தினமும் பயன்படுத்தும் இயர்பட்ஸ் இவ்வளவு ஆபத்தானதா? மொபைல் யூசர்களே உஷார்!
வயர்லெஸ் இயர்பட்ஸ் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதன் பாதுகாப்பு குறைபாடுகளும் வெளிவந்துள்ளன. சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இந்த அபாயங்களிலிருந்து உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கலாம்.

வயர்லெஸ் இயர்பட்ஸ் அபாயம்
இன்றைய வாழ்க்கையில் வயர்லெஸ் இயர்பட்ஸ் பலருக்கும் அவசியமான சாதனமாகிவிட்டது. பாடல் கேட்பது, ஆன்லைன் வகுப்புகள், வீடியோ கால், கேமிங், அலுவலக சந்திப்பு என தினசரி பல வேலைகளில் இது பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் “இது பாதுகாப்பானது தான்” என்ற நம்பிக்கையுடன் மக்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சமீப கால சைபர் ஆய்வுகள், இயர்பட்ஸ் பயன்படுத்தும்போது சில மறைமுக அபாயங்களும் உள்ளன. குறிப்பாக பாதுகாப்பு அமைப்புகள் பலவீனமாக இருந்தால், இது தனியுரிமை பிரச்சினையாக மாறலாம்.
இயர்பட்ஸ் பாதுகாப்பு
பல இயர்பட்ஸ்களில் Fast Pair என்ற வசதி இருக்கும். இது சாதனத்தை மொபைலுடன் வேகமாக இணைக்க உதவும். ஆனால் சில நேரங்களில் இந்த வசதியிலேயே தொழில்நுட்ப குறைபாடுகள் இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அந்த குறைபாடுகளை பயன்படுத்தி ஹேக்கர்கள் அனுமதி இல்லாமல் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது. பயனர் கவனிக்காத நேரத்தில் இணைப்பு நடந்து விட்டாலும், சில நேரங்களில் எந்த எச்சரிக்கை செய்தியும் தெரியாமல் போகலாம்.
ஆராய்ச்சியாளர்கள் கருத்து
பெல்ஜியத்தில் உள்ள KU Leuven பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் “Whisper Pair” என்று குறிப்பிட்டுள்ளனர். இதில் ஹேக்கர் அருகில் இருந்தாலே போதும், இயர்பட்ஸுடன் மறைமுகமாக இணைவது சாத்தியமாகலாம். அப்படிச் சேர்ந்துவிட்டால், அழைப்புகள் வரும் ஒலிகளைக் கேட்பது, ஆடியோ கட்டுப்பாட்டை மாற்றுவது, தனிப்பட்ட உரையாடல்களைப் பதிவு செய்வது போன்ற ஆபத்துகள் உருவாகலாம். சில நேரங்களில் பயனரின் இருப்பிடத்தை கணிக்க கூட வாய்ப்பு உள்ளது.
மொபைல் பாதுகாப்பு டிப்ஸ்
ஆனால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. சில முன்னெச்சரிக்கைகள் போதும். தேவையில்லாதபோது Bluetooth-ஐ அணைத்துவிடுங்கள். பொதுமக்கள் இடங்களில் முக்கியமான அழைப்புகளை இயர்பட்ஸ் மூலம் பேசுவதை குறைக்கவும். மொபைல் மற்றும் இயர்பட்ஸ் மென்பொருள் update-ஐ தவறாமல் செய்யுங்கள். அறியாத சாதன இணைப்புகளை அனுமதிக்காதீர்கள். பாதுகாப்பு அமைப்புகளை அவ்வபோது சரிபார்ப்பது நல்லது. சிறிய கவனம் கூட உங்கள் தனியுரிமையை பெரிய அளவில் காக்கும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

