MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • டுவிட்டர் பணியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

டுவிட்டர் பணியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

டுவிட்டர் பணியாளர்கள் சிலர் வழக்கம் போல் பணிகளைத் தொடங்கினர், ஆனால் அவர்களது லேப்டாப், இமெயில்கள் தடை செய்யப்பட்டிருந்தன. அதன்பிறகு தான் அவர்களுக்கு விவரம் தெரியவந்தது. 

2 Min read
Dinesh TG
Published : Mar 01 2023, 11:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

கடந்தாண்டு நவம்பர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தில் பெருமளவிலான பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்பட்டனர். சிலர் எலான் மஸ்க்கின் நடவடிக்கை பிடிக்காமல் தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்தனர். 

அதன் பிறகு, எலோன் மஸ்க் இனி பணிநீக்கங்கள் இருக்காது என்று உறுதியளித்தார். ஆனால், அதன்பிறகும், ட்விட்டரில் பல சுற்று பணிநீக்கங்கள் நடைபெற்றனர். இதற்கு முன்பு சுமார் 7,500 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டிருந்த நிறுவனம் இப்போது வெறும் சுமார் 2,000 ஊழியர்களை மட்டுமே கொண்டுள்ளது.

இந்த நிலையில்,  இந்த வார இறுதியில் அடுத்த பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன, கிட்டத்தட்ட 200 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அந்த ஊழியர்களின் லேப்டாப் முடக்கப்பட்ட பிறகே  தாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்தனர்.  டுவிட்டர் நிறுவனம் தனது பணியாளர்களை 10 சதவீதம் குறைத்து தயாரிப்பு மேலாளர்கள், தரவு விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை பாதித்துள்ளது என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. பணமாக்குதல் உள்கட்டமைப்பு குழுவில் 30 பேர் இருந்த நிலையில், தற்போது வெறும் எட்டு பேராக குறைக்கப்பட்டது. 
 

23

ட்விட்டர் ஊழியர்கள் பணிநீக்கங்களைப் பற்றி எப்படிக் கண்டுபிடித்தார்கள்?

டுவிட்டர் பணிநீக்கம் குறித்து நியூயார்க் டைம்ஸுக்கு முதலில் கூறப்பட்டதாக தெரிகிறது. சனிக்கிழமை இரவு, சில முன்னாள் ட்விட்டர் ஊழியர்கள் தங்கள் ஆபீஸ் லேப்டாப்பை திறந்து, இமெயில் பார்க்க சென்றனர். ஆனால்,  லேப்டாப்பும் சரியாக இல்லை, இமெயிலும் திறக்க முடியவில்லை. அதன்பிறகு சக பணியாளர்கள், மேலதிகாரிகளிடம் விசாரித்த போது தான் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டறிந்தனர். 

மறுநாள் காலை, இன்னும் தங்கள் வேலையைத் தக்க வைத்துக் கொண்ட ஊழியர்கள், சிக்னலைப் பயன்படுத்தி நிறுவனத்தில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய முயன்றனர். அப்போது தான் அடுத்தக்கட்ட பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 

எலோன் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார்.. அதற்கு காரணம்..

33
Elon musk worlds richest person

Elon musk worlds richest person

எலோன் மஸ்க் பணக்காரர் பட்டத்தை மீண்டும் பெற்றார்
இதனிடையே, ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க், உலக பணக்காரர் என்ற பட்டத்தை மீண்டும் பெற்றுள்ளார். 2022 டிசம்பரில் லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட்  பணக்காரராக இருந்தார். அவரை முந்தி எலான் மஸ்க் மீண்டும் அரியணையைக் கைப்பற்றினார். டெஸ்லா பங்கு விலைகள் ஒரு பெரிய எழுச்சியைக் கண்டதால் மீண்டும் பணக்காரர் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

DT
Dinesh TG
Elon Musk

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆன்ட்ராய்டு போன் வைத்திருப்பவரா? பணத்தை ஆட்டைய போடுபவர்களுக்கு 'செக்'.. கூகுளின் மாஸ் திட்டம்!
Recommended image2
எலான் மஸ்க் வைத்த 'செக்'.. கூகுள், ChatGPT எல்லாம் காலி? பங்குச்சந்தையை கலக்கும் Grok 4.20!
Recommended image3
காசு கொடுத்தும் இந்த நிலைமையா? ChatGPT-ல் திடீர் விளம்பரம்.. கடுப்பான பயனர்கள்! OpenAI சொன்ன 'பகீர்' பதில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved