- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கனவில் வந்த உருவம், கெட்டது நடக்க போகுதா? அலறி அடித்து கதிரை கட்டிப்பிடித்த ராஜீ!
கனவில் வந்த உருவம், கெட்டது நடக்க போகுதா? அலறி அடித்து கதிரை கட்டிப்பிடித்த ராஜீ!
A Nightmare Starties Raji : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தூங்கிக் கொண்டிருந்த ராஜீயின் கனவில் திடீரென்று ஒரு உருவம் வந்ததைத் தொடர்ந்து அலறியடித்துக் கொண்டு எழுந்த அவர் கதிர் அருகில் படுத்து தூங்கினார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. இதில், பழனிவேல் கடை திறப்பு விழா தொடர்பான எபிசோடுகள் தான் இந்த வாரம் முழுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் பழனிவேலுவிற்கு தெரியாமல் கடைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதோடு அந்த கடைக்கு காந்திமதி ஸ்டோர்ஸ் என்றும் பெயர் வைக்கப்பட்டது. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை இருக்கும் அதே வீதியில் தான் பழனிவேலுவிற்கும் கடை திறக்கப்பட்டுள்ளது.
கனவில் வந்த உருவம்
ஆரம்பத்தில் கடை திறப்பது மட்டுமே பழனிவேலுவிற்கு தெரியும். அவருக்கு மட்டுமின்றி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கடை திறப்பது மட்டுமே தெரியும். ஆனால், என்ன கடை, எங்கு திறக்கிறோம், எப்படி இருக்கும் என்றூ யாருக்குமே தெரியாது. இவ்வளவு ஏன் கடையின் ஓனரான பழனிவேலுவிற்கு கூட கடையை பற்றி தெரியாது.
ராஜீக்கு விபூதி பூசிவிட்ட கதிர்
இந்த சூழலில் தான் நாளைய காட்சியில் பழனிவேலுவிற்கு அதிர்ச்சி காத்திருக்கும் என்று தெரிகிறது. இதற்கிடையில் ராஜீ மற்றும் கதிர் இருவரும் அவர்கள் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். இதில் ராஜீ கட்டில் மெத்தையில் தூங்க, கதிர் கட்டாந்தரையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ராஜீயை யாரோ கூப்பிடுவது போன்றும், கண் முன்னே ஒரு உருவம் வந்து செல்வது போன்றும் கனவு கண்டுள்ளார். அதோடு கனவில் பயங்கரமாக காத்து அடிப்பது போன்றும் காட்சி வந்துள்ளது.
கனவில் கண்ட உருவம் பற்றி பேசிய ராஜீ
இதைக் கண்டு அலறி அடித்துக் கொண்டு எழுந்த ராஜீ கதிரிடம் இதைப் பற்றி சொல்லவே, அவரும் விபூதி பூசி விட்டார். சாமி எப்போதும் கூடவே இருக்கும் என்று சமாதானப்படுத்தினார். பின்னர் கட்டிலில் தூங்காமல் தரையில் கதிருக்கு அருகிலேயே தூங்கினார். கதிரும் அவருக்கு பாதுகாப்பாக இருந்தார். இத்தனை நாட்களாக இல்லாமல் இப்போது ஏன் ராஜீ இப்படியொரு கனவு வர வேண்டும்.
கனவில் வந்த உருவம்
கனவில் வந்த அந்த உருவம் யாருடையது. ஏன் ராஜீக்கு வரவேண்டும். இது பின்னாடி நடப்பதற்கான அறிகுறியா அல்லது எச்சரிக்கையா? இது போன்ற பல கேள்விகளுடன் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலை கண்டு ரசிக்கலாம். இதற்கான விளக்கம் இனி வரும் நாட்களில் ரசிகர்களுக்கு தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.