- Home
- டெக்னாலஜி
- லேப்டாப்பை மிஞ்சப் போகும் Poco Pad M1.. 12-inch 120Hz டிஸ்ப்ளே, 12,000mAh பேட்டரி.. பக்கா மாஸ்
லேப்டாப்பை மிஞ்சப் போகும் Poco Pad M1.. 12-inch 120Hz டிஸ்ப்ளே, 12,000mAh பேட்டரி.. பக்கா மாஸ்
போக்கோ நிறுவனம் விரைவில் போக்கோ பேட் எம்1 என்ற புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த டேப்லெட் 12 இன்ச் டிஸ்ப்ளே, 12,000mAh பேட்டரி, மற்றும் Snapdragon 7s Gen 4 பிராசசர் போன்ற சக்திவாய்ந்த அம்சங்களுடன் வரக்கூடும்.

போக்கோ பேட் எம்1 டேப்லட்
போக்கோ விரைவில் ஒரு சக்திவாய்ந்த டேப்லட்டைக் கொண்டு வரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போக்கோ பேட் எம்1 (Poco Pad M1) என்ற பெயரில் வருகிறது என கூறப்படும் இந்த டேப்லட், 12 இன்ச் பெரிய டிஸ்ப்ளே, 12,000mAh பவர் பேட்டரி, மற்றும் வலுவான பிராசசர் போன்றவை அம்சங்களுடன் சந்தையை கலக்கப் போகிறது. இந்த மாடல் உண்மையில் Redmi Pad 2 Pro-வின் ரீபிராண்டட் பதிப்பு ஆக இருக்கலாம் என லீக்குகள் கூறுகின்றன.
டிஸ்ப்ளே மற்றும் விலை விவரங்கள்
பிரபல டிப்ஸ்டர் சுதன்ஷு அம்போரே வெளியிட்ட தகவலின்படி, போக்கோ பேட் எம்1-ன் ஐரோப்பிய விலை EUR 349 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.36,000). இது 8GB RAM + 256GB ஸ்டோஜ் மாடலின் விலை என குறிப்பிடப்பட்டுள்ளது. டேப்லட்டில் 12.1-அங்குல LCD, 1600×2560 பிக்சல்கள், 120Hz ரிப்ரெஷ் ரேட் ஆகியன வழங்கப்படலாம். மெல்லிய 8MP பின்புற கேமரா, 8MP முன்சிறை கேமரா ஆகியவை வீடியோ கால் மற்றும் வழக்கமான புகைப்படங்களுக்கு போதுமானவை.
பிராசசர், சாப்ட்வேர், ஸ்டோரேஜ்
இந்த டேப்லட் Snapdragon 7s Gen 4 சிப் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. LPDDR4X ரேம், UFS 2.2 ஸ்டோரேஜ், மற்றும் microSD ஸ்லாட் மூலமாக ஸ்டோரேஜ் விரிவாக்கமும் கிடைக்கும். சாப்ட்வேர் பக்கம், Android 15 அடிப்படையில் உருவாக்கப்பட்ட HyperOS 2 வழங்கப்படும். மல்டிமீடியாவை ரசிக்கும் பயனர்களுக்காக quad Speakers கூட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெரிய பேட்டரி மற்றும் வேகமான சார்ஜிங்
12,000mAh எனும் மிகப்பெரிய பேட்டரி மற்றும் 33W வேக சார்ஜிங்குடன் வருகிறது. கனெக்டிவிட்டியில் Wi-Fi 6, Bluetooth 5.4, USB 2.0 போன்ற சமீபத்திய அம்சங்கள் வழங்கப்படலாம். எடை சுமார் 610 கிராம், தடிமன் 7.5mm மட்டுமே என லீக்குகள் தெரிவிக்கின்றன. TDRA பதிவுகளிலும் இது Wi-Fi-மட்டும் மாடலாகத் தெரிகிறது. இதனால் போக்கோ பேட் எம்1 உண்மையில் Redmi Pad 2 Pro-வின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.