MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • சாம்சங், விவோ ஓரம்போங்க.. இந்த விலையில் 6500mAh பேட்டரியா? ஒப்போ செய்த சம்பவம்!

சாம்சங், விவோ ஓரம்போங்க.. இந்த விலையில் 6500mAh பேட்டரியா? ஒப்போ செய்த சம்பவம்!

Oppo Reno 15c ஒப்போ ரெனோ 15c ஸ்மார்ட்போன் 6500mAh பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் உடன் அறிமுகமாகியுள்ளது. விலை மற்றும் விவரம் உள்ளே.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Dec 15 2025, 07:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Oppo Reno 15c ஒப்போ
Image Credit : Gemini

Oppo Reno 15c ஒப்போ

ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென தனி இடம்பிடித்துள்ள ஒப்போ (Oppo) நிறுவனம், தனது ரெனோ சீரிஸில் புதிய வரவாக 'ஒப்போ ரெனோ 15c' (Oppo Reno 15c) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய மாடல்களை விட செயல்திறன், கேமரா மற்றும் பேட்டரி என அனைத்து விதத்திலும் இந்த போன் மெருகேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் பிரம்மாண்ட பேட்டரி மற்றும் சக்திவாய்ந்த பிராசஸர் பயனர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

விலை மற்றும் நிறங்கள்

தற்போதைக்கு சீனாவில் அறிமுகமாகியுள்ள இந்த போனின் விலை, இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.37,000-ல் (CNY 2,899) தொடங்குகிறது. இது 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் மாடலுக்கான விலையாகும். இதன் டாப் வேரியண்டான 12GB + 512GB மாடலின் விலை சுமார் ரூ.41,000 ஆக உள்ளது. அரோரா ப்ளூ, காலேஜ் ப்ளூ மற்றும் ஸ்டார்லைட் போ ஆகிய மூன்று கவர்ச்சிகரமான நிறங்களில் இது கிடைக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
டிஸ்பிளே மற்றும் செயல்திறன்
Image Credit : Oppo/X

டிஸ்பிளே மற்றும் செயல்திறன்

ஒப்போ ரெனோ 15c ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 (Android 16) அடிப்படையிலான ColorOS 16 இயங்குதளத்தில் செயல்படுகிறது. இது 6.59 இன்ச் ஃபுல் எச்டி+ AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. குவால்காமின் லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Snapdragon 7 Gen 4) சிப்செட் இதில் பொருத்தப்பட்டுள்ளது. கேமிங் மற்றும் மல்டிடாஸ்கிங் செய்வதற்கு ஏற்ற வகையில் அட்ரினோ 722 GPU மற்றும் 12GB வரை LPDDR5x ரேம் இதில் உள்ளது.

34
கேமரா: 50MP டூயல் சென்சார் மேஜிக்
Image Credit : X

கேமரா: 50MP டூயல் சென்சார் மேஜிக்

புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த போன் ஒரு வரப்பிரசாதம். இதன் பின்புறம் மூன்று கேமராக்கள் உள்ளன:

1. 50MP பிரதான கேமரா (OIS வசதியுடன்)

2. 50MP டெலிபோட்டோ கேமரா (OIS வசதியுடன்)

3. 8MP அல்ட்ரா-வைட் கேமரா

செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கத்தில் 50MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது தெளிவான புகைப்படங்கள் மற்றும் 4K வீடியோ கால்களுக்கு வழிவகுக்கும்.

44
பேட்டரி மற்றும் பாதுகாப்பு
Image Credit : Gemini

பேட்டரி மற்றும் பாதுகாப்பு

இந்த போனின் மிகப்பெரிய பலமே இதன் 6,500mAh பேட்டரிதான். இதனை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதுமட்டுமின்றி, இந்த போன் IP66, IP68 மற்றும் IP69 என மூன்று விதமான தரச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. இதன் மூலம் தூசி, தண்ணீர் மற்றும் அதிக அழுத்தத்தில் பீய்ச்சி அடிக்கப்படும் நீரிலிருந்தும் இந்த போன் பாதுகாக்கப்படும்.

இந்தியாவுக்கு வருமா?

ஒப்போ நிறுவனம் ரெனோ 15c மாடலின் இந்திய வெளியீடு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், ரெனோ சீரிஸ் போன்கள் வழக்கமாக இந்திய சந்தையில் நல்ல வரவேற்பைப் பெறுவதால், விரைவில் இதுவும் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வரும் பட்சத்தில், இது சாம்சங் மற்றும் ஒன்பிளஸ் போன்களுக்கு கடும் போட்டியாக அமையும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
பூமியை தாக்கப்போகும் சூரிய புயல்கள்: சூரியனின் 3D ரகசியத்தை உடைத்த ஆதித்யா-எல்1!
Recommended image2
200MP கேமரா, கிளாஸ் பாடி டிசைன்: லீக்கான ஒன்பிளஸ் டர்போ 7-ன் அசுரத்தனமான அம்சங்கள்!
Recommended image3
விண்ணில் இருந்து விழும் 1.5 டன் நாசா விண்கலம்: சென்னை, பெங்களூரு ஆபத்தா? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
Related Stories
Recommended image1
சார்ஜரை இனி தூக்கிப் போடுங்க! 6500mAh பேட்டரியுடன் வந்தாச்சு Oppo A6x - விலை இவ்ளோ கம்மியா?
Recommended image2
OPPO F31 சீரிஸ் 5G விமர்சனம்: வலுவான டிசைன், சிறந்த பாதுகாப்பு.. விலை ரூ.30 ஆயிரம் தான்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved