MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • தரைமட்ட விலைக்கு இறங்கி வந்த சாம்சங் கேலக்ஸி S23! பிளிப்கார்ட்டில் ரூ.50,000 தள்ளுபடி!

தரைமட்ட விலைக்கு இறங்கி வந்த சாம்சங் கேலக்ஸி S23! பிளிப்கார்ட்டில் ரூ.50,000 தள்ளுபடி!

Samsung Galaxy S23 256GB Flipkart Discount: சாம்சங் கேலக்ஸி S23 256GB மீண்டும் ஒரு பெரிய விலை குறைப்பைக் கண்டுள்ளது. இந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போனின் விலை பிளிப்கார்ட் (Flipkart) இணையதளத்தில் ரூ.50,000 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர மற்ற சலுகைகளின் மூலமாகவும் குறிப்பிடத்தக்க தொகையைச் சேமிக்கலாம்.

1 Min read
SG Balan
Published : Mar 09 2025, 12:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Samsung Galaxy S23

Samsung Galaxy S23

இப்போது நீங்கள் ஒரு உயர் ரக ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், பட்ஜெட்டைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ப்ரீமியம் ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி S23 (Samsung Galaxy S23) 256GB ஸ்டோரேஜ் மாடல் இப்போது நியாயமான விலையில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) ஈகாமர்ஸ் தளத்தில் இந்த மொபைல் தற்போது மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.

25
Samsung Galaxy S23 Flipkart offer

Samsung Galaxy S23 Flipkart offer

ஆன்லைன் சந்தையில் Samsung Galaxy S23 256GB-யின் உண்மையான விலை தோராயமாக ரூ. 1 லட்சம் என்றாலும், அதன் விலை சமீபத்தில் கணிசமாகக் குறைந்துள்ளது. சக்திவாய்ந்த கேமரா, சிறந்த பிராசஸர் மற்றும் AI செயல்பாடுகள் கொண்ட மொபைலை குறைவான விலையில் வாங்க சிறந்த வாய்ப்பு காத்திருக்கிறது.

35
Samsung Galaxy S23 Rs.50,000 discount

Samsung Galaxy S23 Rs.50,000 discount

Samsung Galaxy S23 256GB பொதுவாக ரூ.95,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இப்போது நீங்கள் அதை ரூ.50,000 வரை குறைவான விலையில் வாங்கலாம். Flipkart அதன் வாடிக்கையாளர்களுக்கு 56% தள்ளுபடியை வழங்குகிறது. இந்தத் தள்ளுபடியின் விளைவாக மொபைலின் விலை இப்போது ரூ.41,999 ஆகக் குறைந்துள்ளது.

45
Samsung Galaxy S23 Flipkart cashback offers

Samsung Galaxy S23 Flipkart cashback offers

வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட்டின் வங்கி மற்றும் எக்ஸ்சேஜ் சலுகைகள் மூலம் இன்னும் அதிக அளவு பணத்தைச் சேமிக்கும் வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளலாம். பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் தரும் சலுகையுடன் கூடுதலாக, 5% கேஷ்பேக்கைப் பெறலாம். இது தவிர, ஐடிஎஃப்சி வங்கி கார்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் ரூ.750 வரை சேமிக்கலாம்.

55
Samsung Galaxy S23 Flipkart exchange offer

Samsung Galaxy S23 Flipkart exchange offer

எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்தி Samsung Galaxy S23 256GB மொபைலை வாங்கினார், ரூ.39,150 வரை சேமிக்க முடியும். இருப்பினும், உங்கள் பழைய மொபைலின் செயல்பாடு மற்றும் நிலையைப் பொறுத்து உங்களுக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும் என முடிவுசெய்யப்படும். இந்த வகையில் ரூ.15,000 சேமித்தால்கூட இந்தப் பிரீமியம் ஸ்மார்ட்போனை ரூ.26,999க்கு வாங்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved