- Home
- டெக்னாலஜி
- காதுகளுக்கு விருந்து.. பாக்கெட்டுக்கு சேவிங்ஸ்! ரூ.13,000 இயர்பட்ஸ் இலவசம்.. சென்ஹைசர் மாஸ் ஆஃபர்!
காதுகளுக்கு விருந்து.. பாக்கெட்டுக்கு சேவிங்ஸ்! ரூ.13,000 இயர்பட்ஸ் இலவசம்.. சென்ஹைசர் மாஸ் ஆஃபர்!
Sennheiser சென்ஹைசர் HDB 630 வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்! முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.12,990 மதிப்புள்ள இயர்பட்ஸ் இலவசம். முழு விவரம் உள்ளே.

headphone இசை பிரியர்களுக்கு ஒரு ஜாக்பாட்! ரூ.13,000 மதிப்புள்ள இயர்பட்ஸ் இலவசம் - சென்ஹைசர் அதிரடி!
இசையை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல், அதைத் துல்லியமாக ரசிக்கும் 'ஆடியோஃபைல்' (Audiophile) கூட்டத்திற்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல ஆடியோ நிறுவனமான சென்ஹைசர் (Sennheiser), தனது அதிநவீன HDB 630 வயர்லெஸ் ஹெட்போனை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் அதனுடன் வழங்கப்படும் இலவசப் பரிசுதான் தற்போது டெக் உலகின் ஹாட் டாக்!
விலை கொஞ்சம் அதிகம்.. ஆனால் ஆஃபர் பயங்கரம்!
இந்த HDB 630 ஹெட்போனின் விலை ரூ.44,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்னது 45 ஆயிரமா? என்று நீங்கள் மலைக்கலாம். ஆனால், இதை முன்கூட்டியே பதிவு செய்யும் (Pre-book) வாடிக்கையாளர்களுக்கு, ரூ.12,990 மதிப்புள்ள 'Accentum Open' இயர்பட்ஸை இலவசமாக வழங்குவதாகச் சென்ஹைசர் அறிவித்துள்ளது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, ஒரு பிரீமியம் ஹெட்போன் வாங்கினால், ஒரு உயர்தர இயர்பட்ஸ் இலவசம்!
வயர் இல்லாமலே 'ஸ்டுடியோ' எஃபெக்ட்!
பொதுவாக ப்ளூடூத் ஹெட்போன்களில் துல்லியமான ஒலி (Sound Quality) கிடைக்காது என்பது இசை நிபுணர்களின் கருத்து. ஆனால், அந்தக் குறையைப் போக்கவே இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடன் BTD 700 Hi-Res Bluetooth Dongle என்ற ஒரு கருவி இலவசமாக வருகிறது. இதை உங்கள் போன் அல்லது கணினியில் இணைப்பதன் மூலம், எந்தவித இழப்பும் இன்றி (Lossless Audio), 24-bit/96kHz தரத்தில் பாடல்களைக் கேட்க முடியும். சுருக்கமாகச் சொன்னால், ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பாடல் எப்படி ஒலிக்குமோ, அதே தரத்தை வயர் இல்லாமலே உங்கள் காதுகளில் கொண்டு சேர்க்கும்.
இயற்கையான இசை அனுபவம்
இந்த ஹெட்போன் அதிகப்படியான பாஸ் (Bass) அல்லது ட்ரெபிள் (Treble) இல்லாமல், இசையை அது பதிவு செய்யப்பட்டபடியே இயற்கையாக ஒலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காது மெத்தைகள் மற்றும் வடிவமைப்பு, நீண்ட நேரம் அணிந்தாலும் காது வலிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் ஒரு புதிய பாய்ச்சல்!
"வயர்லெஸ் ஹெட்போன்களால் துல்லியமான இசையைத் தர முடியாது என்ற பிம்பத்தை உடைப்பதே எங்கள் நோக்கம்," என்கிறார் சோனோவா கன்ஸ்யூமர் ஹியரிங் பொது மேலாளர் சாஹில் குமார். ஜேபிஎல் (JBL) போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இந்தப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சென்ஹைசரின் இந்த வரவு இசை பிரியர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

