200 ரூபாய் கூட இல்ல... 15 OTT தளங்களை ஃப்ரீயா பார்க்கலாம்!
தொலைத்தொடர்புத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வோடபோன் ஐடியா (Vi) பல திட்டங்களை வழங்குகிறது. 200 ரூபாய்க்குக் குறைவான ரீசார்ஜ்களுக்கு இலவச OTT சந்தாவை வழங்குகிறது.
Vi Free OTT Plans
பிரபலமான OTT சேவைகளுக்கு தனித்தனியாக சந்தா செலுத்துவதற்குப் பதிலாக, இலவச OTT சந்தாவை வழங்கும் திட்டங்களில் ரீசார்ஜ் செய்யலாம். ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் தவிர, வோடபோன் ஐடியாவும் (Vi) இத்தகைய திட்டங்களை வழங்குகிறது. இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்தத் திட்டங்களில் சிலவற்றின் விலை ரூ. 200க்கும் குறைவாக உள்ளன.
Vi 95 OTT Plan
வோடபோன் ஐடியாவின் ரூ.95 திட்டம் 14 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த ரீசார்ஜ் செய்தால், SonyLiv சந்தா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதனுடன், இந்த திட்டம் 4GB கூடுதல் டேட்டாவும் கிடைக்கும்.
Vi 151 OTT Plan
ரூ.151 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில், Vi சந்தாதாரர்களுக்கு 30 நாட்களுக்கு 4GB கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர, இந்த திட்டம் மூன்று மாதங்களுக்கான Disney + Hotstar சந்தாவையும் கொடுக்கிறது.
Vi 154 OTT Plan
இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், ஒரு மாதம் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டம் Vi Movies மற்றும் Vi TV லைட் சந்தாவும் கிடைக்கும். கூடுதலாக ZEE5, SonyLIV, SunNXT மற்றும் Fancode உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட OTT தளங்களையும் இலவசமாகப் பார்க்கலாம்.
Vi 169 OTT Plan
3 மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாகப் பெற விரும்பினால், இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம். இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 8GB கூடுதல் டேட்டாவையும் வழங்கும்.
Vi 175 OTT Plan
இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த திட்டத்தில் வோடபோன் ஐடியா (Vi) சந்தாதாரர்கள் 10GB கூடுதல் டேட்டாவைப் பெறலாம். இது தவிர, இத்திட்டத்துடன் ரீசார்ஜ் செய்தால், ZEE5, SonyLIV மற்றும் Fancode போன்ற 13க்கும் மேற்பட்ட OTT தளங்களுக்கான சந்தாவுடன் Vi Movie, Vi TV சந்தாவையும் இலவசமாகத் தருகிறது.