MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • 95dB மைக், ட்ரான்ஸ்பேரன்ட் லுக்: ஆப்பிளுக்கு போட்டியாக நத்திங் இயர் 3 புரோ இயர்பட்ஸ்!

95dB மைக், ட்ரான்ஸ்பேரன்ட் லுக்: ஆப்பிளுக்கு போட்டியாக நத்திங் இயர் 3 புரோ இயர்பட்ஸ்!

லண்டனைச் சேர்ந்த பிரபல நத்திங் நிறுவனம், தனது புதிய ஃபிளாக்ஷிப் TWS இயர்பட்ஸான 'நத்திங் இயர் (3) புரோ' மாடலை அறிமுகம் செய்ய ஆயத்தமாகி வருகிறது. சூப்பர் மைக் வசதி, ஏஎன்சி சத்தக் குறைப்பு தொழில்நுட்பம், சிறப்பம்சங்கள் பற்றி பார்போம்.

2 Min read
Author : Kiruthickraj D
Published : Oct 27 2026, 05:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
நத்திங் இயர் 3 புரோ அறிமுகம்
Image Credit : X

நத்திங் இயர் 3 புரோ அறிமுகம்

சமீபத்தில் தனது சிஎம்எஃப் (CMF) துணை பிராண்ட் மூலம் சில குறிப்பிட்ட சந்தைகளில் புளூடூத் ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்திய பிறகு, லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட நத்திங் (Nothing) நிறுவனம், தனது முதன்மை ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்ஸ் வரிசையை விரிவுபடுத்தத் தயாராகி வருகிறது.

வாட்டர்/டிராகன் (Water/Dragon) வகை போகிமானைக் குறிக்கும் வகையில், நத்திங் நிறுவனத்தின் புகழ்பெற்ற 'டாட்-மேட்ரிக்ஸ்' (dot-matrix) டிசைனில் அமைந்த படம் ஒன்றை நிறுவனம் பகிர்ந்துள்ளது. இந்த டீசர் பதிவு மர்மமாக இருந்தாலும், முன்னதாகக் கசிந்த நத்திங் இயர் (3) புரோ [Nothing Ear (3) Pro] பற்றிய தகவல்களை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
நத்திங் இயர் (3) புரோ விவரங்கள்
Image Credit : X

நத்திங் இயர் (3) புரோ விவரங்கள்

நத்திங் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ கம்யூனிட்டி போரமில் 'கிங்ட்ரா' (Kingdra) போகிமானின் டாட்-மேட்ரிக்ஸ் சித்திரத்தைப் பகிர்ந்துள்ளது. இது இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் வழக்கமான விஷுவல் ஸ்டைலை ஒத்திருக்கிறது. அந்தப் படத்தில் விரைவில் வருகிறது என்ற வார்த்தைகளுடன், போகிமான் வரலாற்றில் குறிப்பிடப்படும் ஒரு வரியும் இடம்பெற்றுள்ளது. இது தனது ஆற்றலைச் சேகரிப்பதற்காகச் கடலின் ஆழமான அடிவாரத்தில் தூங்குகிறது.

அது விழித்தெழும்போது சூறாவளியை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இந்த டீசரில் இயர்பட்ஸ் என்ற வார்த்தையோ அல்லது அதன் தொழில்நுட்ப அம்சங்களோ நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், நத்திங் நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கு போகிமான் பெயர்களை உட்புற குறியீட்டுப் பெயர்களாக (Codenames)ப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, 'கிங்ட்ரா' என்பது ஒரு முக்கியமான தடயமாகப் பார்க்கப்படுகிறது.

34
சிறந்த எலெக்ட்ரானிக் இயர்பட்ஸ்
Image Credit : X

சிறந்த எலெக்ட்ரானிக் இயர்பட்ஸ்

செப்டம்பர் மாதத்தில் ரெடிட் (Reddit) பயனர் ஒருவர் நத்திங் வலைத்தளத்தில் தற்காலிகமாக வெளிவந்த சப்போர்ட் பக்கத்தைக் கண்டறிந்ததாகத் தெரிவித்திருந்தார். அதில் 'Nothing Ear (3) Pro' பற்றிய குறிப்புகள் இருந்தன. அது 25253 என்ற உட்புற அடையாள எண் மற்றும் 'Kingdra' என்ற குறியீட்டுப் பெயருடன் பட்டியலிடப்பட்டிருந்தது.

