மயில்வாகனம்... ராஜராஜனை அழைத்து மாமா இதை நாம இப்படியே விட்டுவிட கூடாது. உண்மை வெளியில வந்தே ஆகணும், நீங்க பாட்டிக்கு போன் போட்டு வரச்சொல்லுங்க என கூற, பரமேஸ்வரி பாட்டியும் மண்டபத்திற்கு வருகிறார். ஆனால் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் இங்க தான் இருக்கு.
முழுக்க முழுக்க உன்னுடைய தப்பு
பரமேஸ்வரி பாட்டி தனியாக வராமல், கூடவே கார்த்தியின் அண்ணன்களான அருண் மற்றும் ஆனந்தோடு வந்து அதிர்ச்சி கொடுக்கிறார். இன்னொரு புறம், "ரேவதி ரூமில், ரோகிணி நடந்த விஷயங்களை நினைத்து வருத்தமாக பேசிக்கொண்டிருக்க, இதை கவனித்த ரேவதி இது மாமா தப்பு இல்ல. முழுக்க முழுக்க உன்னுடைய தப்புதான். அம்மா பேச்சை கேட்டுகிட்டு நீ தான் மாமா கூட சேர்ந்து வாழாம இருக்கனு சொல்லி புரியவைக்கிறாள்.
மனம் மாறிய ரோகிணி
நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ ஆரம்பிச்சா தான் குழந்தை பிறக்கும் என்று, ரேவதி சொல்வதை கேட்டு தன்மீது உள்ள தவறை புரிந்து கொண்ட ரோகிணி மனதளவில் மயில்வாகனத்துடன் சேர்ந்து வாழும் முடிவுக்கு வருகிறாள். மயில்வாகனத்தை சந்தித்து, நாம் இரண்டு பேரும் ஹனி மூன் போகலாமா என்று பேச இருவருக்கும் இடையே ஒரு கியூட் ரொமான்ஸ் பொங்கி வழிகிறது.
இப்படியான நிலையில், ரேவதியின் திருமணத்தை பாட்டி நிறுத்துவாரா? அல்லது சாமுண்டீஸ்வரி நிறுத்த போகிறாரா? கார்த்தி இந்த திருமணத்திற்கு எப்படி சம்மதிப்பார் என்பதை அடுத்தடுத்த எபிசோட் மூலம் தெரிந்து கொள்வோம்.