- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஜெயிலர் இசை வெளியீட்டு விழா இன்று டிவியில் ஒளிபரப்பாக உள்ளதா? தொலைக்காட்சியில் இன்று என்ன ஸ்பெஷல்?
ஜெயிலர் இசை வெளியீட்டு விழா இன்று டிவியில் ஒளிபரப்பாக உள்ளதா? தொலைக்காட்சியில் இன்று என்ன ஸ்பெஷல்?
ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக செய்தி பரவி வந்த நிலையில், அதுகுறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜெயிலர் படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழா முடிந்து 2 நாட்கள் ஆகியும், அதன் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு காரணம் அதில் ரஜினி பேசிய அதகளமான பேச்சு தான். சூப்பர்ஸ்டார் டைட்டில் சர்ச்சை தொடங்கி, ஜெயிலர் கமிட்டான கதை வரை ஏராளமான விஷயங்கள் குறித்து ஓப்பனாக பேசி இருந்தார் ரஜினிகாந்த். அவர் மட்டும் சுமார் 45 நிமிடங்கள் பேசி இருக்கிறார். இதுதவிர சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறனும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார். இதனால் சமூக வலைதளத்தில் ஜெயிலர் ஆடியோ லாஞ்ச் தான் பேசு பொருளாக உள்ளது.
இதையும் படியுங்கள்... சீரியலையே மிஞ்சும் அளவுக்கு... நிஜ வாழ்க்கையிலும் எதிர்நீச்சல் மாரிமுத்துவுக்கு வந்த மிகப்பெரிய சிக்கல்
இப்படி பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், அதனை ஜூலை 30-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்றே ஒளிபரப்ப உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வைரலாக பரவியது. ஆனால் இதுகுறித்து சன் டிவி தரப்பில் இருந்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தற்போது இன்றைய ஸ்பெஷல் என்னென்ன என்பது விவரங்களை வெளியிட்டு உள்ளது சன் டிவி.
அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு தோழா திரைப்படமும், மதியம் 3 மணிக்கு காஞ்சனா 2 திரைப்படமும், மாலை 6.30 மணிக்கு பைரவா திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் இன்று ஜெயிலர் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பாக உள்ளதாக பரவி வந்த தகவல் வெறும் வதந்தி என்பதை உறுதிப்படுத்தி உள்ளது சன் டிவி. இந்த வாரம் ஒளிபரப்பாகாததால், வருகிற ஆகஸ்ட் 6-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
இதுதவிர இன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான இறுதிப்போட்டி ஒளிபரப்பாக உள்ளது. இந்த இறுதிப்போட்டி 5 மணிநேர ஸ்பெஷலாக ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் இன்று மதியம் 3 மணியில் இருந்து இரவு 8 மணிவரை செம்ம ஃபன் காத்திருக்கிறது.
இதையும் படியுங்கள்... வெற்றிமாறன் இயக்கும் சவுக்கு சங்கர் பயோபிக்கில் ஹீரோ இவரா?.. அப்போ தேசிய விருது கன்பார்ம்!