- Home
- டெக்னாலஜி
- டெக்னோவின் இந்த போன் வந்தா ஜியோ, ஏர்டெல்லுக்கே ஷாக்தான்.. AI, நோ-நெட்வொர்க் காலிங் அதிரடி!
டெக்னோவின் இந்த போன் வந்தா ஜியோ, ஏர்டெல்லுக்கே ஷாக்தான்.. AI, நோ-நெட்வொர்க் காலிங் அதிரடி!
டெக்னோ நிறுவனத்தின் மிக மெல்லிய 5G ஸ்மார்ட்போனான Pova Slim 5G செப்டம்பர் 4-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. AI அம்சங்கள், பலமொழி வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் நெட்வொர்க் இல்லாமலே அழைக்கும் வசதியுடன் வருகிறது.

உலகின் மெல்லிய 5G போன் செப். 4-ல் அறிமுகம்!
சமீபகாலமாக இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய வர்த்தகத்தை ஏற்படுத்தி வரும் டெக்னோ நிறுவனம், தனது அடுத்த தலைசிறந்த படைப்பை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. செப்டம்பர் 4-ஆம் தேதி, டெக்னோவின் மிக மெல்லிய 5G ஸ்மார்ட்போன் ஆன Pova Slim 5G இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரத்தியேகமாக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.
கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும் டிஸ்ப்ளே
டெக்னோ போவா ஸ்லிம் 5G வெறும் 7.45 மிமீ தடிமன் கொண்டது, இதுவே டெக்னோ பிராண்டின் மிக மெல்லிய 5G ஸ்மார்ட்போன் ஆகும். இது வளைந்த டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள் மற்றும் நடுவில் பஞ்ச்-ஹோல் கேமராவுடன் வருகிறது. பின்பக்கம், அழகிய பில்-வடிவ இரட்டை கேமரா மாட்யூல் மற்றும் எல்இடி ஃபிளாஷ் உள்ளது. இது ஒரு பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது. மேலும், இந்த சாதனம் IP64 மதிப்பீட்டைக் கொண்டிருப்பதால், தூசி மற்றும் நீர் எதிர்ப்புத் திறன் கொண்டது.
AI அம்சங்கள் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட்
இந்த ஃபோனின் சிறப்பம்சங்களில் ஒன்று, 'எலா AI வாய்ஸ் அசிஸ்டன்ட்'. இது தமிழ், இந்தி, மராத்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளை ஆதரிக்கிறது. மேலும், இது AI ரைட்டிங் அசிஸ்டன்ட் மற்றும் 'சர்க்கிள் டூ சர்ச்' போன்ற வசதிகளையும் வழங்குகிறது, இது பயனர்களின் வேலைத்திறனை மேம்படுத்துகிறது.
நெட்வொர்க் இல்லாமலே பேசலாம்!
டெக்னோ நிறுவனம் இதில் 'VoWiFi Dual Pass' என்ற புதிய அம்சத்தைச் சேர்த்துள்ளது. இந்த வசதி மூலம், நெட்வொர்க் இல்லாத அல்லது குறைந்த சிக்னல் இருக்கும் பகுதிகளிலும் கூட அழைப்புகளை மேற்கொள்ள முடியும். மேலும், வேகமான டேட்டா வசதிக்காக 5G++ இணைப்பையும் இந்த போன் ஆதரிக்கிறது.
சந்தையை அதிரவைக்குமா?
சமீபத்தில், டெக்னோ நிறுவனம் போவா 7, போவா 7 ப்ரோ மற்றும் போவா கர்வ் போன்ற மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. போவா கர்வ் மாடலில் MediaTek Dimensity 7300 அல்டிமேட் ப்ராசசர், 64MP டூயல் கேமரா, 5500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருந்தன. வரவிருக்கும் போவா ஸ்லிம் 5G, அதன் மெல்லிய வடிவமைப்பு, AI-ஆற்றல் கொண்ட அம்சங்கள் மற்றும் நெட்வொர்க் இல்லாத அழைப்பு வசதியுடன் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.