- Home
- Cinema
- தொலைக்காட்சி
- எனக்கு கடவுள் பக்தி ரொம்பவே ஜாஸ்தி – நான் சாமி சிலையை கடத்தல – பஞ்சாயத்தில் சாமூண்டீஸ்வரி!
எனக்கு கடவுள் பக்தி ரொம்பவே ஜாஸ்தி – நான் சாமி சிலையை கடத்தல – பஞ்சாயத்தில் சாமூண்டீஸ்வரி!
Chamundeshwari Explains I Did not stolen the goddess idol : தான் அம்மன் சிலையை கடத்தவில்லை என்றும், தனக்கு கடவுள் பக்தி ரொம்பவே ஜாஸ்தி என்றும் சாமூண்டீஸ்வரி பஞ்சாயத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கார்த்திகை தீபம் 2 சீரியல்
ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் கார்த்திகை தீபம் 2 சீரியலில் கும்பாபிஷேகம் நடக்குமா நடக்காதா என்ற கேள்விகளுடன் இந்த வார எபிசோடு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே கும்பாபிஷேகம் நடைபெற இருந்த நிலையில் கார்த்திக்கின் அம்மா விபத்தில் உயிரிழந்தார். இதனால் கும்பாபிஷேகம் நின்று போனது. இப்போது கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழ் அடிக்கப்பட்டு ஊர் முழுவதும் கொடுக்கப்பட்டு வந்தது.
முகூர்த்தக் கால் நடும் விழா
இதைத் தொடர்ந்து முகூர்த்தக் கால் நடும் விழாவும் வந்தது. ஊர் பெரியோர்கள் என்று அனைவரும் கோயிலில் திரண்டனர். ஆனால், கோயிலில் இருந்த அம்மன் சிலையை காணவில்லை. இதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அதற்கு முந்தைய நாளே சிவனாண்டி மற்றும் முத்துவேல் இருவரும் அம்மன் சிலையை கடத்தி சென்றனர். மேலும் முத்துவேல் அந்த அம்மன் சிலையை ரூ.10 லட்சத்திற்கு விற்கவும் முடிவு செய்தார்.
அம்மன் சிலையை காணவில்லை
இதற்கிடையில் கோயிலில் சிலையை காணாமல் பரமேஸ்வரி கதறி அழுதார். கார்த்திக் ஷாக்கானார். ஆனால், சிவனாண்டி செட் செய்த ஆள் ஒருவர் சாமுண்டீஸ்வரி தான் சிலையை கடத்திவிட்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டினர். இந்த நிலையில் இன்று சாமூண்டீஸ்வரிக்கு எதிராக பஞ்சாயத்து வைக்கிறார்கள். அதில், சாமுண்டீஸ்வரியிடம் விசாரணை நடக்கிறது.
சாமுண்டீஸ்வரி
அப்போது சாமுண்டீஸ்வரி ஐயா நான் கடவுள் பக்தி உள்ளவள். அடிக்கடி கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறவள். வீட்டிலேயும் தினமும் கடவுளுக்கு பூஜை செய்கிறேன். இப்படி கடவுள் பக்தி இருக்கிற நான் சிலையை கடத்துவேனா? சிலை காணாமல் போனதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வேண்டுமென்றேன் என் மீது குற்றம் சாட்டுகிறார்கள். அதோடு ஊர் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் நான் சாமி சிலையை கடத்தி தப்பா பெயரை சம்பாதிப்பேனா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பினார்.
35 வருடத்திற்கு முன்பு என்ன நடந்தது
அப்போது இதற்கு தீர்ப்பளிக்கும் வகையில் 35 வருடத்திற்கு முன்பு, இதே மாதிரி தான் சாமி சிலை ஒன்று காணாமல் போனது. ஒருவர் மீது சந்தேகப்பட்டு விசாரனை நடத்தப்பட்டது. அவரும் எடுக்கவில்லை என்று சொன்னார். அப்போது ஊர்க்காரர்கள் கோயிலுக்கு முன்பாக குழி தோண்டி அவரை அந்த குழிக்குள் இறக்கினார்கள். உண்மையில் அவர் தவறு செய்யவில்லை என்றால் சாமி சிலை கிடைத்துவிடும். குழிக்குள் இறக்கப்பட்ட அவரும் உயிருடன் திரும்ப வருவார்.
சாமி சிலை ஒன்று காணாமல் போனது
அப்போது இதற்கு தீர்ப்பளிக்கும் வகையில் 35 வருடத்திற்கு முன்பு, இதே மாதிரி தான் சாமி சிலை ஒன்று காணாமல் போனது. ஒருவர் மீது சந்தேகப்பட்டு விசாரனை நடத்தப்பட்டது. அவரும் எடுக்கவில்லை என்று சொன்னார். அப்போது ஊர்க்காரர்கள் கோயிலுக்கு முன்பாக குழி தோண்டி அவரை அந்த குழிக்குள் இறக்கினார்கள். உண்மையில் அவர் தவறு செய்யவில்லை என்றால் சாமி சிலை கிடைத்துவிடும். குழிக்குள் இறக்கப்பட்ட அவரும் உயிருடன் திரும்ப வருவார். இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். எனினும், சாமுண்டீஸ்வரி குழிக்குள் இறக்கப்படுவாரா அல்லது கார்த்திக் தனது அத்தையை காப்பாற்ற என்ன செய்ய போகிறார் என்பது குறித்து இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.