யார் இந்த சுசீர் பாலாஜி? சாட்ஜிபிடி நிறுவனத்தின் ஆய்வாளரின் மர்ம மரணம்!
சாட்ஜிபிடி (ChatGPT) சாட்பாட்டை உருவாக்கிய ஓபன் ஏ.ஐ. (OpenAI) நிறுவனத்தில் ஆய்வாளராக இருந்த சுசீர் பாலாஜி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Who is Suchir Balaji?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 26 வயதான ஆராய்ச்சியாளரும் முன்னாள் ஓபன்ஏஐ ஊழியருமான சுசீர் பாலாஜி நவம்பர் 26ஆம் தேதி தனது சான் பிரான்சிஸ்கோ குடியிருப்பில் உயிரிழந்தார். சான் பிரான்சிஸ்கோ தலைமை மருத்துவர் அவரது உடல்நிலைநை சரிபார்த்த பின்பு அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார் என உறுதி செய்தார்.
Suchir Balaji, OpenAI researcher
லோயர் ஹைட் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் காவல்துறை மற்றும் மருத்துவர்கள் சோதனையிட்டனர். இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் பரவி பலவிதமான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது. எலான் மஸ்க் போன்ற குறிப்பிடத்தக்க பிரபலங்கள் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
Suchir Balaji on Copyright
சுசீர் பாலாஜி , பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்த ஒரு சிறந்த கம்யூட்டர் வல்லுநர். கல்லூரி காலத்தில், அவர் OpenAI மற்றும் Scale AI உடன் பயிற்சி பெற்றார். இதன் மூலம் அதிநவீன தொழில்நுட்பத்தில் அனுபவம் கொண்டவராக மாறினார்.
Suchir Balaji about OpenAI
பட்டப்படிப்புக்குப் பிறகு, அவர் OpenAI நிறுவனத்தில் முழுநேரப் பணியில் சேர்ந்தார். அங்கு இவர் WebGPT மற்றும் GPT-4 இன் பல முக்கிய இயந்திரக் கற்றல் திட்டங்களில் பணியாற்றினார். இவரது லிங்க்ட்இன் சுயவிவரத்தின்படி, ChatGPT சாட்பாட்டை உருவாக்குவதில் இவரது பங்கும் உள்ளது.
Suchir Balaji Career
நான்கு ஆண்டுகளில், பாலாஜி OpenAI இன் டெவலப்மென்ட் குழுவில் முக்கிய அங்கம் வகித்தார். அந்நிறுவனத்தின் AI தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்தார். இருப்பினும், அந்தத் தொழில்நுட்பத்தின் சமூக தாக்கங்கள் பற்றி நெறிமுறை சார்ந்த கேள்விகளை எழுப்பினார். இதனால் அவர் அந்த நிறுவனத்தை விட்டே வெளியேறினார். ஓபன் AI பணிக்கு முன்பு, பாலாஜி கோரா (Quora) நிறுவனத்தில் ஒரு சாப்ட்வேர் என்ஜினியராகப் பணியாற்றினார்.
OpenAI Copyright Approach
பாலாஜி அக்டோபர் மாதம் தி நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், OpenAI இன் பதிப்புரிமை தொடர்பான அணுகுமுறை குறித்து கவல தெரிவித்தார். அவரது கருத்துகள் அதிக கவனம் பெற்றன. ஓபன் ஏ.ஐ. நிறுவனம் அதன் மாடல்களைப் பயிற்றுவிப்பதற்காக பதிப்புரிமை பெற்ற தரவைப் பயன்படுத்துவது சரியானதா, சட்டப்பூர்வமானதா என்று கேள்வி எழுப்பினார்.