- Home
- டெக்னாலஜி
- ATM Machine : ஏடிஎம் பின்னில் ஏன் 4 நம்பர் மட்டும் இருக்கு? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
ATM Machine : ஏடிஎம் பின்னில் ஏன் 4 நம்பர் மட்டும் இருக்கு? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
ATM Machine : நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஏடிஎம் (ATM) கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண் (PIN) ஏன் 4 இலக்கங்களாக (4 Digits) மட்டுமே இருக்கிறது என்று எப்போதாவது யோசித்ததுண்டா? இதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் சுவாரசிய வரலாற்றுச் சம்பவத்தை காணலாம்.

ஏடிஎம் கார்டின் சுவாரசியமான வரலாறு
ஏடிஎம் இயந்திரத்தைக் கண்டுபிடித்த பெருமை ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்ட்-பாரன் (John Shepherd-Barron) என்பவைரையே சாரும். 1967-ஆம் ஆண்டு ஜூன் 27 அன்று லண்டனில் உள்ள பார்க்லேஸ் (Barclays) வங்கியில் உலகின் முதல் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டது.
தொடக்கத்தில், இந்த இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுப்பதற்கான பாதுகாப்பு குறியீடாக (PIN) 6 இலக்க எண்களைப் பயன்படுத்தவே ஜான் ஷெப்பர்ட் திட்டமிட்டிருந்தார். ஏனெனில், 6 இலக்க எண்கள் அதிக பாதுகாப்பைத் தரும் என்று அவர் நம்பினார்.
4 இலக்கங்களாக மாறக் காரணம்?
ஜான் ஷெப்பர்ட் தான் உருவாக்கிய இந்த 6 இலக்க பின் நம்பர் முறையைத் தன் மனைவி கரோலின் (Caroline) என்பவரிடம் சோதித்துப் பார்த்தார். ஆனால், கரோலினால் 6 இலக்க எண்களைத் துல்லியமாக நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை.
"என்னால் அதிகபட்சமாக 4 இலக்க எண்களை மட்டுமே எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள முடிகிறது; அதற்கு மேல் உள்ள எண்கள் மறந்து போகின்றன" என்று கரோலின் கூறினார்.
தன் மனைவியின் இந்த எதார்த்தமான பதிலை ஏற்றுக்கொண்ட ஜான் ஷெப்பர்ட், ஏடிஎம் பின் நம்பரை 6 இலக்கத்திலிருந்து 4 இலக்கங்களாகக் குறைத்தார். பொதுமக்களும் இதையே எளிதாக உணர்வார்கள் என்பதால், இதுவே பின்னாட்களில் உலகளாவிய Standard-ஆக மாறியது.
மனித நினைவாற்றலின் உளவியல் (The Psychology of Memory)
மனித மூளையின் குறுகிய கால நினைவாற்றல் (Short-term memory) குறித்து உளவியலாளர் ஜார்ஜ் ஏ. மில்லர் (George A. Miller) நடத்திய ஆராய்ச்சியின் படி, ஒரு சராசரி மனிதனால் 5 முதல் 9 தகவல்களை மட்டுமே தற்காலிகமாக நினைவில் நிறுத்த முடியும்.
4 இலக்க எண்கள் என்பது இந்த வரம்பிற்குள் மிகக் கச்சிதமாகப் பொருந்துவதால், மக்கள் அதை எங்கும் எழுதி வைக்காமல் மனப்பாடமாக வைத்திருக்க உதவுகிறது. மக்கள் பின் எண்களைத் தங்களின் டைரியிலோ அல்லது காகிதத்திலோ எழுதி வைப்பதைத் தவிர்க்கவே இந்த எளிய முறை கடைப்பிடிக்கப்பட்டது.
Keyboard : கீபோர்டு ஏன் ABCD வரிசையில் இல்லை? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா?
4 இலக்க பின் நம்பர் பாதுகாப்பானதா?
4 இலக்க எண்களைப் பயன்படுத்தும்போது 0000 முதல் 9999 வரை மொத்தம் 10,000 சாத்தியமான சேர்க்கைகள் (Combinations) கிடைக்கின்றன. ஒரு திருடனோ அல்லது அந்நியரோ உங்கள் கார்டைப் பயன்படுத்தி பணத்தைத் திருட முயன்றால், அவர் சரியான எண்ணைக் கண்டறிய 10,000-இல் 1 வாய்ப்பு மட்டுமே உள்ளது.
மேலும், தற்போதைய வங்கிகள் 3 முறை தவறான பின் நம்பரை உள்ளிட்டால் ஏடிஎம் கார்டை தற்காலிகமாக முடக்கிவிடுகின்றன (Block). இதனால் யாராலும் எண்களைத் தோராயமாக அடித்துப் பார்த்து (Brute-force attack) பணத்தைத் திருட முடியாது. எனவே 4 இலக்கங்கள் என்பது பாதுகாப்பிற்கும், எளிமைக்கும் இடைப்பட்ட ஒரு சிறந்த சமநிலையாகக் கருதப்படுகிறது.
இன்றைய நிலை
இன்று தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட சூழலில், பாதுகாப்பு காரணங்களுக்காகச் சில சர்வதேச வங்கிகள் 6 இலக்க பின் நம்பர்களைக் கட்டாயமாக்கியுள்ளன. இருப்பினும், ஜான் ஷெப்பர்டின் மனைவி கரோலின் விதைத்த அந்த 4 இலக்க முறைதான் இன்றும் உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஏடிஎம்-களின் அசைக்க முடியாத விதியாகத் தொடர்கிறது.
AI Lawyer : ஒரிஜினல் வக்கீலை தோற்கடித்த AI Lawyer! அப்போ இனிமேல் வக்கீல்களின் நிலை?
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