அந்தப் பக்கம் உடனடியாக அகற்றப்பட்டாலும், அதன் ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் பரவின. தற்போது வெளியாகியுள்ள புதிய டீசர், அந்த முந்தைய பட்டியலுடன் நேரடியாகத் தொடர்புடைதாக உள்ளது. ஏனெனில், இரண்டிலும் 'கிங்ட்ரா' என்ற ஒரே வகை போகிமான் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

44
நத்திங் இயர் (3) பின்னணி & அம்சங்கள்
Image Credit : X

நத்திங் இயர் (3) பின்னணி & அம்சங்கள்

முன்னதாக, நத்திங் நிறுவனம் தனது வழக்கமான நத்திங் இயர் (3) [Nothing Ear (3)] மாடலை செப்டம்பர் 2025-இல் அறிமுகப்படுத்தியது. இந்த இயர்பட்ஸ் நிறுவனத்தின் பிரபலமான வெளிப்படையான (Transparent) டிசைனைக் கொண்டுள்ளது. சூப்பர் மைக் வசதி: நத்திங் இயர் 3 கார்டிங் கேஸில் 'சூப்பர் மைக்' (Super Mic) என்ற புதிய வசதி உள்ளது. இது 95dB வரை சத்தத்தைக் குறைக்கும் என்றும், 'டாக்' (Talk) பட்டனைப் பயன்படுத்தி இதைச் செயல்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

நத்திங் ஓஎஸ் ஆதரவு கொண்ட போன்களில் வாய்ஸ் நோட்ஸ்களைப் பதிவு செய்து, 'Essential Space' உடன் தானாகவே டெக்ஸ்ட்டாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். ஏஎன்சி மற்றும் டிரைவர்கள்: இயர் 3 மாடலில் 45dB வரை சத்தத்தைத் தடுக்கும் ரியல்-டைம் அடாப்டிவ் ஏஎன்சி வசதி உள்ளது. இதில் 12mm டைனமிக் டிரைவர்கள் மேம்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

இணைப்பு வசதிகள்: புளூடூத் 5.4 மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட ஆடியோவிற்கான LDAC ஆதரவைக் கொண்டுள்ளது. கேமிங் மற்றும் வீடியோக்களுக்கு 120ms-க்கும் குறைவான லேட்டன்சியை (Low latency) வழங்குகிறது. ஆண்ட்ராய்டு (Fast Pair), விண்டோஸ் (Swift Pair) மற்றும் iOS சாதனங்களுடன் எளிதாக இணையும். பயனர்கள் 'Nothing X' ஆப் மூலம் கண்ட்ரோல்கள், Essential Space மற்றும் சாட்ஜிபிட்டி செயல்பாடுகளைத் தனிப்பயனாக்கிக் கொள்ள முடியும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

KD
Kiruthickraj D
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
வெறும் 8.49 மி.மீ தடிமன்... 7,000mAh ராட்சத பேட்டரி: களமிறங்கும் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ; முழு விவரம்!
Recommended image2
WhatsApp : வாட்ஸ்அப் மூலம் பணத்தை உருவும் நூதன மோசடி! இதை மட்டும் செஞ்சா உங்க பணம் காலி!
Recommended image3
ரூ.399 ஜியோவா? ரூ.499 ஏர்டெல்லா? வீட்டு வைஃபைக்கு எது பெஸ்ட் சாய்ஸ்? வேகம், முழு பில்லிங் கட்டணம், ஓடிடி ஆஃபர்ஸ் என்ன?
Related Stories
Recommended image1
ரூ.399 ஜியோவா? ரூ.499 ஏர்டெல்லா? வீட்டு வைஃபைக்கு எது பெஸ்ட் சாய்ஸ்? வேகம், முழு பில்லிங் கட்டணம், ஓடிடி ஆஃபர்ஸ் என்ன?
Recommended image2
WhatsApp : வாட்ஸ்அப் மூலம் பணத்தை உருவும் நூதன மோசடி! இதை மட்டும் செஞ்சா உங்க பணம் காலி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved