MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • பிரசன்டேஷன் (Presentation) செய்ய பயமா? கூகுள் ஜெமினியின் இந்த 5 'Prompts' இருந்தால் போதும்... அரங்கமே அதிரும்!

பிரசன்டேஷன் (Presentation) செய்ய பயமா? கூகுள் ஜெமினியின் இந்த 5 'Prompts' இருந்தால் போதும்... அரங்கமே அதிரும்!

Presentation கல்லூரி அல்லது அலுவலக பிரசன்டேஷனில் அசத்த வேண்டுமா? கூகுள் ஜெமினி AI-யைப் பயன்படுத்தி ஸ்லைடு டிசைன், ஸ்கிரிப்ட் மற்றும் ஐடியாக்களைப் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் உள்ளே.

2 Min read
Suresh Manthiram
Published : Dec 03 2025, 08:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Presentation கூகுள் ஜெமினியின் இந்த 5 'Prompts' இருந்தால் போதும்... அரங்கமே அதிரும்!
Image Credit : Gemini

Presentation கூகுள் ஜெமினியின் இந்த 5 'Prompts' இருந்தால் போதும்... அரங்கமே அதிரும்!

கல்லூரி அசைன்மென்ட் ஆகட்டும் அல்லது அலுவலக மீட்டிங் ஆகட்டும், "பிரசன்டேஷன்" (Presentation) என்றாலே பலருக்கு கையும் ஓடும், காலும் ஓடும். என்ன பேசுவது? ஸ்லைடில் என்ன வைப்பது? என்று மணிக்கணக்கில் யோசித்துத் தலை வெடித்துவிடும். ஆனால், இனி அந்தக் கவலையே வேண்டாம். உங்கள் உதவியாளராகக் கூகுள் ஜெமினி (Google Gemini) இருக்கும்போது பயம் எதற்கு? உங்கள் அடுத்த பிரசன்டேஷனை 'வேற லெவலில்' மாற்ற உதவும் முக்கியமான பிராம்ப்டுகள் (Prompts) இதோ!

26
1. ஐடியா கிடைக்கவில்லையா?
Image Credit : Getty

1. ஐடியா கிடைக்கவில்லையா?

சில நேரங்களில் தலைப்பு மட்டும் கையில் இருக்கும், ஆனால் அதை எப்படித் தொடங்குவது என்று தெரியாது. அப்போது ஜெமினியிடம் இப்படி கேளுங்கள்.

• Prompt: "I am a [Student/Professional] giving a presentation on [Topic]. Give me 5 unique and engaging angles to approach this topic."

• (நான் [தலைப்பு] பற்றி பிரசன்டேஷன் செய்யப் போகிறேன். இதை வித்தியாசமாக அணுக 5 ஐடியாக்களைக் கொடு).

இதை டைப் செய்தால், யாரும் யோசிக்காத கோணத்தில் ஜெமினி உங்களுக்கு ஐடியாக்களைக் கொடுக்கும்.

Related Articles

Related image1
ஓசியில் ஜெமினி யூஸ் பண்றீங்களா? அப்போ இது உங்களுக்குத்தான்! கூகுள் போட்ட புது ரூல்ஸ்.. உஷார்!
Related image2
கூகுள் ஜெமினி அதிரடி அப்டேட்: இனி உங்கள் Gmail, Drive ஃபைல்களையும் படிக்கும் AI! இனி மின்னஞ்சல்களைத் தேட வேண்டாம்!
36
2. ஸ்லைடு வடிவமைப்பு
Image Credit : our own

2. ஸ்லைடு வடிவமைப்பு

எந்த ஸ்லைடில் எதை வைப்பது என்ற குழப்பம் இருக்கிறதா? ஒரு முழுமையான அவுட்லைனை (Outline) நொடியில் பெறலாம்.

• Prompt: "Create a 10-slide presentation outline for [Topic]. Include a catchy introduction, key points, and a strong conclusion."

• (எனது தலைப்பிற்காக 10 ஸ்லைடுகள் கொண்ட ஒரு அவுட்லைனைத் தயார் செய். ஒரு ஈர்ப்பான முன்னுரை மற்றும் முடிவுரை அதில் இருக்கட்டும்).

46
3. பேசுவதற்கான ஸ்கிரிப்ட்
Image Credit : Gemini

3. பேசுவதற்கான ஸ்கிரிப்ட்

ஸ்லைடு ரெடி! ஆனால் அதைப் பார்த்து என்ன பேசுவது? ஜெமினி உங்களுக்கு ஒரு சிறந்த பேச்சாளருக்கான ஸ்கிரிப்டை எழுதித் தரும்.

• Prompt: "Write a script for Slide 1 about [Sub-topic]. Keep the tone professional but engaging. Add a joke or a quote to start."

• (ஸ்லைடு 1-ல் பேசுவதற்கு ஒரு ஸ்கிரிப்டை எழுது. கேட்பதற்குச் சுவாரஸ்யமாகவும், இடையில் ஒரு ஜோக் அல்லது தத்துவத்துடனும் இருக்க வேண்டும்).

56
4. படங்களை உருவாக்க
Image Credit : Gemini

4. படங்களை உருவாக்க

கூகுள் ஸ்லைடில் சாதாரண படங்களை வைப்பதற்குப் பதில், ஜெமினி மூலம் நீங்களே பிரத்யேகமான படங்களை உருவாக்கலாம்.

• Prompt: "Generate an image of a futuristic city with flying cars for my presentation background."

• (எனது பிரசன்டேஷனுக்காக பறக்கும் கார்களுடன் கூடிய ஒரு எதிர்கால நகரத்தின் படத்தை உருவாக்கு).

66
5. கேள்வி-பதில் செக்ஷன் (Prepare for Q&A)
Image Credit : Gemini

5. கேள்வி-பதில் செக்ஷன் (Prepare for Q&A)

பிரசன்டேஷன் முடிவில் யாராவது "கேள்வி இருக்கா?" என்று கேட்டால் நமக்கு உதறல் எடுக்கும். கடினமான கேள்விகளுக்கு முன்னரே தயாராக ஜெமினி உதவும்.

• Prompt: "Act as a tough audience member and ask me 5 difficult questions about [Topic]. Also, provide answers to them."

• (நீ ஒரு பார்வையாளராக இருந்து, என் தலைப்பில் 5 கடினமான கேள்விகளைக் கேள். அதற்கான பதிலையும் நீயே கொடு).

இனி என்ன? இந்த பிராம்ப்டுகளைப் பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் அடுத்த பிரசன்டேஷனில் கைத்தட்டல் சத்தம் காதைப் பிளக்கும்!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்
தொழில்
Latest Videos
Recommended Stories
Recommended image1
நிஜமான பாட்டா? இல்லை AI போட்ட டியூனா? போலியை கண்டுபிடிக்க 5 சீக்ரெட் டிப்ஸ்!
Recommended image2
ஒரு செல்ஃபி போதும்... உங்கள் வயதைச் சொல்லும் AI! பாதுகாப்பா? ஆபத்தா? இணைய உலகின் புதிய சர்ச்சை!
Recommended image3
சார்ஜரை இனி தூக்கிப் போடுங்க! 6500mAh பேட்டரியுடன் வந்தாச்சு Oppo A6x - விலை இவ்ளோ கம்மியா?
Related Stories
Recommended image1
ஓசியில் ஜெமினி யூஸ் பண்றீங்களா? அப்போ இது உங்களுக்குத்தான்! கூகுள் போட்ட புது ரூல்ஸ்.. உஷார்!
Recommended image2
கூகுள் ஜெமினி அதிரடி அப்டேட்: இனி உங்கள் Gmail, Drive ஃபைல்களையும் படிக்கும் AI! இனி மின்னஞ்சல்களைத் தேட வேண்டாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved