- Home
- Cinema
- தொலைக்காட்சி
- மாற்றப்படும் கல்யாண நேரம்... ஜனனியின் பிளானை மொத்தமாக காலி பண்ணிய குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
மாற்றப்படும் கல்யாண நேரம்... ஜனனியின் பிளானை மொத்தமாக காலி பண்ணிய குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
சன் டிவி எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனுக்கு காலை 9 மணிக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், திடீரென கல்யாண நேரத்தை மாற்றி இருக்கிறார் ஆதி குணசேகரன்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன் கல்யாணத்தை சக்சஸ்ஃபுல் ஆக நடத்தி முடிக்க ஆதி குணசேகரன் கேங் ஆவலோடு இருக்க, மறுபுறம் அறிவுக்கரசி வீடியோ விவகாரத்தில் கேமராமேனிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறார். அந்த கேமராமேன் வீடியோவிற்காக அறிவுக்கரசியை மிரட்டி ரூ.1 கோடி கேட்டிருக்கிறார். அறிவுக்கரசியும் அந்த பணத்தை ரெடி பண்ணி, அதை கேமராமேன் கையில் கொடுப்பதற்குள் அவனை போட்டுத்தள்ள ஆள் செட் பண்ணி இருக்கிறார். இதனால் தர்ஷனின் கல்யாணம் நடப்பதற்குள் அடுத்த மர்டர் நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
முல்லையை மிரட்டும் கதிர்
தர்ஷனை எப்படியாவது மண்டபத்தில் இருந்து கடத்தி வெளியே கொண்டு வருமாறு ஜனனி, சக்தியிடம் பிளானை சொல்லி இருந்தார். அதனால் முல்லையை வைத்து தர்ஷனை கடத்த பிளான் போடுகிறார் நந்தினி. முல்லையை தூண்டிவிட்டு, தர்ஷனை ஃபேசியல் பண்ண மாடிக்கு அழைத்து வரச் சொல்கிறார். முல்லையும் கீழே சென்று ஆதி குணசேகரனிடம் தர்ஷனை ஃபேசியல் செய்ய அழைத்து செல்வதாக சொல்கிறார். இதைக்கேட்டு கடுப்பான கதிர், செருப்பு பிஞ்சிரும் வெளக்கென்ன, ராத்திரில என்னடா ஃபேசியல், பேசாம படுத்து தூங்கு, அதைவிட்டுட்டு ஏதாச்சும் பேசுன உன்னோட குரவளையை நெரிச்சு கொன்றுவேன் என முல்லையை மிரட்டுகிறார்.
கல்யாண நேரம் மாற்றம்
பின்னர் ஜமக்காளம் விரித்து தர்ஷனை அமரச் சொல்லும் குணசேகரன், அவரிடம் உன்னை காலையில 3 மணிக்கு எழுப்பி விடுவேன் என சொல்ல, அதற்கு கரிகாலன், மாமா 4 மணி கல்யாணத்துக்கு 3 மணிக்கு எழுந்தா சரியா வருமா என கேட்கிறார். இதைக்கேட்டு ஷாக் ஆன தர்ஷன், என்னது 4 மணிக்கு கல்யாணமா என கேட்கிறார். அதற்கு கரிகாலன், நேரத்தை மாற்றிய விஷயத்தை சொல்கிறார். 9 மணிக்கு தானே கல்யாணம்னு சொன்னீங்க என தர்ஷன் கேட்க, அதற்கு குணசேகரன், நேரத்தை மாற்றினால், தாலி கட்ட மாட்டியோ.. இங்கேயே படுத்து தூங்குற வழிய பாரு என சொல்கிறார்.
குணசேகரனிடம் சிக்கும் நந்தினி
தூங்குவதற்கு முன் ஃபேசியல் பண்ணிகட்டுமே, ஆள் வெயிட்டிங் என முல்லை சொல்ல, எங்கடா என குணசேகரன் கேட்டதற்கு மேலே புர்கா அணிந்திருக்கும் நந்தினியை காட்டுகிறார் முல்லை. யம்மா ஏய் இறங்கி கீழே வா என அழைக்கிறார் குணசேகரன். இதையடுத்து கீழே வரும் நந்தினியிடம், நீ இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க என கேட்கிறார். அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழிக்கிறார். இவ்வளவு நேரம் கதிரிடம் இருந்து எஸ்கேப் ஆன நந்தினி, ஆதி குணசேகரனிடம் சிக்குவாரா? ஜனனியின் பிளான் சொதப்புமா? இல்லை சக்சஸ் ஆகுமா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் தான் பார்க்க முடியும்.