MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • வருடம் முழுவதும் ஒரே ரீசார்ஜ் போதும்! ஜியோவின் டேட்டா இல்லாத பட்ஜெட் பிளான்!

வருடம் முழுவதும் ஒரே ரீசார்ஜ் போதும்! ஜியோவின் டேட்டா இல்லாத பட்ஜெட் பிளான்!

Jio plan without data: சில நாட்களுக்கு முன்பு, அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் டேட்டா இல்லாத ரீசார்ஜ் திட்டங்களை வழங்க வேண்டும் என்று TRAI அறிவுறுத்தியிருந்தது. இதனால் டேட்டாவைப் பயன்படுத்தாத பயனர்கள் பயனடைய முடியும். இந்த விதிக்குப் பிறகு, ஜியோ வாய்ஸ் கால் வசதியை மட்டும் வழங்கும் இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

1 Min read
Author : SG Balan
| Updated : Feb 23 2025, 08:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Reliance Jio plans without data

Reliance Jio plans without data

ஜியோவின் இந்த திட்டம் போன் கால் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் போதும், டேட்டா தேவையில்லை  என்று கருதம் பயனர்களுக்கும் ஏற்றது. ரூ.458 பிளான் 84 நாட்கள் செல்லுபடியாகும். ரூ.1958 பிளான் 365 நாட்கள் செல்லுபடியாகும். ஜியோவின் இந்த இரண்டு திட்டங்களிலும் பயனர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். இந்த திட்டங்களைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொள்வோம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Jio 458 plan for 84 days

Jio 458 plan for 84 days

ஜியோவின் புதிய ரூ.458 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த திட்டத்தில், பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் 1000 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கும். இது தவிர, ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி போன்ற செயலிகளை இலவசமாகப் பயன்படுத்தலாம். இந்த திட்டம் குறிப்பாக போன் கால் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே பயன்படுத்தும் பயனர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், இந்தியா முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் இலவச ரோமிங் வசதி வழங்கப்படுகிறது.

34
Jio 1958 plan for 365 days

Jio 1958 plan for 365 days

ஜியோவின் புதிய ரூ.1958 ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் நீண்ட வேலிடிட்டி கொண்ட இந்தத் திட்டத்தில், பயனர்கள் இந்தியா முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிட்டட் போன் கால்களை பேசலாம். 3600 இலவச எஸ்எம்எஸ்களும் இலவச தேசிய ரோமிங்கும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி போன்ற செயலிகளுக்கான இலவச சந்தாவுடன் வருகிறது. இதனால் பயனர்கள் பொழுதுபோக்கையும் முழுமையாக அனுபவிக்க முடியும்.

44
Discontinued Jio plans

Discontinued Jio plans

ஜியோ தற்போது அதன் பழைய ரீசார்ஜ் திட்டங்களை பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. ரூ.479 மற்றும் ரூ.1899 ரீசார்ஜ் திட்டங்கள் இப்போது கிடைக்காது. ரூ.1899 திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டியில் 24 GB டேட்டாவுடன் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ்களை இலவசமாக வழங்கியது. அதே நேரத்தில் ரூ.479 திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டியில் 6GB டேட்டாவையும் இலவச வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ்களையும் வழங்கியது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ரிலையன்ஸ் ஜியோ
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Camera Phones: ரூ.30,000 பட்ஜெட்டில் 200MP கேமரா! இந்த போன்கள்ல போட்டோ எடுத்தா லைக்ஸ் குவியும்..!
Recommended image2
Jio Recharge Refund: தப்பான நம்பருக்கு ரீசார்ஜ் பண்ணிட்டீங்களா? டென்ஷன் இல்லை... ஜியோ தரும் சூப்பர் ரீஃபண்ட் வசதி!
Recommended image3
Vi 99 plan validity: விஸ்வரூபம் எடுக்கும் Vi: ரூ.99 ரீசார்ஜில் இவ்வளவு மாற்றங்களா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved