- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கார்த்திகை தீபம் 2 சீரியலின் காமெடி பீஸ் – எந்த கெட்டப் போட்டாலும் அப்படியே பொருந்தும்!
கார்த்திகை தீபம் 2 சீரியலின் காமெடி பீஸ் – எந்த கெட்டப் போட்டாலும் அப்படியே பொருந்தும்!
Karthigai Deepam 2 Serial Mayilvaganam Comedy Piece : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு காமெடி பீஸாக எல்லா ரோலிலும் நடித்து வருகிறார். அவரைப் பற்றி பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் 2 சீரியல்
ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம் 2. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதனுடைய தொடர்ச்சியாக 2ஆவது பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் பணக்காரனாக நடித்து வாழ்ந்த கார்த்திக் இந்த சீரியலில் மாமியார் வீட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தனது பாட்டியின் குடும்பமும், அத்தையின் குடும்பமும் ஒன்று சேர டிரைவராக நடித்து வருகிறார்.
கார்த்திகை தீபம் 2 சீரியல் அப்டேட்
தன்னுடைய அத்தை சாமுண்டீஸ்வரி மற்றும் அவரது மகள்களான துர்கா, சுவாதி மற்றும் ரோகிணி ஆகியோரைத் தவிர கார்த்திக் யார் என்ற உண்மை எல்லோருக்கும் தெரியும். அத்தையின் மூத்த மருமகனாக மயில்வாகனம் (மகேஷ்) நடித்து வருகிறார். மூத்த மகளான ரோகிணியை திருமணம் செய்து வீட்டோட மாப்பிள்ளையாக இருந்துள்ளார். இதே போன்று தான் 2ஆவது மகளான ரேவதியை கார்த்திக் திருமணம் செய்து கொண்டு வீட்டோட மாப்பிள்ளையாக இருக்கிறார்.
மயில்வாகனம் மூத்த மருமகன்
3ஆவது மகளான துர்காவை நவீன் காதலித்து திருமணம் செய்துள்ளார். கடைசி மகள் சுவாதிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கோயில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு தான் யார் என்ற உண்மையை கார்த்திக் சொல்ல இருப்பதாக கூறியிருக்கும் நிலையில் அம்மா விபத்தில் இறந்த நிலையில் முதலில் கும்பாபிஷேகம் பாதியிலேயே நின்றது. இப்போது 2ஆவது முறையக கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு முகூர்த்தக்கால் நடும் விழாவிற்கும் ஏற்பாடும் செய்யப்பட்டது.
மயில்வாகனம் புதிய கெட்டப்
ஆனால், அதற்குள்ளாக சிவனாண்டி மற்றும் முத்துவேல் இருவரும் இணைந்து அம்மன் சிலையை கடத்தி சென்று குருமூர்த்தி என்ற சிலை கடத்தல் மன்னனிடம் சிலையை விற்றுள்ளனர். இது எப்படியோ கார்த்திக்கிற்கு தெரியவர குருமூர்த்தியிடம் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்தவர் போன்று வேடமணிந்து சிலையை விலைக்கு வாங்குகிறார் மயில்வாகனம். இதற்கு முன்னதாக மயில்வாகனம் கூர்கா போன்றும், சிங் போன்றும் வேடமணிந்திருக்கிறார்.
கார்த்திகை தீபம் 2 சீரியல்
இப்படி தனது கதாபாத்திரத்திற்காக எந்த எல்லைக்கும் போகும் அளவிற்கு நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார் மயில்வாகனம். ஒரு சில காட்சிகளில் தனது கதாபாத்திரம் குறித்து அவரே விமர்சனமும் செய்திருக்கிறார். இதன் மூலமாக கார்த்திகை தீபம் 2 சீரியலின் காமெடி பீஸாக மயில்வாகனம் வலம் வருகிறார். எப்படியோ சிலையை மீட்டுக் கொண்டு வரும் கார்த்திக் தனது பாட்டி குழிக்குள் இறங்காமல் தடுப்பாரா இல்லையா என்பது பற்றி நாளைய எபிசோடில் பார்க்கலாம். அதாவது சாமுண்டீஸ்வரி மீது சிலை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் உண்மையை நிரூபிக்க குழிக்குள் இறங்க வேண்டும் என்று பஞ்சாயத்தில் கூறப்பட்டது.