MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • 2 நாளைக்கு சார்ஜ் போட வேண்டாம்.. 7000mAh பேட்டரி + Sony 50MP கேமரா.. ஆர்டர் குவியப் போகுது

2 நாளைக்கு சார்ஜ் போட வேண்டாம்.. 7000mAh பேட்டரி + Sony 50MP கேமரா.. ஆர்டர் குவியப் போகுது

மோட்டோரோலா தனது புதிய Moto G57 Power மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது 7000mAh பேட்டரி, Sony LYT-600 50MP கேமரா, மற்றும் Snapdragon 6s Gen 4 சிப்செட் போன்ற சக்திவாய்ந்த அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வருகிறது.

2 Min read
Raghupati R
Published : Nov 19 2025, 11:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மோட்டோ ஜி57 பவர் மொபைல்
Image Credit : Google

மோட்டோ ஜி57 பவர் மொபைல்

ஹெவி கேமிங் செய்யும் பயனர்கள், மல்டிடாஸ்கிங், அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் என எல்லாருக்கும் மிகவும் பொருத்தமான ஒரு பட்ஜெட் போன் இந்தியாவுக்கு வரப்போகிறது. மோட்டோரோலா, தனது புதிய Moto G57 Power யை நவம்பர் 24ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. பெயருக்கு ஏற்றபடி பேட்டரி, கேமரா, செயலி எல்லாம் “பவர் பேக்” ஆக இருக்கும்.

இரண்டு நாள்

இந்த மொபைலின் மிகப்பெரிய ஹைலைட் இதன் 7000mAh பேட்டரி தான். இதை சார்ஜ் பண்ண மறந்தாலும் இரண்டு நாளைக்கு போதும். அதோடு 30W வேகமாக சார்ஜிங் ஆதரவு கொடுத்திருப்பதால் பெரிய பேட்டரி இருந்தாலும் வேகமாக சார்ஜ் ஆகும். கேமிங், யூடியூப், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எதையும் பேட்டரி குறையாமல் நீண்ட மணிநேரம் பயன்படுத்தலாம்.

23
மிகச் சிறந்த கேமரா சென்சார்
Image Credit : Google

மிகச் சிறந்த கேமரா சென்சார்

பொதுவாக பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் image quality கொஞ்சம் compromise ஆகிவிடும். ஆனால் Moto G57 Power-ல் Sony LYT-600 50MP சென்சார் இருப்பது இந்த விலையில் மிகப் பெரிய பலம். இதனுடன் 8MP ultra-wide lens மற்றும் 3-in-1 light sensor சேர்ந்து வரும். இதனால் daylight-ல் எடுத்த படங்கள் மிகவும் தெளிவாகவும், நிறங்கள் நச்சுன்னு இருக்கும் வகையிலும் கிடைக்கும். Selfie-க்காக 8MP முன் கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது. Skin tone இயற்கையாக வரும்படி சென்சார் tuning செய்யப்பட்டிருப்பதால் selfies மிக நேச்சுரலாக தோன்றும்.

Snapdragon 6s Gen 4

Moto G57 Power-ல் வரும் Snapdragon 6s Gen 4 chipset, இந்த செக்மெண்ட்டில் அதிரடி செயல்திறன் தரக்கூடிய செயலி ஆகும். மல்டிடாஸ்கிங், ஆன்லைன் வகுப்புகள், சமூக ஊடகங்கள், தினசரி பயன்பாடு அனைத்துமே லேசாகவும், ஸ்மூத்தாகவும் இயங்கும். மேலும் குளோபல் எடிஷன் போலவே இந்தியாவுக்கு வரக்கூடிய வேரியண்ட்டுக்கும் செயல்திறன் குறையாது என்று மோட்டோரோலா உறுதி செய்துள்ளது.

Related Articles

Related image1
இனி இந்த போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது! உங்க மொபைல் லிஸ்டில் இருக்கா.?
Related image2
என்னா ஸ்பீடு.. இந்தியாவின் சக்திவாய்ந்த மொபைல் வருது.. கடல்லயே இல்லையாம்!
33
விலை எவ்வளவு?
Image Credit : Google

விலை எவ்வளவு?

இந்திய சந்தை விலையை Motorola இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் Moto G67 Power விலை ரூ.15,999 இருப்பதை வைத்து பார்க்கும்போது, Moto G57 Power விலை ரூ.10,000 – ரூ.12,000 ரேஞ்சில் இருக்கும் என்று tech experts எதிர்பார்க்கிறார்கள். முதல் விற்பனை Flipkart-ல் மட்டும் இருக்கும். இதோடு மூன்று நிற ஆப்ஷன்களும் கிடைக்கும் என்று leaks தெரிவிக்கின்றன.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நகர்பேசி
நுட்பக் கருவி
தொழில்நுட்பம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
இன்டர்நெட் இல்லாத 220 கோடி மக்கள்: உலகின் கறுப்புப் பக்கம் இதுதான்! வெளியான ஐ.நா-வின் ஷாக் ரிப்போர்ட்!
Recommended image2
இதை மிஸ் பண்ணா வருத்தப்படுவீங்க! சுத்தமான ஆண்ட்ராய்டு.. சிறந்த கேமரா... Google Pixel 8a-க்கு ரூ.18,000 தள்ளுபடி!
Recommended image3
Meta-வால் ஷாக் ஆன ரீல்ஸ் திருடர்கள்! அசல் கண்டென்ட்-க்கு அங்கீகாரம்... காப்பிக்கு சங்கு! புதிய டூல் அறிமுகம்
Related Stories
Recommended image1
இனி இந்த போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது! உங்க மொபைல் லிஸ்டில் இருக்கா.?
Recommended image2
என்னா ஸ்பீடு.. இந்தியாவின் சக்திவாய்ந்த மொபைல் வருது.. கடல்லயே இல்லையாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved