MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • ஒன்பிளஸ் முதல் சியோமி வரை... அலப்பறை கிளப்பப் போகும் அக்டோபர் ஸ்மார்ட்போன் ரிலீஸ்!

ஒன்பிளஸ் முதல் சியோமி வரை... அலப்பறை கிளப்பப் போகும் அக்டோபர் ஸ்மார்ட்போன் ரிலீஸ்!

செப்டம்பர் மாதத்தில் ஐபோன் 16 சீரிஸ், விவோ டி3 அல்ட்ரா மற்றும் மோட்டோரோலா ரேசர் 50 ஆகியவற்றின் வெளியீடுகளைத் தொடர்ந்து, ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அடுத்த ரவுண்டுக்குத் தயாராக உள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்படும் சில ஸ்மார்ட்போன்கள் பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
SG Balan
Published : Oct 03 2024, 04:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Oneplus 13

Oneplus 13

செப்டம்பர் மாதத்தில் ஐபோன் 16 சீரிஸ், விவோ டி3 அல்ட்ரா மற்றும் மோட்டோரோலா ரேசர் 50 ஆகியவற்றின் வெளியீடுகளைத் தொடர்ந்து, ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அடுத்த ரவுண்டுக்குத் தயாராக உள்ளன. அக்டோபர் 2024 இல் Xiaomi, OnePlus உள்பட பல முன்னணி பிராண்டுகளின் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் ரிலீஸ் ஆக உள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்படும் சில ஸ்மார்ட்போன்கள் பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்

25
iQOO 13

iQOO 13

ஒன்பிளஸ் தனது OnePlus 13 மொபைலை இந்த அக்டோபரில் சீனாவில் வெளியிட உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மொபைல் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 4 செயலியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கொண்டுவரும். OnePlus 13 100W வேகமான சார்ஜிங் அம்சத்துடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. நீடித்து உழைக்கும் பேட்டரி, குறைவான நேரத்தில் விரைவான சார்ஜிங் போன்ற வசதிகளும் இருக்கும்.

35
Samsung Galaxy S24 FE

Samsung Galaxy S24 FE

விவோவின் துணை பிராண்டான iQOO தனது பிரீமியம் iQOO 13 சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்த அக்டோபரில் சீனாவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. OnePlus 13 போலவே, iQOO 13 மொபைலும் Snapdragon 8 Gen 4 செயலி மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீட்டுடன் 16ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக இந்த மொபைல் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 6.7 இன்ச் 2K AMOLED டிஸ்ப்ளே, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,150mAh பேட்டரி ஆகியவையும் iQOO 13 மொபைலில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

45
Lava Agni 3

Lava Agni 3

சாம்சங் கேலக்ஸி சீரிஸில் Galaxy S24 FE ஸ்மார்ட்போன் Fan Edition இந்தியாவில் இன்று (அக்டோபர் 3) முதல் விற்பனைக்கு வருகிறது. Galaxy S24 FE மொபைல் Exynos 2400e சிப்செட் மூலம் இயங்கும். 4,700mAh பேட்டரியைக் கொண்ட இதில், 8 ஜிபி வரை ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கும். இது சாம்சங்கின் ஃபிளாக்ஷிப் மாடல்களுக்கு மாற்றாகவும் மிகவும் மலிவானதாகவும் உள்ளது. அதே நேரத்தில் வலுவான செயல்திறனையும் வழங்குகிறது.

55
Infinix Zero Flip

Infinix Zero Flip

இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டான லாவா நாளை (அக்டோபர் 4) Lava Agni 3 ஸ்மார்ட்போனை வெளியிடத் தயாராக உள்ளது. இந்த பட்ஜெட் மொபைல் ஃபோனில் 6.78-இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே 120Hz வரை புதுப்பிப்பு வீதத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது MediaTek Dimensity 7300 சிப்செட் மூலம் இயங்கும். இது CMF ஃபோன் 1 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஆகியவற்றில் உள்ள அதே சிப்செட்தான். இந்த போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரியுடன் வரலாம். லாவா அக்னி 3, 64MP முதன்மை சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் உள்ளிட்ட குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். 66W வேகமான சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஃபினிக்ஸ் (Infinix) நிறுவனத்தின் முதல் ஃபிளிப் போனான Infinix Zero Flip அக்டோபர் மாதம் இந்திய சந்தைக்குக் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மொபைல் சில நாடுகளில் ஏற்கெனவே அறிமுகமாகியுள்ளது. 6.9-inch LTPO AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்ட இதில் 3.64-இன்ச் AMOLED கவர் டிஸ்ப்ளேயும் உள்ளது. ஜீரோ ஃபிளிப் மீடியாடெக் டைமென்சிட்டி 8020 பிராசஸர் உள்ளது. இது மாலி G77 MC9 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், வழங்குகிறது. 50MP முதன்மை சென்சார் மற்றும் பின்புறத்தில் 50 MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, 32 எம்பி முன்பக்க கேமரா உள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved