- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சந்திரகலாவை நம்பி ஏமாந்த சாமுண்டீஸ்வரி – இதெல்லாம் தேவையா? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
சந்திரகலாவை நம்பி ஏமாந்த சாமுண்டீஸ்வரி – இதெல்லாம் தேவையா? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
Chandrakala Cheating Chamundeshwari : கார்த்திகை தீபம் 2 சீரியலில் திரும்ப திரும்ப சந்திரகலா சொல்வதை கேட்டு சாமுண்டீஸ்வரி ஏமாந்து வருகிறார்.

கார்த்திகை தீபம் 2
Chandrakala Cheating Chamundeshwari : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இப்போது கும்பாபிஷேகம் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. கடந்த வாரம் ராஜராஜன் சாமியாடி சென்று ஊர் எல்லையில் 4 மூலையிலும் உள்ள விளக்குகளை ஏற்றி வைத்து வந்து கும்பாபிஷேகத்திற்கு உத்தரவு கொடுத்தார். ஆனால், அவரை கொலை செய்தால் கும்பாபிஷேகம் நடக்காது என்று பிளான் போட்ட காளியம்மாவிற்கு கார்த்திக் அவரை காப்பாற்றி தக்க பதிலடி கொடுத்தார்.
காளியம்மாள்
ஆனால், காளியம்மாள் புதிய பிளானாக பரமேஸ்வரியை தனியாக வர சொல்லி அவரை கத்தியால் குத்தினார். இதைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு கார்த்திக் மருத்துவமனையில் சேர்த்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு துணையாக வேலைக்கார பெண் இருந்தார்.
கார்த்திக் மற்றும் ரேவதி
கார்த்திக் மற்றும் ரேவதி ஆகியோர் வீட்டிற்கு வந்து தூங்க சென்றனர். அப்போது பரமேஸ்வரி கடுமையான காய்ச்சலால் அவதிப்படும் நிலை ஏற்பட உடனே வேலைக்கார பெண் கார்த்திக்கிற்கு போன் போட்டு வரச் சொன்னார். அவர் வீட்டைவிட்டு வெளியேறிச் செல்வதை பார்த்த சந்திரகலா, உடனே தனது அக்கா சாமூண்டீஸ்வரியை அழைத்து விஷயத்தை தெரியப்படுத்தினார்.
சாமுண்டீஸ்வரி - பரமேஸ்வரி
அதன் பின்னர் சாமுண்டீஸ்வரி காரை எடுத்துக் கொண்டு பரமேஸ்வரி வீட்டிற்கு சென்றார். அங்கு, கார்த்திக் மற்றும் பரமேஸ்வரி இருவரும் பேசிக் கொண்டிருந்ததை சாமுண்டீஸ்வரி ஜன்னலுக்கு வெளியில் நின்று கொண்டு பார்த்தார். நீயும் உண்மையான பேரன் போன்று என்னை கவனித்துக் கொள்கிறாய் என்று கார்த்திக்கை பாராட்டினார். அதற்கு கார்த்திக்கும் நானும் உங்களது பேரன் தானே பாட்டி. ஆமாம், ரேவதி உங்களது பேத்தி என்றால் அவரை திருமணம் செய்த நான் உங்களுக்கு பேரன் தானே என்று இருவரும் பேசிக் கொண்டனர்.
சாமூண்டீஸ்வரி சந்திரகலா
இதையெல்லாம் வேடிக்கை பார்த்த சாமூண்டீஸ்வரி சந்திரகலா இந்த முறையும் தன்னிடம் பொய் சொல்லி தன்னை அலைய வைத்துவிட்டார். அவருக்கு இதே வேலையா போச்சு. இனிமேல் அவரது பேச்சை கேட்கவே கூடாது என்று புலம்பிக் கொண்டு கார்த்திக் வீட்டிற்கு வருவதற்கு முன்னதாக சென்று விட வேண்டும் என்று கூறிக் கொண்டே சென்றார்.