- Home
- Cinema
- தொலைக்காட்சி
- உண்மையை சொல்வாரா தீபாவதி – டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் கொடுக்கும் கார்த்திகை தீபம் 2 சீரியல்!
உண்மையை சொல்வாரா தீபாவதி – டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் கொடுக்கும் கார்த்திகை தீபம் 2 சீரியல்!
Detective Agent Deepavati waiting for Truth : கார்த்திகை தீபம் 2 சீரியலில் தீபாவதி உண்மையை சொல்வாரா இல்லையா என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம் சீரியலின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்போது 2ஆவது பாகம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் பாகத்தில் கார்த்திக் பணக்காரன். 2ஆவது பாகத்தில் தனது அத்தையின் வீட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்த நிலையில் அத்தையின் மகள் ரேவதியை திருமணம் செய்து கொண்டு இப்போது அவரை காதலிக்க ஆரம்பித்துள்ளார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டுள்ளனர்.
சாமுண்டீஸ்வரி
இந்த சூழலில் கார்த்திக் மீது சாமுண்டீஸ்வரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஒரு Detective Agent அலுவலகத்திற்கு சென்று தீபாவதியை சந்தித்து தனது வீட்டில் நடக்கும் குழப்பங்கள் குறித்தும் தனது மருமகன் யார், ராஜா சேதுபதியின் உண்மையான பேரன் யார் என்ற உண்மையையும் கண்டுபிடிக்க கூறியுள்ளார். அதன் பின்னர் தீபாவதி அலசி ஆராய்ந்து பார்த்து கடைசியில் ஒரு வேலைக்கார பெண் போன்று பரமேஸ்வரி வீட்டிற்கு சென்று கார்த்திக் பற்றிய உண்மையை நீண்ட விசாரணைக்கு பிறகு கண்டுபிடித்துள்ளார்.
கார்த்திக்
அப்படி அவர் கண்டுபிடித்த உண்மையை தனது சக ஊழியர்கள் மத்தியில் காண்பித்து அதற்கு தீர்வு கண்டார். அதாவது, கார்த்திக் பற்றிய உண்மையை சொல்லலாமா வேண்டாமா என்று சக ஊழியர்கள் ஆளாளுக்கு புதுப்புது ஐடியாக்களை கொடுத்தனர். தீபாவதியை தவிர மற்ற அனைவரும் கார்த்திக்கிற்கு ஆதரவாக செயல்பட்டனர். ஆனால், தீபாவதி மட்டுமே தனது தொழிலுக்கு துரோகம் செய்ய கூடாது என்று உண்மையை சொல்ல வேண்டும் என்று முடிவோடு இருந்தார்.
சாமுண்டீஸ்வரி
இதற்காக சாமுண்டீஸ்வரியை வர சொன்னார். ஆனால், எதிர்பாராத விதமாக சாமுண்டீஸ்வரியை பாம்பு கடிக்க அவரால் வர முடியவில்லை. தொடர்ந்து நாளை அதே இடத்திற்கு வர சொன்னார். இதற்கிடையில் கார்த்திக் மற்றும் ரேவதிக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. அந்த போட்டிக்கு பெயர் தான் லவ்வாலஜி. அதாவது இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். யார் அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறாரோ அவர் தான் அதிக காதல் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
சுவாதி தனது அக்கா ரேவதி
இதில் சுவாதிக்கு தனது அக்கா ரேவதி தான் அதிகளவில் காதலிப்பதாக கூற, மயில் வாகனம் கார்த்திக் தான் அதிக காதலுடன் இருப்பதாக கூறினார். இதற்கிடையில் போட்டி தொடங்கி இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது. இனி இன்று என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.