MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Zero Watt Bulb : ஜீரோ வாட் பல்பு போட்டா கரண்ட் பில் வராதா? உண்மை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

Zero Watt Bulb : ஜீரோ வாட் பல்பு போட்டா கரண்ட் பில் வராதா? உண்மை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

Zero Watt Bulb : ஜீரோ வாட் பல்பு போட்டா கரண்ட் பில்லே வராதுன்னு ஒரு நம்பிக்கை இருக்கே, அது உண்மையா? அந்த பல்பு உண்மையிலேயே கரண்ட் இழுக்காதா? இதைப் பத்தி தெரிஞ்சா நீங்க ஆச்சரியப்படுவீங்க.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jun 21 2026, 01:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
உங்க வீட்ல ஜீரோ வாட் பல்பு யூஸ் பண்றீங்களா?
Image Credit : our own

உங்க வீட்ல ஜீரோ வாட் பல்பு யூஸ் பண்றீங்களா?

இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் ராத்திரி நேரத்துல பெட்ரூம்லயோ ஹால்லயோ ஒரு சின்ன, மங்கலான வெளிச்சம் தரும் பல்பு எரிஞ்சிட்டு இருக்கும். இதைத்தான் நாம பல வருஷமா 'ஜீரோ வாட் பல்பு'ன்னு சொல்லிட்டு இருக்கோம். ஆனா, இது உண்மையிலேயே ஜீரோ கரண்ட் தான் எடுக்குதா? இந்த நம்பிக்கைக்குப் பின்னாடி இருக்கிற உண்மையை பார்க்கலாம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ஜீரோ மின்சாரம்ங்கிறது சாத்தியமா?
Image Credit : Gemini

ஜீரோ மின்சாரம்ங்கிறது சாத்தியமா?

ஜீரோ மின்சாரம் சாத்தியமா? நிச்சயமா இல்லை. ஒரு பல்பு எரியுதுன்னா, அது கண்டிப்பா மின்சாரத்தை எடுக்குதுன்னு அர்த்தம். இது ரொம்ப சிம்பிளான அறிவியல். கரண்ட்டே இல்லாம, எந்த எனர்ஜியும் எடுக்காம எந்த பல்பும் எரியாது. அதனால, 'ஜீரோ வாட்'ங்கிறது வெறும் பேருதான்.

Related Articles

Related image1
உங்க கேஸ் ஸ்டவ் ஆரஞ்சு நிறத்துல எரியுதா? அப்படீன்னா உயிருக்கே ஆபத்து! உடனே இத செய்யுங்க!
Related image2
Fridge Blast : குளிர்சாதனப் பெட்டி வெடிப்பதற்கான 7 காரணங்கள்! தடுப்பது எப்படி?
36
அப்போ எப்படி இந்த பேர் வந்துச்சு?
Image Credit : Getty

அப்போ எப்படி இந்த பேர் வந்துச்சு?

இந்த பேருக்குப் பின்னாடி ஒரு பெரிய கதை இருக்கு. அந்த காலத்துல நம்ம வீடுகள்ல அனலாக் மீட்டர் இருந்துச்சு. அதுல ஒரு தட்டு சுத்தி, ரீடிங் காட்டும். அந்த பழைய மீட்டர்களுக்கு ரொம்ப குறைவான மின்சாரப் பயன்பாட்டைக் கண்டுபிடிக்கிற திறன் இல்லை. வீட்ல ஃபேன், லைட், டிவி எல்லாத்தையும் ஆஃப் பண்ணிட்டு, இந்த சின்ன பல்பை மட்டும் போட்டா, மீட்டர்ல இருக்கிற முள் நகரவே நகராது. அதைப் பார்த்த மக்கள், 'ஓ... இதுக்கு கரண்ட் பில் வராது'ன்னு முடிவு பண்ணி, இதுக்கு 'ஜீரோ வாட் பல்பு'ன்னு பேர் வச்சிட்டாங்க.
46
டிஜிட்டல் மீட்டர் வந்ததும் சீன் மாறிடுச்சு!
Image Credit : Gemini

டிஜிட்டல் மீட்டர் வந்ததும் சீன் மாறிடுச்சு!

ஆனா இப்போ காலம் மாறிடுச்சு. பழைய அனலாக் மீட்டர்களுக்கு பதிலா டிஜிட்டல் மீட்டர்கள் வந்துடுச்சு. இந்த புது டிஜிட்டல் மீட்டர்கள் ரொம்ப ஷார்ப்பா வேலை செய்யும். ரொம்ப குறைவான கரண்ட் பயன்பாட்டைக் கூட இது ஈஸியா கண்டுபிடிச்சிடும். அதனால, இப்போ நீங்க அந்த 'ஜீரோ வாட்' பல்பை போட்டா, டிஜிட்டல் மீட்டர் உடனே ரீடிங்கை காட்டிடும். ஆக, இந்த பல்பு போட்டாலும் கரண்ட் பில் கொஞ்சமாவது ஏறும்.
56
அப்போ இது எவ்வளவு கரண்ட் எடுக்கும்?
Image Credit : our own

அப்போ இது எவ்வளவு கரண்ட் எடுக்கும்?

நாம பயன்படுத்துற பழைய 'ஜீரோ வாட்' பல்புகள் உண்மையில 10-ல இருந்து 15 வாட்ஸ் வரைக்கும் கரண்ட் எடுக்கும். சில பல்புகள் 5 வாட்ஸ் வரைக்கும் எடுத்தாலும், எப்பவுமே ஜீரோ வாட்ஸ் கிடையாது. ஆனா, இப்போ வர்ற நவீன LED 'ஜீரோ வாட்' பல்புகள் ரொம்ப திறமையா வேலை செய்யுது. இது பொதுவா 0.3-ல இருந்து 1 வாட் மின்சாரத்தை மட்டும்தான் பயன்படுத்துது. பழைய பல்புகளோட ஒப்பிடும்போது இது ரொம்ப ரொம்பக் குறைவு, ஆனா ஜீரோ கிடையாது.

இதையும் படிங்க : Post Office Schemes : பணத்தை அள்ளிக் கொடுக்கும் தபால் துறையின் டாப் 7 திட்டங்கள்!

66
LED ஜீரோ வாட் பல்புக்கு மாறலாமா?
Image Credit : our own

LED ஜீரோ வாட் பல்புக்கு மாறலாமா?

ராத்திரி நேரத்துல உங்களுக்கு மங்கலான வெளிச்சம் தேவைப்பட்டா, பழைய பல்புகளுக்கு பதிலா நவீன LED பல்புகளை பயன்படுத்துறதுதான் பெஸ்ட் சாய்ஸ். இது ரொம்ப குறைவான கரண்ட்டை எடுக்கும், அதிக நாள் உழைக்கும், சூடாகவும் ஆகாது. இதனால, உங்களுக்குத் தேவையான வெளிச்சமும் கிடைக்கும், கரண்ட் பில்லும் ரொம்ப லேசாத்தான் ஏறும்.

Secret Dating : திருமணம் தாண்டிய ரகசிய உறவுகள் : இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த தமிழக நகரம்!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தொழில்நுட்பம்
தொழில்நுட்பச் செய்திகள்
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Best Camera Phones: கன்டென்ட் கிரியேட்டரா நீங்க? வீடியோ எடுக்க டாப் 5 கேமரா போன்கள் இதோ!
Recommended image2
WhatsApp Rs 79: இனி வாட்ஸ்அப்புக்கும் மாத கட்டணம்.. ரூ.79 செலுத்தினால் கிடைக்கும் புதிய வசதிகள் என்ன?
Recommended image3
School Gadgets: படிப்பை ஸ்மார்ட்டாக்கும் 5 கேட்ஜெட்ஸ்... மாணவர்களுக்கு பெற்றோர் வாங்கிக் கொடுக்கலாம்!
Related Stories
Recommended image1
உங்க கேஸ் ஸ்டவ் ஆரஞ்சு நிறத்துல எரியுதா? அப்படீன்னா உயிருக்கே ஆபத்து! உடனே இத செய்யுங்க!
Recommended image2
Fridge Blast : குளிர்சாதனப் பெட்டி வெடிப்பதற்கான 7 காரணங்கள்! தடுப்பது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved