MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • போலீசுக்கே தண்ணிகாட்டும் ஜீவானந்தம்... க்ளூ கொடுத்தாரா ஜனனி? எதிர்பாரா திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது

போலீசுக்கே தண்ணிகாட்டும் ஜீவானந்தம்... க்ளூ கொடுத்தாரா ஜனனி? எதிர்பாரா திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜீவானந்தத்தை பற்றி துப்பு கிடைக்காததால் மீண்டும் ஜனனியிடம் விசாரணை நடத்தியுள்ளது போலீஸ்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 22 2025, 08:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ethirneechal Thodargiradhu Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரியை ஆதி குணசேகரன் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் ஈஸ்வரியின் இந்த நிலைமைக்கு ஆதி குணசேகரன் தான் காரணம் என்பது ஜனனிக்கு தெரிந்தாலும் அவர் மீது போதுமான ஆதாரம் சிக்காததால், அதை வலைவீசி தேடி வருகிறார். இந்த வழக்கில் ஜீவானந்தத்திற்கு தொடர்பு இருப்பதாக ஆதி குணசேகரன் திசை திருப்பி விட்டதால், அவரை தனிப்படை அமைத்து கைது செய்ய கோர்ட்டும் உத்தரவிட்டது. இதனால் ஜீவானந்தத்தை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஞானத்தால் தெம்பான ஆதி குணசேகரன்
Image Credit : youtube/suntv

ஞானத்தால் தெம்பான ஆதி குணசேகரன்

சிறையில் இருந்த ஞானம் ஜாமினில் விடுதலை ஆகி வந்ததால் குஷியாகும் ஆதி குணசேகரன், அவரிடம் நடந்ததையெல்லாம் கூறுகிறார். வழக்கம்போல் ஞானமும் ஆதி குணசேகரன் பக்கம் செல்ல, அதனால் குஷியான ஆதி குணசேகரன், என் தம்பி ஞானம் என்கூட இருப்பது எனக்கு யானை பலத்தை கொடுக்கிறது என வீர வசனம் பேசுகிறார். சக்தி ஜனனிக்கு சப்போர்ட் செய்வதால், ஞானமும் தன் மீது சந்தேகப்பட்டு அவர்கள் பக்கம் சென்றுவிடுவானோ என பயந்ததாகவும் ஆதி குணசேகரன் கூறுகிறார். அவர் போடும் டிராமாவையெல்லாம் பார்த்து தலையில் அடித்துக் கொள்கிறார் நந்தினி.

Related Articles

Related image1
அதிரடி முடிவெடுத்த ஜனனி... இனி ஆதி குணசேகரன் ஆட்டம் குளோஸ்! எதிர்பாரா திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
Related image2
ஜனனியின் பிளானில் மண்ணை அள்ளிப்போட்ட அறிவு; சூழ்ச்சியில் சிக்கும் தர்ஷன்..! எதிர்நீச்சல் 2 இன்றைய எபிசோடு
34
விசாரணைக்கு வந்த புது போலீஸ் அதிகாரி
Image Credit : youtube/suntv

விசாரணைக்கு வந்த புது போலீஸ் அதிகாரி

இதையடுத்து ஈஸ்வரி வழக்கை விசாரிக்க வந்திருப்பதாக கூறி ஒரு புது போலீஸ் அதிகாரி வீட்டுக்கு வருகிறார். அவர் வந்ததும் ஜீவானந்தத்தை பற்றி விசாரிக்கப் போகிறேன் என்று சொன்னதும் கடுப்பான ஆதி குணசேகரன், அவனைப் பற்றி இங்க என்ன விசாரணை... அவனுக்கும் இந்த வீட்டுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு என கேட்கிறார். அதற்கு அவர், சார் உங்க வீட்டு பெண்களுக்கு எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. கொஞ்சம் வர சொல்லுங்க என அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே எண்ட்ரி கொடுக்கிறார் ஜனனி. அவருடன் சக்தி, ரேணுகா, நந்தினியும் வருகிறார்கள்.

44
ஜனனியிடம் தொடங்கிய விசாரணை
Image Credit : youtube/suntv

ஜனனியிடம் தொடங்கிய விசாரணை

இதையடுத்து, ஜனனியிடம், மொத்த டிபார்ட்மெண்டும் ஜீவானந்தத்தை தேடிட்டு இருக்கு. அவரைப்பத்தி தகவல் தெரியுமா என கேட்கிறார் போலீஸ். எங்களுக்கு எதுவும் தெரியாது என ஜனனி சொன்னதும், நல்லது நாங்க தேடி கண்டுபிடிச்சிடுவோம். அப்படி அவனை பிடிச்சோம்னா மொத்த கதையையும் முடிச்சிடுவோம் என சொல்கிறார் அந்த புது போலீஸ் அதிகாரி. அவரை பிடிக்குறேன்னு இங்க வேற யாரையும் தொந்தரவு செய்யாதீர்கள் என கூறுகிறார் ஜனனி. இதையடுத்து என்ன ஆனது? ஜீவானந்தத்தை பற்றி போலீசுக்கு ஏதேனும் க்ளூ கொடுத்தாரா ஜனனி? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சன் தொலைக்காட்சி
தமிழ் சீரியல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Bigg Boss Wild Card entry: பிக்பாஸ் வீட்டில் புதிய புயல்..ஆனந்தியின் அதிரடி என்ட்ரி
Related Stories
Recommended image1
அதிரடி முடிவெடுத்த ஜனனி... இனி ஆதி குணசேகரன் ஆட்டம் குளோஸ்! எதிர்பாரா திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image2
ஜனனியின் பிளானில் மண்ணை அள்ளிப்போட்ட அறிவு; சூழ்ச்சியில் சிக்கும் தர்ஷன்..! எதிர்நீச்சல் 2 இன்றைய எபிசோடு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved