MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Artificial Intelligence: டெக்னாலஜியை நாம யூஸ் பண்றோமா? இல்ல அது நம்மள யூஸ் பண்ணுதா?

Artificial Intelligence: டெக்னாலஜியை நாம யூஸ் பண்றோமா? இல்ல அது நம்மள யூஸ் பண்ணுதா?

நாமதான் டெக்னாலஜியை பயன்படுத்துறோம்னு நினைச்சுட்டு இருக்கோம். ஆனா, செல்போன் மாதிரி, செயற்கை நுண்ணறிவு (AI) நம்மள பயன்படுத்த ஆரம்பிச்சா என்ன ஆகும்? இது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Mar 30 2026, 11:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
செயற்கை நுண்ணறிவு என்னவெல்லாம் செய்கிறது...
Image Credit : Getty

செயற்கை நுண்ணறிவு என்னவெல்லாம் செய்கிறது...

சதித்திட்டம் தீட்டுவது, பழிவாங்குவது, யாருக்கும் புரியாத மொழியில் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க் அமைத்து பேசிக்கொள்வது... இதெல்லாம் யார் செய்வார்கள்? தீவிரவாதிகள் என்றுதானே நினைப்போம்? ஆனால், இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) இயந்திரங்கள் இந்த வேலைகளைச் செய்யத் தொடங்கியுள்ளன. இப்போதைக்கு இது மிகச் சிறிய அளவில்தான் நடக்கிறது. ஆனால், இன்னும் சில ஆண்டுகளில் நிலைமை மனிதக் கட்டுப்பாட்டை மீறிப் போய்விடும் என்கிறார்கள் நிபுணர்கள். மனிதனை விட புத்திசாலியான, மனிதனால் கட்டுப்படுத்த முடியாத இயந்திரங்களை AI-களே உருவாக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டனவாம். ஏதோ சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் பார்ப்பது போல இருந்தாலும், இதுதான் நிஜம்.
24
இப்போது எல்லோரும் பத்திரிகையாளர்கள்தான்...
Image Credit : Getty

இப்போது எல்லோரும் பத்திரிகையாளர்கள்தான்...

முன்பெல்லாம் ஒரு படம் பார்க்க தியேட்டருக்குப் போக வேண்டும், சென்சார் இருந்தது. இப்போது ரீல்ஸ், ஷார்ட்ஸ் என எல்லாம் கைக்கு வந்துவிட்டது. யார் வேண்டுமானாலும் பார்க்கலாம், எந்தக் கட்டுப்பாடும் இல்லை. யார் வேண்டுமானாலும் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து, மைக்கை எடுத்துக்கொண்டு கேள்வி கேட்கலாம். ஒரு பூங்காவில், ஒரு தம்பதி தங்கள் இரண்டு குழந்தைகளுடன் அமர்ந்திருக்கிறார்கள். 3 வயது குழந்தை வீட்டுக்குப் போக வேண்டும் என்று அழுகிறது. அப்போது இரண்டு யூடியூபர்கள் வந்து, 'நீங்க குழந்த கடத்தல் கும்பலா?' என்று மிரட்டுகிறார்கள். ஆதார் கார்டு, பிறப்புச் சான்றிதழ் காட்டச் சொல்லி அதட்டுகிறார்கள். இது இன்னும் நடக்கவில்லை, ஆனால் அரசுகள் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால், இது போன்ற பல சம்பவங்கள் நிச்சயம் நடக்கும்.

Related Articles

Related image1
Tech உலகில் அடுத்த ட்ரெண்ட்: வேற லெவல் டிசைனில் வெளியாகும் நத்திங் போன் 4a பிங்க் வேரியண்ட்!
Related image2
மாதம் ரூ.1.6 லட்சம் வரை சம்பளம்! மத்திய அரசின் SAIL நிறுவனத்தில் வேலை! BE/B.Tech முடித்தோர் கவனிக்க!
34
செயற்கை நுண்ணறிவை அரசுகள் கட்டுப்படுத்துமா?
Image Credit : Getty

செயற்கை நுண்ணறிவை அரசுகள் கட்டுப்படுத்துமா?

ஒரு யூடியூப் சேனல் தொடங்க எந்த அனுமதியும் தேவையில்லை. ஆனால், அதன் பெயரில் மக்களை பிளாக்மெயில் செய்தால் கேட்பதற்கு ஆள் இல்லை. இந்த நிலையில், அரசுகள் AI-ஐ கட்டுப்படுத்தும் என எப்படி நம்புவது? சமீபத்தில், சீனாவில் இருந்து வாங்கிய ஒரு ரோபோ நாயை, தங்களது சொந்தக் கண்டுபிடிப்பு என்று ஒரு தனியார் பல்கலைக்கழகம் கூறி விளம்பரம் செய்தது. ஒரு தனிநபர் அல்ல, ஒரு பல்கலைக்கழகமே இப்படிச் செய்கிறது! 2050-க்குள் பல வேலைகள் இருக்காது என்கிறார்கள். அப்படி வேலை இல்லையென்றால் மக்கள் எப்படி வாழ்வார்கள்? AI எல்லா வேலையையும் செய்தால், மக்களுக்கு வருமானம் இருக்காது. அப்போது பொருட்களை யார் வாங்குவார்கள்? ரோபோக்களைத் தயாரித்த கோடீஸ்வரர்கள் இலவசமாகப் பொருட்களைக் கொடுப்பார்களா? இதெல்லாம் சாதாரண மக்களுக்குப் புரியாது.
44
டெக்னாலஜி மனிதனைப் பயன்படுத்தினால் அதோகதிதான்..!
Image Credit : Getty

டெக்னாலஜி மனிதனைப் பயன்படுத்தினால் அதோகதிதான்..!

மீடியாவில் வரும் பல செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை. தங்கம் விலை சிறிது குறைந்தால், 'குப்பையென சரிந்தது' என தலைப்பு வைப்பார்கள். பல உண்மைகள் நமக்குத் தெரிவதே இல்லை. மீடியாவில் வருவதை நம்பி வாழ்கிறோம். சிறிய விஷயங்களிலேயே இப்படி என்றால், உலகப் பணக்காரர்களின் AI தொழில்நுட்பத்தை அரசுகள் மக்கள் நலனுக்காகக் கட்டுப்படுத்தும் என எதிர்பார்ப்பது பேராசை. மனிதன்தான் டெக்னாலஜியைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், டெக்னாலஜி நம்மைப் பயன்படுத்த ஆரம்பித்தால்? அது அதோகதிதான். இப்போது எத்தனை பேர் மொபைல் போனைப் பயன்படுத்துகிறார்கள்? எத்தனை பேரை மொபைல் போன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது? இதுதான் வித்தியாசம்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தொழில்நுட்பம்
தொழில்நுட்பச் செய்திகள்
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
லேப்டாப் பேட்டரி 10 வருடம் உழைக்க வேண்டுமா? சார்ஜிங் செய்யும்போது செய்யவே கூடாத 'அந்த' 5 காரியங்கள்!
Recommended image2
ஒரே ஒரு வீடியோ.. 100 மொழிகளில் டப்பிங்! உங்கள் யூடியூப் வருமானத்தை பலமடங்கு உயர்த்த இதோ எளிய வழி!
Recommended image3
கோடை வெயிலில் ஏசி பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு! உங்கள் பர்ஸ் காலியாகாமல் இருக்க இந்த 5 விஷயங்களை உடனே செய்யுங்கள்!
Related Stories
Recommended image1
Tech உலகில் அடுத்த ட்ரெண்ட்: வேற லெவல் டிசைனில் வெளியாகும் நத்திங் போன் 4a பிங்க் வேரியண்ட்!
Recommended image2
மாதம் ரூ.1.6 லட்சம் வரை சம்பளம்! மத்திய அரசின் SAIL நிறுவனத்தில் வேலை! BE/B.Tech முடித்தோர் கவனிக்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved