2 நாள் பேட்டரி, 50MP கேமரா, 4K வீடியோ.. ரூ.16,999-க்கு இப்படியொரு மொபைலா
மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ ஜி86 பவர் மாடலை ரூ.16,999-க்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சிறந்த டிஸ்ப்ளே, கேமரா, பேட்டரி மற்றும் ஆயுள் ஆகியவற்றுடன், பட்ஜெட் விலையில் சிறந்த தேர்வாக இது உள்ளது.

மோட்டோ G86 பவர் மொபைல்
ரக்ஷாபந்தனை முன்னிட்டு மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி86 பவர் (Moto G86 Power) மாடலை இந்தியாவில் ரூ.16,999 எனும் விலையில் வெளியிட்டுள்ளது. சிறந்த டிஸ்பிளே, பிரீமியம் கேமரா, புளூட் பேட்டரி, ரஃப் யூஸ்க்கு ஏற்ற ஆயுள் என பல முன்னணி அம்சங்களுடன் வந்துள்ள இந்த மொபைல், ரூ.20,000-க்கு கீழே கிடைக்கும் பட்ஜெட்டில் சிறந்ததொரு தேர்வாக இருக்கிறது.
சிறந்த pOLED டிஸ்ப்ளே
இந்த மொபைலில் 6.67 இன்ச் 1.5K Super HD pOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 120Hz ரிப்ரெஷ் ரேட், HDR10+ சப்போர்ட், 4,500 nits ப்ரைட்னஸ், Gorilla Glass 7i பாதுகாப்பு என மிக நவீன தொழில்நுட்பங்களுடன் வருகிறது.
வேகமான செயல்திறன்
MediaTek Dimensity 7400 சிப்செட், 8GB RAM (+RAM Boost), 128GB ஸ்டோரேஜ். Android 15 + Hello UI, 1 ஆண்டு OS அப்டேட், 3 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் உடன் வருகிறது.
50MP OIS கேமரா – 4K வீடியோ
மொபைலின் ஹைலைட்டாக இருக்கும் கேமரா, 50MP Sony LYTIA-600 OIS சென்சார் ஆகும். 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. அனைத்து லென்ஸ்களும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வழங்குகின்றன.
6,720mAh பேட்டரி – 2 நாட்கள் பயன்பாடு
6,720mAh பெரிய பேட்டரி, 33W TurboPower சார்ஜிங் சப்போர்ட் ஆனது டிராவலர்ஸ்க்கும் ஹெவி யூசர்ஸ்க்கும் உகந்ததாக இருக்கும் என்று அடித்துக் கூறலாம். IP68, IP69 வாட்டர்/டஸ்ட் ரெசிஸ்டன்ஸ், MIL-STD-810H மிலிட்டரி டியூரபிலிட்டி சான்றிதழ் வெளியில் பயணிக்கிறவர்கள் மற்றும் வேலைக்காக அதிகம் பயணிக்கும் யூசர்களுக்கேற்ப உழைக்கும்.