- Home
- டெக்னாலஜி
- WhatsApp Call Recording: வாட்ஸ்அப் கால்களை ரெக்கார்டு செய்யலாமா? பலருக்கும் தெரியாத ரகசியம்!
WhatsApp Call Recording: வாட்ஸ்அப் கால்களை ரெக்கார்டு செய்யலாமா? பலருக்கும் தெரியாத ரகசியம்!
WhatsApp Call Recording: சாதாரண போன் கால்களை சுலபமாக ரெக்கார்டு செய்யலாம். ஆனால், வாட்ஸ்அப் கால்களை ரெக்கார்டு செய்ய நேரடி வசதி இல்லை. ஆனாலும், சில எளிய வழிகள் மூலம் வாட்ஸ்அப் கால்களையும் ரெக்கார்டு செய்ய முடியும். அது எப்படி என்று பார்க்கலாம்.
15

Image Credit : Getty
ஆண்ட்ராய்டு போனில் எப்படி ரெக்கார்டு செய்வது?
பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களில் ஸ்கிரீன் ரெக்கார்டர் வசதி இருக்கும். அதை பயன்படுத்தி வாட்ஸ்அப் கால்களை ரெக்கார்டு செய்யலாம். கால் பேசும்போது ஸ்கிரீன் ரெக்கார்டரை ஆன் செய்தால் போதும். சில போன்களில் இன்டர்னல் ஆடியோ ரெக்கார்டு ஆகாது. அப்போது, ஸ்பீக்கர் மோடில் வைத்து ரெக்கார்டு செய்ய வேண்டும்.
Add Asianetnews Tamil as a Preferred Source

25
Image Credit : Gemini AI
மூன்றாம் தரப்பு செயலிகளும் உதவும்
உங்கள் போனில் உள்ள ஸ்கிரீன் ரெக்கார்டர் சரியாக வேலை செய்யவில்லை என்றால், ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் ரெக்கார்டிங் ஆப்களை பயன்படுத்தலாம். இந்த ஆப்கள் மூலம் ஸ்கிரீன் வீடியோ மற்றும் கால் ஆடியோ இரண்டையும் சேமிக்கலாம். ஆனால், எந்த ஆப்பை டவுன்லோட் செய்வதற்கு முன்பும் அதன் பிரைவசி பாலிசியை சரிபார்க்கவும். போலியான ஆப்கள் உங்கள் தகவல்களைத் திருட வாய்ப்புள்ளது.
35
Image Credit : Getty
ஐபோன் யூசர்களுக்கு இது கொஞ்சம் கடினம்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம். அதனால், வாட்ஸ்அப் கால்களை எளிதாக ரெக்கார்டு செய்வது கடினம். மேக்புக் (MacBook) உதவியுடன் அல்லது மற்றொரு போனைப் பயன்படுத்தி ஸ்பீக்கர் மோடில் ரெக்கார்டு செய்யலாம். ஆனால், இப்படி செய்யும்போது ஆடியோ தரம் சற்று குறைய வாய்ப்புள்ளது.
45
Image Credit : Getty
கால் ரெக்கார்டு செய்யும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரது காலை ரெக்கார்டு செய்வது சில நாடுகளில் சட்டவிரோதமானது. எனவே, தேவைப்பட்டால் மட்டுமே ரெக்கார்டு செய்யவும். அடுத்தவரின் பிரைவசியை மதிக்க வேண்டும். ரெக்கார்டு செய்த ஃபைல்களை பாதுகாப்பாக வைத்திருங்கள். இல்லையெனில், அது தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
55
Image Credit : Getty
வாட்ஸ்அப்பில் நேரடியாக ரெக்கார்டிங் ஃபீச்சர் வருமா?
தற்போது மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப்பில் அதிகாரப்பூர்வ கால் ரெக்கார்டிங் வசதி இல்லை. எதிர்காலத்தில் பயனர்களின் தேவைக்கேற்ப இந்த வசதி வரலாம் என டெக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவரை, ஸ்கிரீன் ரெக்கார்டர் போன்ற பாதுகாப்பான வழிகளையே பயன்படுத்த வேண்டும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.
Latest Videos

