- Home
- டெக்னாலஜி
- 6.67 இன்ச் ஃபுல் HD+ டிஸ்ப்ளே.. கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு.. ரெட்மி நோட் 14 5ஜி விலை எவ்வளவு?
6.67 இன்ச் ஃபுல் HD+ டிஸ்ப்ளே.. கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு.. ரெட்மி நோட் 14 5ஜி விலை எவ்வளவு?
ஷியோமி நிறுவனம் ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய ஐவி கிரீன் வண்ணத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வண்ணம் தவிர, மிஸ்டிக் வைட், பேண்டம் பர்பிள் மற்றும் டைட்டன் பிளாக் வண்ணங்களிலும் கிடைக்கிறது. ரூ.18,999 முதல் தொடங்கும் விலையில் பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும்.

6.67 இன்ச் ஃபுல் HD+ டிஸ்ப்ளே.. கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு.. ரெட்மி நோட் 14 5ஜி விலை எவ்வளவு?
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷியோமி, ரெட்மி நோட் 14 5ஜி-யின் புதிய வண்ண வெளியீடான ஐவி கிரீன் (Redmi Note 14 5G Ivy Green) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 2024 டிசம்பரில் ரெட்மி நோட் 14 5ஜி மூன்று வண்ணங்களில் - மிஸ்டிக் வைட், பேண்டம் பர்பிள், டைட்டன் பிளாக் - இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஐவி கிரீன் வண்ணத்தையும் சேர்த்துள்ளது.
ரெட்மி நோட் 14 5ஜி
6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டிற்கு ரூ.18,999, 8 ஜிபி + 128 ஜிபிக்கு ரூ.19,999 மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடலுக்கு ரூ.21,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்ஐ இணையதளம் வழியாக ஃபோனை ஆர்டர் செய்யலாம். ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி, எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கும்போது ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
ரெட்மி நோட் 14 ஸ்மார்ட்போன்
கிரெடிட் கார்டு EMI வசதியிலும் இந்த தள்ளுபடி கிடைக்கும். ஆறு மாதங்களுக்கு நோ-காஸ்ட் EMI வசதியும் ரெட்மி நோட் 14 5ஜி ஐவி கிரீன் ஃபோனுக்குக் கிடைக்கும். ரெட்மி நோட் 14 5ஜி-யின் மற்ற வண்ணங்களில் உள்ள அதே அம்சங்களும் வசதிகளும் ஐவி கிரீன் வண்ணத்திற்கும் உண்டு. ஷியோமியின் ஆண்ட்ராய்டு-14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 1.0 இடைமுகத்தில் இயங்குகிறது.
ரெட்மி நோட் 14 மொபைல்
இந்த ஃபோனில் 6.67 இன்ச் ஃபுல் HD+ டிஸ்ப்ளே உள்ளது. 120Hz அதிகபட்ச புதுப்பிப்பு வீதம். 2100 நிட்ஸ் உச்ச பிரகாசம். கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வருகிறது. மீடியாடெக் டைமென்சிட்டி 7025 அல்ட்ரா எஸ்ஓசி பிராசஸர். 50 மெகாபிக்சல் பிரைமரி சோனி LYTV-600 சென்சார், 8 எம்பி அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார் ஆகியவை பின்புற கேமரா அமைப்பில் உள்ளன. 20 எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது.
ரெட்மி நோட் 14 5ஜி அம்சங்கள்
மேலும் இந்த மொபைலில் IP64 மதிப்பீடு உள்ளது. 5,110 mAh பேட்டரி 45 வாட்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இரண்டு OS மேம்படுத்தல்களையும் நான்கு ஆண்டுகள் பாதுகாப்பு புதுப்பிப்புகளையும் நிறுவனம் வழங்குகிறது.
ரூ.9 ஆயிரம் முன்பணம்; ஒரே சார்ஜில் 165 கிமீ தரும் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்!