கொம்பன் இறங்கிட்டான்.. 120W + 50W காம்போ.. ஒன்பிளஸ் 15 செய்யப்போகும் தரமான சம்பவம்
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் Snapdragon 8 Elite Gen 5 சிப்செட், 7,300mAh பேட்டரி, மற்றும் 120W வேகமான சார்ஜிங் போன்ற சக்திவாய்ந்த அம்சங்களுடன் வருகிறது.

ஒன்பிளஸ் 15 வெளியீடு
பல மாதங்களாக வதந்திகள் பரவிய நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் தனது அடுத்தது தலைமுறை பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான OnePlus 15-ஐ சீனாவில் அக்டோபர் 2025-இல் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய மாடல் வடிவமைப்பு, செயல்திறன், மற்றும் பேட்டரி தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய மேம்பாடுகளுடன் வந்துள்ளது. குறிப்பாக 7,300mAh பேட்டரி, 120W வேக சார்ஜிங் மற்றும் Snapdragon 8 Elite Gen 5 சிப் செட் ஆகியவை இந்த ஆண்ட்ராய்டு உலகின் சக்திவாய்ந்த போன்களில் ஒன்றாக மாறுகின்றன.
விலை மற்றும் வகைகள்
சீனாவில் OnePlus 15 மாடல் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பேஸ் வெர்ஷன் CNY 3,999 (சுமார் ரூ.50,000) விலையில் அறிமுகமானது. அதற்கடுத்த மாடல்கள் ரூ.53,000 முதல் ரூ.67,000 வரையிலான விலைகளில் கிடைக்கும். அப்சல்யூட் பிளாக், மிஸ்டி பர்பிள், மற்றும் சாண்ட் டூன் நிறங்களில் போன் கிடைக்கும். இதில் Sand Dune மாடல் அதன் மெட்டே ஃபினிஷ் காரணமாக ரசிகர்களை கவரும்.
முக்கிய அம்சங்கள்
6.78 அங்குல 1.5K AMOLED LTPO டிஸ்ப்ளே, 165Hz ரிஃப்ரெஷ் ரேட் ஆகியவை சேர்ந்து கண்ணுக்கு இனிமையாகவும், கேமர்களுக்கு மென்மையான அனுபவத்தையும் வழங்கும். கேமரா பாகத்தில் 50MP மூன்று சென்சார் அமைப்பு, அதில் பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் மூலம் 3.5x ஆப்டிக்கல் ஜூம் வசதி உள்ளது. செல்ஃபி கேமரா 32MP ஆகும் மற்றும் 4K 60fps வீடியோ பதிவு செய்ய முடியும்.
சிப் மற்றும் பேட்டரி திறன்
போனில் உள்ள Snapdragon 8 Elite Gen 5 பிராசசர் மற்றும் 16GB RAM உடன் இணைந்து பல்டாஸ்கிங்கில் மின்னல் வேகத்தை வழங்குகிறது. 7,300mAh பெரிய பேட்டரி மற்றும் 120W Super Flash Charge, 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவை சில நிமிடங்களில் முழு சார்ஜ் கிடைக்கின்றன. இது இதுவரை வந்த ஒன்பிளஸ் போன்களில் மிகப்பெரிய பேட்டரியாகும்.
இந்திய வெளியீடு
இந்தியாவில் ஒன்பிளஸ் 15 நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. “சம்திங் ஸ்பெஷல் வரும் அக்டோபர் 29” என ஒன்பிளஸ் டீசர் வெளியிட்டுள்ளது. புதிய வடிவமைப்பு, நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் அதிவேக செயல்திறன் காரணமாக OnePlus 15 மீண்டும் ஒரு பிரீமியம் கில்லர் ஸ்மார்ட்போனாக மாற வாய்ப்பு உள்ளது.