MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • நினைவாற்றலை இழந்த ரேவதி! அதிர்ச்சியில் கார்த்திக்.. குஷியான சந்திரகலா! கார்த்திகை தீபம் சீரியலில் அதிரடி திருப்பம்!

நினைவாற்றலை இழந்த ரேவதி! அதிர்ச்சியில் கார்த்திக்.. குஷியான சந்திரகலா! கார்த்திகை தீபம் சீரியலில் அதிரடி திருப்பம்!

Karthigai Deepam Serial 1164th Episode Highlights: கார்த்திகை தீபம் சீரியலில் கண் விழித்த ரேவதிக்கு கார்த்திக் யார் என்றே தெரியவில்லை. இது சந்திரகலாவிற்கு மகிழ்ச்சியை கொடுத்த நிலையில் இதை வைத்தே இருவரையும் பிரிக்க முடிவு செய்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 31 2026, 02:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Karthigai Deepam Serial Today 1164th Episode Highlights
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam Serial Today 1164th Episode Highlights

கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய 1164ஆவது எபிசோடில் என்ன நடந்தது என்று இந்த பதிவில் பார்க்கலாம். கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் தங்கள் முதல் திருமண நாளை கொண்டாடிய நிலையில் கணவருக்கு திருமண நாள் பரிசாக பைக் வாங்க சென்ற இடத்தில் ரேவதிக்கு விபத்து ஏற்பட்டு தலையில் பலமாக அடிபட்டது. இதைதொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

27
Karthik Shock Movements
Image Credit : Zee Tamil You Tube

Karthik Shock Movements

அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவரது உயிருக்கு ஆபத்து என்று கூறினர். மேஜர் ஆபரேஷன் என்பதால், கிட்டத்தட்ட 8 மணி நேர ரேவதிக்கு ஆபரேஷன் நடந்தது. என்னதான் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தாலும் இப்போது உள்ள சூழலில் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றனர். மேலும் தலையில் அடிப்பட்ட நிலையில் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டதால் மூளைப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அவரது ஞாபகசக்தியை பாதிக்கும். ஆனால், எந்தளவிற்கு பாதிப்பு என்பதை அவர் கண் விழித்த பிறகு தான் தெரியவரும் என்று கூறிவிட்டு சென்றனர்.

37
Revathi in Critical Condition
Image Credit : Zee Tamil You Tube

Revathi in Critical Condition

பின்னர் ரேவதி கண் விழித்த பிறகு எல்லோரும் பார்க்க சென்றனர். கார்த்திக்கைத் தவிர மற்ற அனைவரையும் ரேவதியின் நினைவில் இருந்தது. ஒருபுறம் ரேவதி உயிர்பிழைத்தது வருத்தமாக இருந்தாலும் மறுபுறம் எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஏனென்றால், ரேவதிக்கு கார்த்திக் யார் என்றே தெரியவில்லை. அதாவது சமீபத்தில் கிட்டத்தட்ட 2, 3 ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் எதுவும் ரேவதியின் நினைவில் இல்லை. அப்போது தான் ரேவதி மற்றும் கார்த்திக்கிற்கு திருமணம் நடந்துள்ளது.

47
Revathi and Karthik Marriage Anniversary
Image Credit : Zee Tamil You Tube

Revathi and Karthik Marriage Anniversary

ஏற்கனவே இதைப் பற்றி சித்தரும் கூறியிருந்தார். இதுவரையில் நடந்ததும், இனிமேல் நடப்பதும் எல்லாமே இறைவனின் சித்தம். எப்போதும் ரேவதியை விட்டு பிரிய கூடாது. அவளை உன் கண் பார்வையில் வைத்துக் கொள்ள வேண்டும். உனக்கு என்ன அவமானம் நேர்ந்தாலும் ரேவதியை விட்டு பிரியாமல் இருக்க வேண்டும் என்றார் சித்தர். சித்தர் கூறியதைப் போன்று இப்போது ரேவதிக்கு பழைய நினைவுகள் எதுவும் ஞாபகத்தில் இல்லை. கார்த்திக் என்ற ஒருவர் தனது வாழ்க்கையில் வந்தார் என்பதற்கான சிறிய அடையாளம் கூட ரேவதியின் நினைவில் இல்லை. கார்த்திக்கை பற்றி கேட்காதது குடும்பத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலாவைத் தவிர மற்ற அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனைவரும் கார்த்திக்கிற்கு ஆறுதலாக பேசினர். ஆனால், இப்படியெல்லாம் நடக்கும் என்பது சித்தரின் மூலமாக ஏற்கனவே கார்த்திக்கிற்கு தெரியும்.

57
Karthigai Deepam Serial Highlights
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam Serial Highlights

இந்த நிலையில் தான் கடைசியாக ரேவதியின் குடும்பத்தினரை சந்தித்த மருத்துவர், நான் சொன்ன மாதிரி தான் அவருக்கு சுய நினைவு இல்லை. கடைசியாக 2,3 ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் மட்டும் அவரது நினைவில் இல்லை என்றார். மூளையின் அமைப்பு ரொம்பவே சிக்கலானது. அதில், இப்படி விபத்து ஏற்படுவதால் இந்த மாதிரி நடக்கும்.

67
Revathi Forgets Marriage Life
Image Credit : Zee Tamil You Tube

Revathi Forgets Marriage Life

இந்த மெமரி லாஸிற்கு கொஞ்சம் கொஞ்சமாக தான் டிரீட்மெண்ட் செய்ய முடியும். அது எவ்வளவு நாளில் சரியாகும் என்று சொல்ல முடியாது. அவருக்கு பழைய நினைவுகள் தானாக வர வேண்டும். நாமாக கட்டாயப்படுத்தினால் அதில் அவருக்கு குழப்பம் ஏற்பட்டு அவரது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று ௬கூறினார்.

77
Revathi Memory Loss
Image Credit : Zee Tamil You Tube

Revathi Memory Loss

இதனால், இனி வரும் எபிசோடுகள் கார்த்திக்கிற்கு சவால் நிறைந்ததாக இருக்கும். மேலும் கார்த்திக்கை பழி வாங்க சந்திரகலா மற்றும் சாமுண்டீஸ்வரி புதிய பிளான் போடலாம் என்று தெரிகிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கு முன்னதாக இது போன்ற காட்சிகள் ஒரு சில சீரியல்களில் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தொலைக்காட்சி
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராவணனின் அடாவடி ஆரம்பம்... ஈஸ்வரி மீது பாசத்தைக் கொட்டும் ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
லஞ்சம் கொடுத்து சிக்கிய விஜயா... ரோகிணிக்கு வக்காளத்து வாங்கும் அதிகாரி - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Recommended image3
சிங்கப்பெண்ணே ஆனந்தியின் அதிரடி மாற்றம்: துளசியின் முகத்திரையைக் கிழித்த 'சிங்கப்பெண்'! Watch Video
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved