- Home
- டெக்னாலஜி
- தொலைபேசி
- BSNL : சுதந்திர தினத்திற்காக வெறும் 1 ரூபாய்க்கு சிம்... அன்லிமிடெட் ஆஃபர்களை அள்ளிவீசிய பி.எஸ்.என்.எல்
BSNL : சுதந்திர தினத்திற்காக வெறும் 1 ரூபாய்க்கு சிம்... அன்லிமிடெட் ஆஃபர்களை அள்ளிவீசிய பி.எஸ்.என்.எல்
BSNL Freedom Plan : 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பி.எஸ்.என்.எல் 'ஃப்ரீடம் பிளான் 2.0'-ஐ புதிய கஸ்டமர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் இலவச கால்ஸ், டேட்டா, எஸ்.எம்.எஸ் கிடைக்கும்.

BSNL Freedom Plan 2.O
பி.எஸ்.என்.எல் நிறுவனம் மீண்டும் ஒரு ஸ்பெஷல் புரொமோஷனல் ஆஃபருடன் களமிறங்கியுள்ளது. 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதிதாக பி.எஸ்.என்.எல் சிம் வாங்கும் கஸ்டமர்களுக்காக 'ஃப்ரீடம் பிளான் 2.0' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிளானின் சிறப்பம்சங்கள் என்ன? என்னென்ன ஆஃபர்கள் இருக்குனு வாங்க பார்க்கலாம்.
Jio, Airtel-க்கு டஃப் கொடுக்கும் BSNL..! ரூ.999-க்கு 200Mbps + 5000GB + OTT சேவைகள்
'ஃப்ரீடம் பிளான் 2.0'-ல் என்ன ஸ்பெஷல்?
இந்த புரொமோஷனல் ஆஃபரில், வழக்கமாக முதல் ரீசார்ஜுக்கு செலுத்த வேண்டிய தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது, 24 நாட்கள் வேலிடிட்டி வரை கஸ்டமர்கள் எந்தவித கூடுதல் ரீசார்ஜும் செய்யாமல் இலவசமாக கால்ஸ், எஸ்.எம்.எஸ் மற்றும் டேட்டாவைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், இந்த சிறப்புச் சலுகை புதிதாக பி.எஸ்.என்.எல் சிம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே பி.எஸ்.என்.எல் சிம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த ஆஃபர் கிடையாது.
இந்த ஃப்ரீடம் பிளானில் 24 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி கிடைக்கிறது. இதன் மூலம் இந்தியா முழுவதும் எந்த நெட்வொர்க்குக்கும் எல்லையில்லாமல் பேசலாம். டேட்டா விஷயத்துக்கு வந்தால், தினமும் 1 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா லிமிட் முடிந்த பிறகு இன்டர்நெட் வேகம் குறைந்துவிடும். அதோடு, தினமும் 100 எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதியும் இதில் உள்ளது.
Cheapest Plan: இந்தியாவின் மலிவான போஸ்ட்பெய்ட் பிளான்.. வெறும் ரூ.199-க்கு இவ்வளவு வசதிகள் இருக்கா
போன வருஷம் 'ஆசாதி கா பிளான்' கொடுத்த பி.எஸ்.என்.எல்
பி.எஸ்.என்.எல் கடந்த சுதந்திர தினத்தின்போது 'ஆசாதி கா பிளான்' என்ற பெயரில் ரூ.1-க்கு ஒரு சிறப்பு ஆஃபரை வழங்கியது. அப்போது அந்த பிளானுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் வசதி இருந்தது. தற்போதைய 'ஃப்ரீடம் பிளான் 2.0'-ல் வேலிடிட்டி 24 நாட்களாகவும், டேட்டா 1 ஜிபி ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 எஸ்.எம்.எஸ் போன்ற நன்மைகள் தொடர்கின்றன.
இந்த ஃப்ரீடம் ஆஃபருடன், பி.எஸ்.என்.எல் தனது தற்போதைய வாடிக்கையாளர்களுக்கும் ஒரு குட் நியூஸ் கொடுத்துள்ளது. ரூ.2,399 வருடாந்திர பிளானில் கூடுதல் வேலிடிட்டியை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 12, 2026-க்குள் இந்த பிளானில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 365 நாட்களுக்குப் பதிலாக 412 நாட்கள் (கூடுதலாக 47 நாட்கள்) வேலிடிட்டி கிடைக்கும். இந்த பிளானில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ் மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் நன்மைகள் உள்ளன.
ஆஃபரின் பின்னணி என்ன?
பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ள இந்த இரண்டு சிறப்பு ஆஃபர்களும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும். ரூ.1 'ஃப்ரீடம் பிளான்' மற்றும் ரூ.2,399 பிளானுக்கான கூடுதல் வேலிடிட்டி ஆஃபர் இரண்டுமே செப்டம்பர் 12ந் தேதி வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். தனது 4ஜி சேவையை விரிவுபடுத்தி வரும் இந்த நேரத்தில், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க பி.எஸ்.என்.எல் இந்த ஆஃபர்களைக் கொண்டு வந்துள்ளது.
மொத்தத்தில், பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ள இந்த அதிரடி பிளான்கள், அதன் போட்டி நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு நிச்சயம் ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

