- Home
- Cinema
- தொலைக்காட்சி
- வீட்டுக்குள் வந்ததும் அன்புக்கரசி பார்த்த சகுனி வேலை... பொய்சொல்லி மாட்டிக்கொண்ட ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது
வீட்டுக்குள் வந்ததும் அன்புக்கரசி பார்த்த சகுனி வேலை... பொய்சொல்லி மாட்டிக்கொண்ட ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அடைக்கலம் கேட்டு வந்த அன்புக்கரசியை, வீட்டுக்குள் சேர்த்துக்கொள்ள விசாலாட்சி சம்மதம் தெரிவித்ததை அடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசி ஜெயிலுக்கும் போனதை அடுத்து அவரை பெயிலில் வெளியே எடுக்க முடியாததால், இறுதியாக கதிர் மற்றும் குணசேகரனின் உதவியை நாடி வந்திருக்கிறார்கள் முல்லை மற்றும் அன்புக்கரசி. அவர்களை வீட்டிலும் சேர்க்க சம்மதம் தெரிவித்த விசாலாட்சி, குணசேகரன் வந்ததும் அடுத்து என்ன செய்வது என பேசிக் கொள்ளலாம் என சொல்கிறார். மறுபுறம் முல்லையை தனியாக அழைத்து வந்து ஜெயிலில் இருக்கும் அறிவுக்கரசிக்கு போன் போடச் சொல்கிறார் கதிர். இதையடுத்து அவனும் போன் போட்டு கொடுக்கிறான். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
தர்ஷனை சீண்டும் அன்புக்கரசி
போன் போட்டு பேசிய பின்னர், முல்லையை அழைத்து, அன்புக்கரசியை வைத்து தர்ஷனை லாக் பண்ண சொல்கிறார் கதிர். இவர்களின் பேச்சைக் கேட்டு, தர்ஷனின் ரூமுக்குள் செல்கிறார் அன்பு, அங்குள்ள பெட்டில் அமர்ந்திருக்க, அப்போது உள்ளே வரும் தர்ஷன் மற்றும் பார்கவி, தங்கள் உடைமைகளை எடுத்துச் செல்ல வருகிறார்கள். தர்ஷன் தன்னுடைய டிரெஸ்களை எடுத்துக் கொண்டிருக்கும் போது, நைசாக பேச்சு கொடுக்கும் பார்கவி, என்ன தர்ஷன், இதே ரூம்ல நீயும் நானும் எப்படியெல்லாம் ஒன்னா, இதே பெட்டில் இருந்திருக்கிறோம் என சொல்கிறார். இதைக்கேட்ட பார்கவி ஷாக் ஆகிறார்.
பதிலடி கொடுக்கும் தர்ஷன்
அன்புக்கரசியின் பேச்சால் வெடவெடத்துப் போன தர்ஷன், ஏய் என்ன பைத்தியக்காரத்தனமா பேசிகிட்டு இருக்க என கேட்கிறார். அதுமட்டுமின்றி அங்கு இருக்கும் பார்கவியிடமும் அவ ஏதோ லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்கா, அங்க அக்காவும், என் சித்தப்பாவும் சொன்னதால தான் நான் இந்த ரூம்ல இருந்தேன், அப்போ கூட நான் தனியாக இந்த ரூமில் இல்லை. என் கூட சித்தப்பாவும், அந்த கரிகாலனும் இருந்தாங்க. அவ மெண்டல் மாதிரி பேசிக்கிட்டு இருக்கா பார்கவி, நீ நம்பிடாத என கூறுகிறார் தர்ஷன். நீ தலைவலினு சொன்னப்போ உனக்கு யாரு தைலம் தேச்சு விட்டாங்க. அது நடந்தது உண்மைதான, மத்ததெல்லாம் ஒத்துக்கொள்ள உனக்கு மனசு வரல, நமக்குள்ள நடந்ததெல்லாம் வெளிய தெரியக்கூடாதுனு நினைக்குறியா என கேட்கிறார் அன்புக்கரசி.
ஜனனி சொன்ன உண்மை
இதைக்கேட்டு டென்ஷன் ஆன தர்ஷன், சட்டென வந்து அன்புக்கரசியின் கழுத்தை நெறிக்கிறார். இதையடுத்து அங்கு சக்தி, விசாலாட்சி, கரிகாலன் ஆகியோர் வந்து தர்ஷனை தடுக்கிறார்கள். என்ன ஆச்சு என சக்தி விசாரிக்கையில், அவ கேவலமா பொய் சொல்றா சித்தப்பா என கூறுகிறார் தர்ஷன். மறுபுறம் ஜனனி தன்னிடம் ஆதி குணசேகரனுக்கு எதிரான வீடியோ ஆதாரம் எதுவும் இல்லை என்கிற உண்மையை தர்ஷினியிடம் கூறுகிறார். இதனால் அனைவரும் பதறிப்போகிறார்கள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது? அன்புக்கரசியால் காத்திருக்கும் ட்விஸ்ட் என்ன என்பதை பார்க்கலாம்.