50MP கேமரா; AI சப்போர்ட்; கெத்தாக களமிறங்கும் ரெட்மி போன்; என்ன விலை?
ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Notஎ 14 ) சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வரும் 9ம் தேதி அறிமுகமாக உள்ளது.
Redmi smartphones
இதில் ரெட்மி நோட் 14 5ஜி சிறப்பம்சம் குறித்து இப்போது காண்போம். இந்த போனில் 50MP Sony LYT 600)மெயின் கேமராவும், 2MP டெப்த் சென்சார் மற்றும் 16MP செல்ஃபி கேமராவும் இடம்பெற்றுள்ளது. 6.67 இன்ச் HD+ AMOLED டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. மீடியாடெக் டைமென்சிட்டி 7025 அல்ட்ரா Seo சிப்செட் பொருத்தப்பட்டுள்ளதால் போனை இயக்குவதற்கு எளிதாக இருக்கும்.
lowest price smartphones
AI சப்போர்ட் அம்சங்கள் கொண்ட இந்த போன் தூசி மற்றும் தண்ணீருக்கு தாக்குப்பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை கொண்டுள்ளது. மேலும் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கொண்ட 5,110mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் 256ஜிபி ஸ்டோரேஜ் என 2 வேரியன்ட்களில் இந்த போன் விற்பனைக்கு களமிறங்க உள்ளது.
Best smartphones list
ரெட்மி நோட் 14 5ஜி போனின் விலை விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த போனின் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.22,999 ஆகவும், 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.24,999 ஆகவும் இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. அமேசான் தளத்தில் வரும் 9ம் தேதி ரெட்மி நோட் 14 5ஜி விற்பனைக்கு வர உள்ளது.