- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சீண்டிய கதிர் கேங்... சிங்கப்பெண்ணாய் சீரிய பார்கவி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இன்றைய எபிசோடு
சீண்டிய கதிர் கேங்... சிங்கப்பெண்ணாய் சீரிய பார்கவி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இன்றைய எபிசோடு
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தல தீபாவளி கொண்டாட்டத்தின் போது பார்கவியை சீண்டும் விதமாக கதிர், கரிகாலன் ஆகியோர் செய்த செயலுக்கு அவர் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன் - பார்கவிக்கு ஜனனி வெற்றிகரமாக திருமணத்தை நடத்தி முடித்த நிலையில், இந்த சேலஞ்சில் தோற்றுப் போன சோகத்தில் இருக்கும் ஆதி குணசேகரன், தன்னுடைய பழைய பகை ஒன்றை தீர்க்க இராமேஸ்வரத்துக்கு சென்றிருக்கிறார். இதனிடையே அவர் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ ஆதாரம் புது வில்லன் ஒருவரிடம் சிக்கி இருக்கிறது. இதனால் அந்த வீடியோவை வைத்து பிளாக்மெயில் செய்ய வரப்போகும் அந்த வில்லன் யார் என்கிற எதிர்பார்ப்பும் எகிறிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில், இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
புடவை வாங்கி வந்த கதிர்
தர்ஷன் - பார்கவிக்கு தல தீபாவளி என்பதால், அதைக் கொண்டாட அனைவரும் தடபுடலாக தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில், எல்லோருக்கும் நந்தினி புது டிரெஸ் எடுத்து வந்த நிலையில், விசாலாட்சிக்கும் ஒரு புடவை கொண்டு வந்து கொடுக்கிறார். அதை விசாலாட்சி வாங்க மறுக்கிறார். இதையடுத்து கதிர் தன் பங்கிற்கு தன்னுடைய அம்மாவுக்காக ஒரு புடவையை வாங்கிக் கொண்டு வந்து கொடுக்க, அதைப் பார்த்த விசாலாட்சி, நான் எப்படிடா இதையெல்லாம் போட்டுக்க முடியும் என கேட்கிறார். ஏனெனில் கதிர், விசாலாட்சிக்கு ஃபேண்சி புடவையை வாங்கி வந்திருக்கிறார்.
தல தீபாவளி கொண்டாடும் தர்ஷன்
இதைப்பார்த்த நந்தினி, ரேணுகா, ஜனனி ஆகியோர் சிரிக்கிறார்கள். அறிவுக்கரசி ஜிகுஜிகுனு போட்டு சுத்துவால்ல, அந்த நினைப்பிலேயே அதே மாதிரி எடுத்துட்டு வந்திருக்காரு போல என கலாய்க்கிறார் நந்தினி. அருகில் இருந்த கரிகாலனும், என்ன மாமா, அறிவுக்கரசியை நினைச்சு எடுத்தியா என கேட்க, இதனால் கடுப்பாகும் கதிர், அவனை கண்டபடி திட்டுகிறார். பின்னர் தர்ஷன் - பார்கவிக்காக தடபுடலாக விருந்து சமைத்து அவர்களை ஹாலில் உள்ள டைனிங் டேபிளில் அமர வைத்து ரேணுகா, நந்தினி, ஜனனி ஆகியோர் விதவிதமான உணவுகளை பரிமாறுகின்றனர்.
கரிகாலனுக்கு பதிலடி கொடுத்த பார்கவி
அப்போது அவர்களைப் பார்த்து பேசும் கரிகாலன், ரூமுக்குள்ள போய் பூட்டிகிட்டு என்னென்னமோ பண்றீங்க. வெளிய வந்தா, ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறீங்க என கொச்சையாக பேச, இதனால் கடுப்பாகும் பார்கவி, சட்டென எழுந்து, கரிகாலனுக்கு பதிலடி கொடுக்கிறார். அதேபோல் நந்தினியை பார்க்க அவரது அம்மா வீட்டு வந்த நிலையில், அவரைப் பார்த்து எதுக்கு இங்க வந்தீங்க என மூஞ்சில் அடிச்சபடி பேசுகிறார் கதிர். அப்போது சத்தம் கேட்டு அங்கு வரும் நந்தினி, கதிரை திட்டுகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.