MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • ரெட்மீ முதல் சாம்சங் வரை... ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் சூப்பர் 5ஜி ஸ்மார்ட்போன்!

ரெட்மீ முதல் சாம்சங் வரை... ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் சூப்பர் 5ஜி ஸ்மார்ட்போன்!

ஒவ்வொரு நாளும் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி வருகின்றன. மேம்பட்ட வசதிகள், பிரீமியம் வடிவமைப்பு மற்றும் நீடித்த பேட்டரி ஆயுள் ஆகிய முக்கிய அம்சங்கள் அடிப்படையில் ஒரு மொபைலைத் தேர்ந்தெடுக்கலாம். இத்தொகுப்பில் ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் சிறந்த ஸ்மார்ட்போன்களைப் பார்க்கலாம்.

2 Min read
Author : SG Balan
Published : Nov 14 2023, 05:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Redmi Note 11T

Redmi Note 11T

Redmi Note 11T (ரெட்மீ நோட் 11T) ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் FHD+Dot டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது மீடியாடெக் ஆக்டா கோர் பிராசஸர் கொண்டது. 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் இருக்கிறது. 50MP முதன்மை கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 16 MP செல்ஃபி கேமரா ஆகியவை உள்ளன. 5000mAh பேட்டரியுடன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Itel S23+

Itel S23+

Itel S23+ (ஐடெல் S23+) ஸ்மார்ட்போனில் 6.78-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேயுடன் கொரில்லா கிளாஸ் இருக்கிறது. 8 GB RAM மற்றும் 256 GB ஸ்டோரேஜை உள்ளது. யூனிசாக் T616 ஆக்டா-கோர் பிரசஸர், 50MP AI டபுள் கேமரா, 32MP செல்ஃபி கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் 5000mAh பேட்டரி ஆகியவை இதன் சிறப்பு அம்சங்கள்.

35
Samsung Galaxy M14

Samsung Galaxy M14

Samsung Galaxy M14 (சாம்சங் கேலக்ஸி M14) ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. எக்ஸினோஸ் ஆக்டா கோர் பிராசஸருடன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்குகிறது. 2 MP டெப்த் சென்சார், 2 MP மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றுடன் ட்ரிபிள் கேமரா, 13 MP செல்ஃபி கேமரா இருக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6000mAh மெகா பேட்டரி இருக்கிறது.

45
Realme Narzo 60

Realme Narzo 60

Realme Narzo 60 (ரியல்மீ நார்ஸோ 60) ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 64MP முதன்மை கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்ட இரட்டை கேமராவுடன் வருகிறது. முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது. மீடியாடெக் பிராசஸர், 8GB RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. 5000mAh பேட்டரிக்கு 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

55
Techno Pova 5 Pro

Techno Pova 5 Pro

Techno Pova 5 Pro (டெக்னோ போவா 5 ப்ரோ) ஸ்மார்ட்போனில் 6.78-இன்ச் FHD+Dot டிஸ்ப்ளே, 8 GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் இருக்கிறது. டைமென்சிட்டி 6080 பிராசஸருடன் 50MP டூயல் கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா உள்ளது. 10W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 15 நிமிடங்களில் 50 சதவிகிதம் வரை சார்ஜ் செய்துவிடும் அளவு விரைவான சார்ஜிங் திறன் பெற்றது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Camera Phones: ரூ.30,000 பட்ஜெட்டில் 200MP கேமரா! இந்த போன்கள்ல போட்டோ எடுத்தா லைக்ஸ் குவியும்..!
Recommended image2
Jio Recharge Refund: தப்பான நம்பருக்கு ரீசார்ஜ் பண்ணிட்டீங்களா? டென்ஷன் இல்லை... ஜியோ தரும் சூப்பர் ரீஃபண்ட் வசதி!
Recommended image3
Vi 99 plan validity: விஸ்வரூபம் எடுக்கும் Vi: ரூ.99 ரீசார்ஜில் இவ்வளவு மாற்றங்களா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved