MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • பட்ஜெட் போன்களிலும் கைவைத்த சாம்சங்! கிடுகிடுவென உயர்ந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் புதிய விலை பட்டியல்!

பட்ஜெட் போன்களிலும் கைவைத்த சாம்சங்! கிடுகிடுவென உயர்ந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் புதிய விலை பட்டியல்!

Samsung சாம்சங் கேலக்ஸி A மற்றும் F சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. வாங்கும் முன் புதிய விலை விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Feb 26 2026, 10:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Samsung
Image Credit : Gemini

Samsung

உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் சாம்சங்கின் பிரம்மாண்டமான 'கேலக்ஸி அன்பேக்டு 2026' (Galaxy Unpacked 2026) நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இந்த விலை உயர்வு குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. சாம்சங் நிறுவனம் தனது பட்ஜெட் மற்றும் மிட்-ரேஞ்ச் பிரிவில் பட்டையைக் கிளப்பி வரும் கேலக்ஸி ஏ (Galaxy A) மற்றும் கேலக்ஸி எஃப் (Galaxy F) சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை சத்தமில்லாமல் உயர்த்தியுள்ளதாக பிரபல டிப்ஸ்டரான (Tipster) AN Leaks தனது X (ட்விட்டர்) தளத்தில் ஆவணங்களுடன் பதிவிட்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
கேலக்ஸி அன்பேக்டு (Galaxy Unpacked) ஈவென்ட்டுக்கு முன்பு ஒரு ஷாக்!
Image Credit : 9to5google

கேலக்ஸி அன்பேக்டு (Galaxy Unpacked) ஈவென்ட்டுக்கு முன்பு ஒரு ஷாக்!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், ஆஃப்லைன் ரீடெய்ல் கடைகள் மற்றும் ஆன்லைன் விற்பனை தளங்களில் புதிய விலைவாசி விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர வர்க்க மக்களின் ஃபேவரிட் மாடல்களான இவற்றின் விலை உயர்வு ஸ்மார்ட்போன் சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

36
எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு விலை ஏற்றம்?
Image Credit : Samsung India

எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு விலை ஏற்றம்?

கசிந்த ஆவணங்களின்படி, பிரீமியம் அம்சங்களை மலிவு விலையில் வழங்கும் 'ஏ' சீரிஸ் போன்களில் கணிசமான ஏற்றம் காணப்படுகிறது.

• Galaxy A56 5G: இதன் 8GB + 256GB வேரியண்ட் விலை ரூ.43,999-ல் இருந்து ரூ.44,999 ஆகவும் (ரூ.1,000 உயர்வு), 12GB வேரியண்ட் ரூ.48,999 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

• Galaxy A36 5G: இதன் 8GB மாடல் தற்போது ரூ.36,999-க்கும், 12GB மாடல் ரூ.40,499-க்கும் விற்பனையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

46
'எஃப்' சீரிஸிலும் விலை மாற்றம்
Image Credit : Google

'எஃப்' சீரிஸிலும் விலை மாற்றம்

இதேபோல், பட்ஜெட் விலையில் பட்டையக் கிளப்பும் 'எஃப்' சீரிஸிலும் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Galaxy F17 5G மாடலின் 4GB மற்றும் 6GB ரேம் வேரியண்ட்களின் விலை தலா ரூ.1,000 உயர்த்தப்பட்டு முறையே ரூ.16,499 மற்றும் ரூ.17,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் டாப்-எண்ட் மாடலான 8GB ரேம் போனின் விலை ரூ.1,500 உயர்த்தப்பட்டு ரூ.19,999 ஆக மாறியுள்ளது.

56
விலை உயர்வு இதோடு நிற்கப்போவதில்லை!
Image Credit : Google

விலை உயர்வு இதோடு நிற்கப்போவதில்லை!

சாம்சங் நிறுவனத்தின் இந்த விலை உயர்வு நடவடிக்கை புதிதல்ல. கடந்த ஜனவரி மாதத்திலேயே A56, A36 மற்றும் F17 ஆகிய மாடல்களுக்கு ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, இந்த விலை உயர்வுப் புயல் இதோடு ஓயப்போவதில்லை என்றே தெரிகிறது.

66
விரைவில்
Image Credit : Google

விரைவில்

 விரைவில் வெளியாகவுள்ள சாம்சங்கின் ஃபிளாக்ஷிப் மாடல்களான Galaxy Z Fold 7, Z Flip 7 மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் Galaxy S25 சீரிஸ் மாடல்களின் விலையும் அதிரடியாக உயர வாய்ப்புள்ளதாக தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, நீங்கள் சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் இருந்தால், விலை மேலும் உயர்வதற்கு முன்பாகவே உங்களுக்குப் பிடித்த மாடலைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம்!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Heater: தினமும் ஹீட்டர் பயன்படுத்துறீங்களா? இந்த 7 விஷயங்களை செக் பண்ணுங்க… இல்லனா ஆபத்து..!
Recommended image2
அன்று C2H, இன்று ஓடிடி... 11 ஆண்டுகளுக்கு பின் வெளியான சேரனின் 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படம் எப்படி இருக்கு?
Recommended image3
10,100mAh பேட்டரி, 200MP கேமரா: டூயல் ஃபேன் கூலிங், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் களமிறங்கிய ஹானர் வின் 2 ஸ்மார்ட்போன்!
Related Stories
Recommended image1
Samsung S26 Leak: சும்மா மிரட்டலா இருக்கே! வெளியானது சாம்சங் S26 சீரிஸ் டிசைன் - ஆப்பிளுக்கே டஃப் கொடுக்கும் போல!
Recommended image2
முந்துங்கள்! LG, Samsung, Xiaomi Smart TV வெறும் ரூ.14,000-க்கு கீழ்! Amazon, Flipkart-இல் பம்பர் தள்ளுபடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved