ரூ.89-க்கு யூடியூப் பிரீமியம் லைட்.. மலிவு விலையில் கிடைக்குது.!!
கூகுளின் யூடியூப், இந்தியாவில் பிரீமியம் லைட் என்ற புதிய சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெரும்பாலான காணொளிகளை விளம்பரமில்லாமல் பார்க்க அனுமதிக்கிறது.

யூடியூப் பிரீமியம் லைட்
கூகுள் உரிமையுள்ள யூடியூப் நிறுவனம் புதிய பிரீமியம் லைட் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் பெரும்பாலும் காணொளிகளை விளம்பரமில்லாமல் பார்க்க முடியும். ஆனால், இசை உள்ளடக்கம் மற்றும் Shorts-ல் இன்னும் விளம்பரங்கள் தோன்றும். சர்ச் மற்றும் பிரௌசிங் போது சில விளம்பரங்கள் தோன்றும்.
யூடியூப்
யூடியூப் Premium Lite மாதம் ரூ.89க்கும், பிரீமியம் மாதம் ரூ.149க்கும் கிடைக்கிறது. Premium Lite பயனர்கள் காணொளிகளை விளம்பரமில்லாமல் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் பிரீமியம் பயனர்கள் YouTube Music, பின்னணி பிளே மற்றும் வீடியோ டவுன்லோட்கள் போன்ற கூடுதல் கூடுதல் அம்சங்களையும் பெறுகின்றனர்.
பிரீமியம் லைட் அம்சங்கள்
இந்த திட்டம் இந்திய பார்வையாளர்களின் விருப்பங்கள் மற்றும் பட்ஜெட்டிற்கு ஏற்ப அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறிப்பாக விளம்பரங்களை தவிர்க்க விரும்பும், ஆனால் இசை அல்லது கூடுதல் அம்சங்களை அதிகம் பயன்படுத்தாத பார்வையாளர்களுக்காக உள்ளது.