MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறும் ஜனனி... மன்னிப்பு கேட்பாரா கதிர்? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்

குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறும் ஜனனி... மன்னிப்பு கேட்பாரா கதிர்? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனிக்கும் கதிருக்கும் இடையே பிரச்சனை வெடித்த நிலையில், வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளார் ஜனனி. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 21 2026, 08:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியின் போனுக்கு வீடியோ அனுப்பிய ராவணன் அதை சிறிது நேரத்தில் டெலிட் செய்துவிட்டார். அந்த வீடியோவை அனுப்பியது யார் என்பது தெரியாமல் கன்பியூஸ் ஆன ஜனனி, பின்னர் மதிவதினியின் உதவியுடன் போலீஸிடம் நம்பரை கொடுத்து அதுகுறித்த விவரங்களை வாங்கி உள்ளார். அப்போது தான் அந்த நம்பர் கதிர்வேல் பெயரில் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜனனி, விறுவிறுவென வீட்டுக்கு வந்து கதிர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

26
ஜனனியை அடிக்க பாயும் கதிர்
Image Credit : youtube/suntv

ஜனனியை அடிக்க பாயும் கதிர்

கதிர் நான் ஏன் உனக்கு வீடியோ அனுப்பணும் என கேள்வி கேட்க, ஜனனி சற்று குழப்பமடைகிறார். இருந்தாலும் நீதான் ஏதோ கேம் ஆடுற என கதிர் மீது ஜனனி பழிபோட, இதனால் கடுப்பாடும் கதிர், ஜனனியை அடிக்க பாய்கிறார். அப்போது ஆஸ்பத்திரிக்கு போயிருந்த ஈஸ்வரி அங்கு வந்துவிடுகிறார். அவரைப் பார்த்ததும் அனைவரும் அமைதி ஆகிறார்கள். என்ன ஆச்சு? என்ன பிரச்சனை என விசாரிக்கிறார் ஈஸ்வரி. யாரும் வாய் திறக்காமல் இருக்க, ஜனனியை தனியாக அழைத்து பேசுகிறார் ஈஸ்வரி. என்கிட்ட இருந்து ஏதாவது மறைக்குறீங்களா என கேட்கிறார் ஈஸ்வரி. அதற்கு ஜனனி உங்க மனசுல என்ன தோணுது என கேட்க, அவர் தனக்கு அப்படி தான் ஃபீல் ஆகிறது என சொல்கிறார்.

Related Articles

Related image1
குணசேகரனுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகும் ஜனனி... மதிவதினியின் பலே திட்டம் - எதிர்நீச்சல் தொடர்கிறது
Related image2
கதிர் தான் கல்பிரிட்; அடிச்சு சொன்ன ஜனனி... ராவணனின் பிளான் சக்சஸ் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்
36
பஞ்சாயத்து பேசும் குணசேகரன்
Image Credit : youtube/suntv

பஞ்சாயத்து பேசும் குணசேகரன்

பின்னர் மறுநாள் காலையில் டைனிங் டேபிளில் அமர்ந்து பேசும் ஆதி குணசேகரன், எதுக்கு ஜனனி வீட்டை விட்டு போகணும்னு சொல்லுது என ஈஸ்வரியிடம் கேட்கிறார். அப்போது அருகில் இருந்த கதிர், அவளுக்கு மட்டும் தான் ரோஷம், மானமெல்லாம் இருக்காம். அதான் வெளிய போறா என சொல்கிறார். டேய் கதிரு என குணசேகரன் சொல்ல, பின்ன என்ன அண்ணேன், என்னைய பத்தி எப்படி பொய் சொன்னானு நீங்களே கேட்டுகிட்டு தான் இருந்திருப்பீங்க. அதுக்காக தான் நான் கோபப்பட்டேன். அதுக்குன்னு அப்படியே பையை தூக்கிட்டு கிளம்பிருவாளா என கேட்கிறார் கதிர்வேல்.

