இனி உங்க காதலியின் Chat பாதுகாப்பா இருக்கும்.. யாராலும் படிக்க முடியாது.! WhatsApp அசத்தல் அப்டேட்
வாட்ஸ்அப் பயனாளர்கள் தங்கள் பிரைவேட் சாட்டை (private chat) லாக் செய்யும் வசதியை அறிமுகப்படுத்துவதாக மெட்டா நிறுவனம், அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உலகில் அனைவரும் பயன்படுத்தும் மெசேஜிங் செயலியாக வாட்ஸ்அப் இருக்கவே செய்கிறது. இப்போது பல கோடி பேர் உலகெங்கும் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் இல்லாவிட்டால் இயங்கவே முடியாது என்ற நிலைமை வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
தற்போது வாட்ஸ்அப்பின் சொந்த நிறுவனமான மெட்டா சூப்பரான அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஆப் அப்டேட் மூலம் இந்த அம்சம் பயனர்களுக்கு கிடைக்கும். அது என்ன வசதி என்றால்,சாட் லாக் (Chat Lock) தான் அது. இனிமேல் வாட்ஸ்அப் பயனாளர்கள் தங்கள் பிரைவேட் சாட்டை (private chat) லாக் செய்யலாம்.
உங்கள் மொபைலின் கடவுச்சொல் அல்லது பயோமெட்ரிக் மூலம் மட்டும் பிரைவேட் சாட்டை திறந்து படிக்க முடியும். இந்த அம்சம் குறிப்பாக குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடன் தங்கள் தொலைபேசிகளைப் பகிர்ந்துகொள்பவர்களுக்கு அல்லது அவர்களின் உரையாடல்களை பாதுகாக்க விரும்புபவர்களுக்கு உதவும்.
வாட்ஸ்அப் சில மாதங்களில் Chat Lockக்கான கூடுதல் விருப்பங்களைச் சேர்க்கப் போவதாக அறிவித்தது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு முன்னெப்போதையும் விட மிக முக்கியமானதாகிவிட்டது. வாட்ஸ்அப்பின் இந்த அசத்தலான அப்டேட் வாடிக்கையாளர்களிடையே பாராட்டை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க..புதிய வழித்தடத்தில் 5 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. எங்கெல்லாம் தெரியுமா?