- Home
- Cinema
- தொலைக்காட்சி
- TRP ரேஸில் விஜய் டிவி சீரியல்களை ஓட ஓட விரட்டிய சன் டிவி தொடர்கள்... டாப் 10 சீரியல்கள் லிஸ்ட் இதோ
TRP ரேஸில் விஜய் டிவி சீரியல்களை ஓட ஓட விரட்டிய சன் டிவி தொடர்கள்... டாப் 10 சீரியல்கள் லிஸ்ட் இதோ
சின்னத்திரை சீரியல்களில் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்ற டாப் 10 சீரியல்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். இதில் சன் டிவி சீரியல்களைக் காட்டிலும் விஜய் டிவி சீரியல்கள் கம்மியான ரேட்டிங் பெற்றுள்ளது.

Top 10 Tamil Serial TRP Rating
சின்னத்திரை சீரியல்களில் கிங் ஆக இருந்து வருகிறது சன் டிவி. இதற்கு கிராமப்புர ஏரியாக்களில் நல்ல மவுசு இருப்பதால் தொடர்ந்து டிஆர்பி ரேஸில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் நகரப்புரங்களில் சன் டிவியைக் காட்டிலும் விஜய் டிவிக்கு தான் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால் அர்பன் ஏரியா கிங் ஆக விஜய் டிவி இருந்து வருகிறது. இந்த நிலையில், 2025-ம் ஆண்டின் 47வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வெளியாகி உள்ளது. அதைப் பார்க்கலாம்.
10. சின்ன மருமகள்
விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியல்களில் ஒன்றான சின்ன மருமகள் தொடரில், நவீன் ஹீரோவாக நடித்து வருகிறார். விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கடந்த வாரம் 7.25 புள்ளிகள் உடன் 10வது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரமும் 7.22 புள்ளிகளை பெற்று அதே இடத்தில் நீடிக்கிறது.
9. ஹனுமன்
சன் டிவியில் லேட்டஸ்டாக தொடங்கப்பட்ட ஹனுமன் சீரியல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் கடந்த வாரம் 7.06 புள்ளிகள் உடன் 11வது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் மளமளவென முன்னேறி, 7.52 புள்ளிகள் உடன் 9வது இடத்தை பிடித்துள்ளது.
8. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியில் வெற்றிநடைபோட்டு வரும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் கடந்த வாரம் 7.64 புள்ளிகள் உடன் 9-வது இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 7.62 டிஆர்பி ரேட்டிங் உடன் 8-ம் இடத்தில் உள்ளது.
7. சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட இந்த சீரியல், கடந்த வாரம் 8.78 புள்ளிகள் உடன் 4ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் சரசரவென பின்னுக்கு தள்ளப்பட்டு 8.38 புள்ளிகள் உடன் 7ம் இடத்தில் உள்ளது.
6. அன்னம்/அய்யனார் துணை
இந்த வார டிஆர்பி ரேஸில் இரண்டு சீரியல்கள் 6-ம் இடத்தை பிடித்துள்ளன. அதில் ஒன்று சன் டிவி சீரியலான அன்னம், மற்றொன்று விஜய் சீரியலான அய்யனார் துணை. இந்த சீரியல்கள் கடந்த வாரம் 6 மற்றும் 5ம் இடத்தில் இருந்தன. இந்த வாரம் இந்த இரண்டு சீரியல்களும் 8.41 புள்ளிகளை பெற்று 6ம் இடத்தில் உள்ளன.
5. எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் சீரியல்களில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலும் ஒன்று. திருச்செல்வம் இயக்கத்தில் தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கடந்த வாரம் 8.33 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 8.44 புள்ளிகளுடன் 5-ம் இடத்திற்கு தாவி இருக்கிறது.
4. மருமகள்
பிக் பாஸ் பிரபலம் கேப்ரியல்லா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மருமகள். இந்த சீரியலில் ஆதிரை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கேபி. இந்த சீரியல் கடந்த வாரம் 8.35 புள்ளிகள் உடன் 7-ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 8.55 புள்ளிகள் உடன் 4-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.
3. கயல்
சன் டிவியில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் ஜோடியாக நடித்து வரும் சீரியல் தான் கயல். இந்த சீரியலின் கதைக்களம் மாறிய பின்னர் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீரியல் கடந்த வாரம் 9.10 புள்ளிகள் உடன் 2-ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 9.09 புள்ளிகள் உடன் 10ம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
2. சிங்கப்பெண்ணே
மனிஷா மகேஷ் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலின் பெயர் சிங்கப்பெண்ணே. இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் இரவு 9 மனிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த சீரியல் கடந்த வாரம் 8.94 புள்ளிகள் உடன் மூன்றாம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 9.19 புள்ளிகள் உடன் 2-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.
1. மூன்று முடிச்சு
சன் டிவியில் ஸ்வாதி கொண்டே ஹீரோயினாக நடித்து வரும் சீரியல் தான் மூன்று முடிச்சு. இந்த சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று வருவதால் இதன் டிஆர்பியும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த வாரம் 9.61 புள்ளிகள் பெற்ற இந்த சீரியல் இந்த வாரம் 9.65 டிஆர்பி ரேட்டிங் உடன் முதல் இடத்தை தக்கவைத்து உள்ளது.