46
மன்னிப்பு கேட்க சொல்லும் ஆதி குணசேகரன்
Image Credit : youtube/suntv

மன்னிப்பு கேட்க சொல்லும் ஆதி குணசேகரன்

கதிருக்கு பதிலடி கொடுக்கும் நந்தினி, நீங்களும் அதே டிராமா தான பண்ணீங்க, ஒன்னு நான் இருக்கணும், இல்ல அவ இருக்கணும்னு சொல்வீங்க. அவ கிளம்பி போறா இதுல என்ன தப்பு கண்டுபிடிச்சீங்க என சாடுகிறார். எனக்கு டிராமா போடணும்னு அவசியமே இல்லை என கூறும் கதிர், என்மேல பொய்யா பழிபோட்டா அது எனக்கு புடிக்கல, நான் கிளம்புறேன்னு தான் சொன்னேன். மத்தபடி யாரையும் வீட்டை விட்டு அனுப்பணும் அப்படிங்குற என்னமெல்லாம் எனக்கில்ல என கதிர் சொல்ல, அதற்கு ஆதி குணசேகரன், அந்த புள்ளைய நீ அடிக்க போனீல்ல, அதற்காக அந்த புள்ளையிடம் நீ மன்னிப்பு கேட்டிரு என சொல்கிறார்.

56
ஞானம் சொல்லும் ஐடியா
Image Credit : youtube/suntv

ஞானம் சொல்லும் ஐடியா

அப்போது குறுக்கிட்டு பேசும் ஞானம், அவன் மேல என்ன அண்ணேன் தப்பு இருக்கு, அவன் எதுக்குனே மன்னிப்பு கேட்கணும். முன்னமாதிரி எதாவது தேவையில்லாம பேசிருந்தாகூட நீங்க சொல்றது நியாயமா இருந்திருக்கும். அவன்மேல எந்த தப்பும் கிடையாதுன்னே, சரி வேண்டுமென்றால் ஒன்னு செய்வோமா, அவங்க எல்லாரும் இங்கயே இருக்கட்டும். நம்ம மூணு பேரும் வெளிய போயிருவோமா. கல்யாணத்தன்னைக்கு மட்டும் நம்ம இங்க வந்து எட்டி பார்த்துட்டு போயிருவோம் என சொல்கிறார் ஞானம்.

66
ஜனனியின் முடிவு
Image Credit : youtube/suntv

ஜனனியின் முடிவு

அந்த சமயத்தில் மாடியில் இருந்து பெட்டி படுக்கையோடு கீழே இறங்கி வரும் ஜனனி, அக்கா தயவு செஞ்சு யாரையும் பேச வேண்டாம்னு சொல்லுங்க. என்னால தான பிரச்சனைனு நினைக்குறீங்க. நானே வீட்டை விட்டு போறேன். இன்னும் கொஞ்ச நாள்ல எல்லா உண்மையும் வெளிச்சத்துக்கு வந்திரும். நீங்க சொன்னமாதிரி கூடிய சீக்கிரம் எல்லாத்துக்கும் பதில் கிடைக்கதான் போகுது என சொன்னதும் ஆதி குணசேகரன் கேங் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரோகிணியால் தடுத்து நிறுத்தப்பட்ட மனோஜின் திருமணம்... வசமாக சிக்கிய விஜயா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
கதிர் தான் கல்பிரிட்; அடிச்சு சொன்ன ஜனனி... ராவணனின் பிளான் சக்சஸ் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்
Recommended image3
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மெகா ஹிட் திருப்பம்; மாமா முத்துவேல் - மருமகன் கதிர் சமாதானம்; கோபத்தில் கொந்தளித்த சக்திவேல்!
Related Stories
Recommended image1
குணசேகரனுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகும் ஜனனி... மதிவதினியின் பலே திட்டம் - எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image2
கதிர் தான் கல்பிரிட்; அடிச்சு சொன்ன ஜனனி... ராவணனின் பிளான் சக்சஸ் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved