MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • "யாரும் பயப்பட வேண்டாம்.." ஏஐ-யால் வேலை போகுமா? ஆர்பிஐ சொன்ன அதிரடி பதில்!

"யாரும் பயப்பட வேண்டாம்.." ஏஐ-யால் வேலை போகுமா? ஆர்பிஐ சொன்ன அதிரடி பதில்!

Jobs ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை போகாது, அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என ஆர்பிஐ துணை ஆளுநர் பூனம் குப்தா தகவல். முழு விவரம் உள்ளே. ஆர்பிஐ சொன்ன அதிரடி பதில்!

2 Min read
Author : Suresh Manthiram
Published : Feb 08 2026, 07:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Jobs
Image Credit : Gemini

Jobs

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், இதனால் பலரது வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்சம் உலகம் முழுவதும் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) துணை ஆளுநர் பூனம் குப்தா (Poonam Gupta) ஒரு நம்பிக்கையூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். ஏஐ தொழில்நுட்பம் வேலைகளைப் பறிப்பதற்குப் பதிலாக, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
வேலைவாய்ப்பில் பாதிப்பு இல்லை - ஆர்பிஐ ஆய்வு
Image Credit : Getty

வேலைவாய்ப்பில் பாதிப்பு இல்லை - ஆர்பிஐ ஆய்வு

மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பூனம் குப்தா, ஏஐ தொழில்நுட்பம் வேலைவாய்ப்பில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆர்பிஐ சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியதாகக் கூறினார். அந்த ஆய்வின் முடிவில், ஏஐ தொழில்நுட்பத்தால் தற்போது வரை வேலைவாய்ப்பில் எந்தவித எதிர்மறையான தாக்கமும் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. உற்பத்தித் திறன் (Productivity) அதிகரித்துள்ள அதே வேளையில், வேலைவாய்ப்புகளும் நேர்மறையான திசையிலேயே செல்கின்றன.

Related Articles

Related image1
நான் அவள் இல்லை... காட்டுத்தீ போல் பரவிய ஏஐ போட்டோ - கடும் கோபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு
Related image2
அரசு வேலை கிடைக்கலனா டென்ஷன் வேண்டாம்… இந்த jobs-ல சம்பளம் நல்லா இருக்கும்
35
மாற்றம் தவிர்க்க முடியாதது, ஆனால் வளர்ச்சி நிச்சயம்
Image Credit : stockPhoto

மாற்றம் தவிர்க்க முடியாதது, ஆனால் வளர்ச்சி நிச்சயம்

புதிய தொழில்நுட்பங்கள் வரும்போது வேலை சந்தையில் சில மாற்றங்கள் (Churning effect) ஏற்படுவது இயல்பு என்று பூனம் குப்தா விளக்கினார். சில பழைய வேலைகள் இல்லாமலே போகலாம், ஆனால் அதற்கு ஈடாக பல புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்குமே தவிர குறையாது என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

45
திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம்
Image Credit : AI Perplexity

திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம்

வேலை சந்தையில் ஏற்படும் இந்த மாற்றத்தைச் சமாளிப்பதே தற்போதுள்ள முக்கிய சவால் என்று அவர் சுட்டிக்காட்டினார். அதாவது, ஒரு துறையில் வேலை குறையும் போது, வளர்ந்து வரும் மற்றொரு துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் காலத்திற்கு ஏற்ப தங்கள் திறன்களை (Skills) வளர்த்துக்கொண்டு, புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

55
டிஜிட்டல் மோசடிக்கு இழப்பீடு - கூடுதல் தகவல்
Image Credit : Getty

டிஜிட்டல் மோசடிக்கு இழப்பீடு - கூடுதல் தகவல்

இதற்கிடையில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மோசடிகளால் பாதிக்கப்படும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 25,000 வரை இழப்பீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் ஆர்பிஐ நேற்று வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இழப்பீடு 'டெபாசிட்டர் எஜுகேஷன் அண்ட் அவேர்னஸ் ஃபண்ட்' (DEA Fund) மூலம் வழங்கப்படும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Realme Watch S5 : ஒருமுறை சார்ஜ் போட்டா 20 நாள் தாங்கும்.. ரியல்மி வாட்ச் S5 விலை எவ்வளவு? அம்சங்கள் இதோ
Recommended image2
50x Zoom: 50x ஜூம், 16GB ரேம்.. கேமரா கிங் வருது.. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+ பட்டையை கிளப்புது
Recommended image3
Google Pixel 10 Price Cut: ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் தள்ளுபடி.. கூகுள் பிக்சல் 10 விலை அதிரடி குறைப்பு.. உடனே ஆர்டர் போடுங்க!!
Related Stories
Recommended image1
நான் அவள் இல்லை... காட்டுத்தீ போல் பரவிய ஏஐ போட்டோ - கடும் கோபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு
Recommended image2
அரசு வேலை கிடைக்கலனா டென்ஷன் வேண்டாம்… இந்த jobs-ல சம்பளம் நல்லா இருக்கும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved