MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • பிஎஸ்என்எல் 4ஜி குறித்து குட் நியூஸ்! 1 லட்சம் 4G டவர்கள்! வெளியான முக்கிய அப்டேட்!

பிஎஸ்என்எல் 4ஜி குறித்து குட் நியூஸ்! 1 லட்சம் 4G டவர்கள்! வெளியான முக்கிய அப்டேட்!

பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியா முழுவதும் 93,450 4G டவர்களை நிறுவியுள்ளது. உள்நாட்டு 4ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட ஐந்தாவது நாடாக இந்தியா திகழ்கிறது என்று மத்திய அரசு பெருமையுடன் தெரிவித்துள்ளது.

2 Min read
Author : Rayar r
Published : May 27 2025, 11:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
BSNL Installed 93450 4G towers
Image Credit : Indian Tech & Infra

BSNL Installed 93450 4G towers

நாட்டின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு லட்சம் 4ஜி டவர்கள் அமைக்கும் இலக்கை நோக்கிச் செல்லும் பிஎஸ்என்எல், இதுவரை 93,450 டவர்களை நிறுவியுள்ளதாக மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த டவர்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
93,450 4ஜி டவர்களை நிறுவிய பிஎஸ்என்எல்
Image Credit : X

93,450 4ஜி டவர்களை நிறுவிய பிஎஸ்என்எல்

இது தொடர்பாக இந்திய மொபைல் காங்கிரஸ் 2025 தொடக்க விழாவில் ஜோதிராதித்ய சிந்தியா “நாங்கள் 93,450 4ஜி டவர்களை நிறுவியுள்ளோம். இன்னும் செல்ல வேண்டிய தூரம் இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். ஆனாலும், இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்” என்றார். 

சி-டாட், பிஎஸ்என்எல், தேஜஸ் நெட்வொர்க்ஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஆகியவை இணைந்து பிஎஸ்என்எல்லுக்கான 4ஜி டவர்களை நிறுவி வருகின்றன. 22 மாதங்களில் நாட்டின் முதல் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க்கை இந்தக் கூட்டமைப்பு உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Related image1
BSNL: ஒரு வருஷம் ரீசார்ஜ் தேவையில்லை! பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!
Related image2
BSNL வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்! 2 ரீசார்ஜ் திட்டங்களின் விலையை குறைத்த பிஎஸ்என்எல்!
34
4ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட 5வது நாடு இந்தியா
Image Credit : google

4ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட 5வது நாடு இந்தியா

உள்நாட்டு 4ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட ஐந்தாவது நாடாக இந்தியா திகழ்கிறது என்றும் அமைச்சர் அமைச்சர் குறிப்பிட்டார். சீனா (ஹூவாய், இசட்இடி), பின்லாந்து (நோக்கியா), சுவீடன் (எரிக்சன்), தென்கொரியா (சாம்சங்) ஆகியவை உள்நாட்டு 4ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கிய மற்ற நான்கு நாடுகளாகும். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தலைமையிலான கூட்டமைப்பு, பிஎஸ்என்எல்லுக்கான 4ஜி நெட்வொர்க்கை நாடு முழுவதும் நிறுவி வருகிறது.

1 லட்சம் 4ஜி டவர்கள் நிறுவ பிஎஸ்என்எல் இலக்கு

ரூ.19,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ், TCS மேற்பார்வையில், சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஆஃப் டெலிமேடிக்ஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் துணை நிறுவனமான தேஜஸ் நெட்வொர்க்ஸ் ஆகியவை பிஎஸ்என்எல்லின் 4ஜி விரிவாக்கத்தில் பங்கேற்றுள்ளன. நாடு முழுவதும் ஒரு லட்சம் 4ஜி டவர்களை பிஎஸ்என்எல்லுக்காக நிறுவுவதை இந்தக் கூட்டமைப்பு இலக்காகக் கொண்டுள்ளது.

44
ரூ.2,903 கோடி வழங்கிய மத்திய அரசு
Image Credit : Social Media

ரூ.2,903 கோடி வழங்கிய மத்திய அரசு

18,685 இடங்களில் 4ஜி மொபைல் நெட்வொர்க்கை நிறுவுதல் மற்றும் பராமரிப்புக்காக, ரூ.2,903 கோடி மதிப்பிலான முன்பணம் கொள்முதல் ஆணையை (APO) பிஎஸ்என்எல் சமீபத்தில் TCS-க்கு வழங்கியது. 

2023-ல், TCS தலைமையிலான கூட்டமைப்பு, இந்தியா முழுவதும் 4ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்காக பிஎஸ்என்எல்லிடமிருந்து ரூ.15,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான முன்பணம் கொள்முதல் ஆணையைப் பெற்றிருந்தது. 

அந்த முக்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தற்போதைய புதிய APO ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)
பி.எஸ்.என்.எல் டேட்டா திட்டம்
பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் திட்டம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Camera Phones: ரூ.30,000 பட்ஜெட்டில் 200MP கேமரா! இந்த போன்கள்ல போட்டோ எடுத்தா லைக்ஸ் குவியும்..!
Recommended image2
Jio Recharge Refund: தப்பான நம்பருக்கு ரீசார்ஜ் பண்ணிட்டீங்களா? டென்ஷன் இல்லை... ஜியோ தரும் சூப்பர் ரீஃபண்ட் வசதி!
Recommended image3
Vi 99 plan validity: விஸ்வரூபம் எடுக்கும் Vi: ரூ.99 ரீசார்ஜில் இவ்வளவு மாற்றங்களா?
Related Stories
Recommended image1
BSNL: ஒரு வருஷம் ரீசார்ஜ் தேவையில்லை! பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!
Recommended image2
BSNL வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்! 2 ரீசார்ஜ் திட்டங்களின் விலையை குறைத்த பிஎஸ்என்எல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved