- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஃபர்ஸ்ட் நைட்டுக்கான ஏற்பாடுகளையும் செய்யும் ரேவதி – நமக்கு எப்போது ஃபர்ஸ்ட் நைட்? கார்த்திகை தீபம் 2 அப்டேட்
ஃபர்ஸ்ட் நைட்டுக்கான ஏற்பாடுகளையும் செய்யும் ரேவதி – நமக்கு எப்போது ஃபர்ஸ்ட் நைட்? கார்த்திகை தீபம் 2 அப்டேட்
Revathi Doing First Night Arragements : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

ஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் கார்த்திகை தீபம் 2 சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் கடந்த வாரம் துர்காவின் திருமணம் நடைபெற்றது. கான்ஸ்டபிள் சுடப்பட்டது, முத்துவேலுவின் தில்லாலங்கடி வேலை, பரமேஸ்வரியை போலீஸ் அழைத்து சென்றது என்று பல காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நேற்றைய எபிசோடில் கான்ஸ்டபிளை சுட்டது மாயா என்பது தெரியவர பரமேஸ்வரியை போலீசார் விடுதலை செய்தனர்.
இதைப் பற்றி அறிந்து கொண்ட சாமுண்டீஸ்வரி இனி போலீஸ் காவலில் இருக்கும் மாயாவை சந்தித்து பேச சென்றார். அப்போது மாயா, உண்மையில் கார்த்திக் தான் ராஜா சேதுபதியின் பேரன் என்பதை வெளிப்படுத்துகிறார். ஆனால், சாமுண்டீஸ்வரி அதையெல்லாம் நம்பவே இல்லை. இது ஒரு புறம் இருக்க ஜெயிலிலிருந்து வெளியில் வந்த காளியம்மாள் கார்த்திக்கை பழி தீர்க்க திட்டம் போடுகிறார்.
இந்த நிலையில் தான் இப்போது சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலாவைத் தவிர மற்ற அனைவரும் பாட்டி வீட்டில் இருக்கும் நிலையில் நவீன் மற்றும் துர்காவிற்கு ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடுகள் நடக்கிறது. ரேவதி தான் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். கட்டில் அலங்காரம், பூ என்று எல்லாவற்றையும் ரேவதி செய்து கொண்டிருக்க, அங்கு வந்த கார்த்திக்கிடம் ஃபர்ஸ்ட் நைட் பீலிங்ஸ் பற்றி கேட்டு வெக்கப்பட்டார்.
மேலும் ஐ லவ் யூ என்று தனது காதலையும் வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ காட்சிகளை ஜீ தமிழ் நிறுவனம் புரோமோவாக வெளியிட்டுள்ளது. அதில் தான் ரேவதி மற்றும் கார்த்திக் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.