- Home
- Cinema
- தொலைக்காட்சி
- இப்படி ஒரு மனைவி உடன் வாழ்வதற்கு பதில் விவாகரத்து செய்திடலாம்? என்ன செய்வார் சரவணன்?
இப்படி ஒரு மனைவி உடன் வாழ்வதற்கு பதில் விவாகரத்து செய்திடலாம்? என்ன செய்வார் சரவணன்?
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணன் உண்மையை சொன்ன நிலையில் தங்கமயில் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவாரா அல்லது அவரை விவாகரத்து செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-ல் சரவணன்-தங்கமயில் சண்டைக்கு முற்றுப்புள்ளி. தவித்த சரவணன், தங்கமயிலின் உண்மைகளை குடும்பத்தினரிடம் உடைத்தார். கோமதி மயக்கமடைந்தார், குடும்பத்தினர் அதிர்ச்சி.
விஜய் டிவி சீரீயல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
தங்கமயிலுக்கு கோமதியும் பாண்டியனும் மட்டுமே ஆதரவு. சரவணனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு என தங்கமயில் பொய் சொன்னார். மகனை நம்பாமல் மருமகளை நம்பியதால் வந்த வினை.
தங்கமயில் சரவணன் சர்ச்சை
உண்மைகள் தெரிந்தாலும், நகை மற்றும் மாணிக்கம் திருடிய விஷயம் ரகசியம். சரவணன் சொல்லிவிடுவாரோ என பயந்த தங்கமயில், சண்டையின்றி வாழப்போவதாக நாடகமாடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ
கோபத்தின் உச்சிக்கு சென்ற சரவணன் எல்லா உண்மைகளையும் போட்டு உடைத்தார். உண்மை தெரிந்த பாண்டியனும் கோமதியும் தங்கமயிலை ஏற்பார்களா அல்லது வீட்டை விட்டு துரத்துவார்களா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
அடுக்கடுக்கான பொய்களால், சரவணன் தங்கமயிலை விவாகரத்து செய்ய வாய்ப்புள்ளது. இந்த வாரம் சீரியலில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.