- Home
- டெக்னாலஜி
- Reliance Jio: வாடிக்கையாளர்களின் பேவரிட் பிளானை மீண்டும் கொண்டு வந்த ஜியோ! முழு விவரம்!
Reliance Jio: வாடிக்கையாளர்களின் பேவரிட் பிளானை மீண்டும் கொண்டு வந்த ஜியோ! முழு விவரம்!
வாடிக்கையாளர்களின் பேவரிட் பிளானை ஜியோ மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. அது என்ன பிளான்? என்னென்ன நன்மைகள்? என்பது குறித்து பார்க்கலாம்.

Reliance Jio: வாடிக்கையாளர்களின் பேவரிட் பிளானை மீண்டும் கொண்டு வந்த ஜியோ! முழு விவரம்!
இந்திய தொலைத்தொடர்பு துறையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து முதலிடம் பிடித்து அசத்தி வருகிறது. ஜியோ மலிவு விலை திட்டங்களை கொண்டு வருவதே இதற்கு காரணமாகும். இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ அதன் ப்ரீபெய்ட் பிளான்களில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அதாவது ரூ.448 ரீசார்ஜ் தொகுப்பின் விலையைக் குறைத்து ரூ.189 ரீசார்ஜ் பேக்கை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
ஜியோ ரூ.189 திட்டம்
28 நாட்கள் செல்லுபடியாகும் தன்மை, 2 ஜிபி டேட்டா நன்மைகளை வழங்கி வந்த இந்த திட்டத்தை ஜியோ தற்காலிகமாக நிறுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த பிளான் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. "மலிவு விலை பேக்குகள்" பிரிவில், இந்த பேக் பயனர்களுக்கு 300 எஸ்எம்எஸ், எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 2 ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது (டேட்டா உச்சவரம்பு எட்டும்போது வேகம் 64kbps ஆகக் குறைகிறது). இந்த பேக் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
மேலும் இந்த பிளானில் ஜியோடிவி, ஜியோசினிமா ஜியோ சேவைகளான ஜியோடிவி, ஜியோசினிமா (பிரீமியம் உள்ளடக்கம் தவிர்த்து) மற்றும் ஜியோகிளவுட் சேமிப்பகத்திற்கான அணுகல் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கும்.
ஜியோ ரீசார்ஜ் பிளான்கள்
ஜியோ ரூ.445 திட்டம்
இதேபோல் ஜியோ நிறுவனம் ரூ.448 விலையில் டேட்டா + வாய்ஸ் பிளான் ஒன்றை செயல்படுத்தி வந்தது. இந்நிலையில், இந்த திட்டத்தின் விலையை சிறிது குறைத்துள்ளது. அதாவது ரூ.448 பிளான் ரூ.445 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த ரூ.445 திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். இந்த பேக் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். தினமும் அதிக டேட்டா, கால்ஸ் சலுகையை பெற விரும்புபவர்களுக்கு இந்த பிளான் நல்ல தேர்வாக இருக்கும்.
ஜியோ பட்ஜெட் பிளான்கள்
ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஆகிய செல்போன் ரீசார்ஜ் நிறுவனங்கள் கால்ஸ் வசதி, எஸ்எம்எஸ் வசதி மற்றும் டேட்டா ஆகியவற்றை கொண்ட தொகுப்பு ரீசார்ஜ் திட்டங்களை தான் செயல்படுத்தி வந்தன. கால்ஸ் வசதி மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளுக்கு என்று தனியாக திட்டங்கள் ஏதும் இல்லை.
இதனால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்க்கு ஒரு தனித்துவமான ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என செல்போன் ரீசார்ஜ் நிறுவனங்களுக்கு கடந்த மாதம் அதிரடியாக உத்தரவிட்டது. இதன்பிறகே ஜியோ அதிக மலிவு விலை திட்டங்களை கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மொபைல் ரீசார்ஜ் செய்யாமலேயே கால் பண்ணலாம்; சூப்பர் ட்ரிக்ஸ்; இதை ஃபாலோ பண்ணுங்க!