அதிக மைலேஜ் கொடுக்கும் கார்கள்... டாப் 5 பட்டியல் இதோ... எந்தெந்த மாடல்கள் இருக்குனு பாருங்க...!
இந்திய சந்தையில் விற்பனையாகும் கார் மாடல்களில் அதிக மைலேஜ் கொடுக்கும் மாடல்களின் டாப் 5 பட்டியல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
டொயோட்டா கிளான்சா AMT / மாருதி சுசுகி பலேனோ AMT
5 - டொயோட்டா கிளான்சா AMT / மாருதி சுசுகி பலேனோ AMT
2022 மாருதி பலேனோ மற்றும் டொயோட்டா கிளான்சா மாடல்களில் 1.2 லிட்டர், 4 சிலிண்டர் டூயல்ஜெட் K12N பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார்கள் லிட்டருக்கு 22.94 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகின்றன. புதிய பலேனோ மாடல் விலை ரூ. 6 லட்சத்து 35 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய கிளான்சா மாடல் விலை ரூ. 6 லட்சத்து 39 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9 லட்சத்து 69 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மாருதி சுசுகி ஸ்விப்ட் AMT
4 - மாருதி சுசுகி ஸ்விப்ட் AMT
மாருதி சுசுகி ஸ்விப்ட் மாடலில் K12N பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஐடில் ஸ்டார்ட் ஸ்டாப் அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 90 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 23.2 கிலோமீட்டரும், ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 23.76 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகின்றன.
மாருதி சுசுகி டிசையர் AMT
3- மாருதி சுசுகி டிசையர் AMT
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புது பேஸ்லிப்ட் டிசையர் மாடல் ஏராளமான மாற்றங்களை கொண்டிருந்தது. இவற்றில் மிக முக்கிய அப்டேட் ஆக 1.2 லிட்டர் K12N பெட்ரோல் என்ஜின் பார்க்கப்படுகிறது. இது முந்தைய மாடலில் உள்ள என்ஜினை விட 7 ஹெச்.பி. வரை அதிக திறன் வெளிப்படுத்துகிறது. இந்த கார் மேனுவல் மாடல் லிட்டருக்கு 23.26 கிலோமீட்டர் மைலேஜும், ஆட்டோமேடிக் மாடல் லிட்டருக்கு 24.12 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. இது இந்தியாவில் கிடைக்கும் அதிக மைலேஜ் கொண்ட செடான் மாடல் ஆகும்.
மாருதி சுசுகி வேகன்ஆர் R 1.0 MT
2 -மாருதி சுசுகி வேகன்ஆர் R 1.0 MT
மாருதி சுசுகி வேகன்ஆர் மாடல் அதிக மைலேஜ் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மாடல் எனலாம். இதில் 1.2 லிட்டர் மற்றும் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் சிறிய 1 லிட்டர் என்ஜின் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 25.19 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. இதன் 1.2 லிட்டர் ஆட்டோமேடிக் மாடல் லிட்டருக்கு 24.43 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
மாருதி சுசுகி செலரியோ VXi AMT
1- மாருதி சுசுகி செலரியோ VXi AMT
மாருதி சுசுகி செலரியோ மாடல் லிட்டருக்கு 26.68 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. இது இந்திய சந்தையில் அதிக மைலேஜ் வழங்கும் கார் மாடல்களில் முதலிடத்தை பிடித்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து செலரியோ ZXi மற்றும் ZXi+ AMT வேரியண்ட்கள் 26 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகின்றன. செலரியோ மாடலில் குறைந்த மைலேஜ் வழங்கும் மாடல் கூட லிட்டருக்கு 24.97 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.