MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • அடடா! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே.. யூடியூப் வீடியோவை Background-ல் ஓடவிட செம ட்ரிக்!

அடடா! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே.. யூடியூப் வீடியோவை Background-ல் ஓடவிட செம ட்ரிக்!

YouTube யூடியூப் பிரீமியம் இல்லாமலேயே வீடியோக்களை Background-ல் ஓட விடுவது எப்படி? விளம்பரங்கள் தொல்லை இல்லாத Brave Browser ட்ரிக் இதோ! யூடியூப் வீடியோவை Background-ல் ஓடவிட செம ட்ரிக்!

1 Min read
Author : Suresh Manthiram
Published : Feb 10 2026, 08:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
YouTube
Image Credit : Gemini

YouTube

இன்று நம்மில் பலர் பாட்டு கேட்பதற்கும், வீடியோ பார்ப்பதற்கும் யூடியூப்பைத்தான் (YouTube) நம்பியிருக்கிறோம். ஆனால், அதில் ஒரு பெரிய குறை என்னவென்றால், வீடியோ ஓடிக்கொண்டிருக்கும்போது வேறொரு ஆப்பைத் திறந்தாலோ அல்லது ஸ்கிரீனை ஆஃப் செய்தாலோ வீடியோ நின்றுவிடும். "Background Play" வேண்டும் என்றால் காசு கொடுத்து 'YouTube Premium' வாங்க வேண்டும். ஆனால், இனி அந்த கவலை வேண்டாம்! ஒரு பைசா கூட செலவில்லாமல் இதைச் செய்ய ஒரு வழி இருக்கிறது.

25
Brave Browser - ஒரு வரப்பிரசாதம்
Image Credit : Getty

Brave Browser - ஒரு வரப்பிரசாதம்

கூகுள் குரோம் (Google Chrome) போல 'Brave Browser' என்றொரு இணைய உலாவி உள்ளது. இது பயனர்களின் தனியுரிமைக்கு (Privacy) அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. தற்போது இந்த பிரவுசர், யூடியூப் பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. இதன் மூலம் நீங்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல், யூடியூப் வீடியோக்களை Background-ல் ஓட விடலாம்.

Related Articles

Related image1
குறைந்த தர வீடியோக்களுக்கு குட்பை! SD-யை HD-ஆக மாற்ற YouTube-இன் AI சூப்பர் சக்தி!
Related image2
Now Playing
அவதூறு செய்திகளை வெளியிட்ட youtube சவுக்கு சங்கர் நாக்கு அறுபடும் ! கொந்தளித்த வீரலட்சுமி
35
எப்படி பயன்படுத்துவது?
Image Credit : Gemini

எப்படி பயன்படுத்துவது?

1. உங்கள் ஸ்மார்ட்போனில் (Android அல்லது iOS) 'Brave Browser' ஆப்பை டவுன்லோட் செய்யுங்கள்.

2. அதில் 'Settings' பகுதிக்குச் செல்லவும்.

3. அங்கு 'Media' என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்யவும்.

4. அதில் 'Background Play' என்பதை 'Enable' (ஆன்) செய்யவும்.

5. அவ்வளவுதான்! இனி நீங்கள் Brave Browser-ல் யூடியூப் வீடியோவை ஓடவிட்டுவிட்டு, தாராளமாக வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தலாம் அல்லது ஸ்கிரீனை ஆஃப் செய்துவிட்டு பாட்டு கேட்கலாம்.

45
விளம்பரத் தொல்லை இல்லை
Image Credit : Gemini

விளம்பரத் தொல்லை இல்லை

Brave Browser-ன் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இது தேவையற்ற விளம்பரங்களை (Ads) தானாகவே தடுத்துவிடும். யூடியூப் வீடியோக்களுக்கு நடுவே வரும் விளம்பரங்கள் இதில் வராது என்பதால், வீடியோ பார்க்கும் அனுபவம் இன்னும் சிறப்பாக இருக்கும்.

55
எவ்வளவு காலம் நீடிக்கும்?
Image Credit : Gemini

எவ்வளவு காலம் நீடிக்கும்?

யூடியூப் நிறுவனம் இதுபோன்ற மூன்றாம் தரப்பு பிரவுசர்களைத் தடுப்பதில் மும்முரமாக உள்ளது. ஆனால், Brave நிறுவனம் தொடர்ந்து இதற்குத் தீர்வு கண்டு வருகிறது. இப்போதைக்கு இது ஒரு சிறந்த மாற்றாக உள்ளது. முன்னர் 'JioSphere' என்ற பிரவுசரிலும் இந்த வசதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சத்தமே இல்லாமல் காற்றை சுத்தமாக்கும் மேஜிக் மெஷின்! QNET-ன் புதிய படைப்பு!
Recommended image2
ஐபோன் யூசர்களே உஷார்! வாய்ஸ் மெசேஜ் தானா அழியுதா? தடுப்பது எப்படி?
Recommended image3
வாட்ஸ்அப்பில் வருகிறது அசத்தலான வசதி: இனி உங்கள் ஸ்டேட்டஸை 'Close Friends' உடன் மட்டும் பகிரலாம்!
Related Stories
Recommended image1
குறைந்த தர வீடியோக்களுக்கு குட்பை! SD-யை HD-ஆக மாற்ற YouTube-இன் AI சூப்பர் சக்தி!
Recommended image2
Now Playing
அவதூறு செய்திகளை வெளியிட்ட youtube சவுக்கு சங்கர் நாக்கு அறுபடும் ! கொந்தளித்த வீரலட்சுமி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved